இன்னும் கொஞ்ச நேரத்துல சொல்ல போறாங்க! குட்டி எலெக்ட்ரிக் காருக்காக இத்தன நாளா தவம் கிடந்ததே இதுக்காகதான்!
இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) எலெக்ட்ரிக் கார், கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போதைய நிலையில் இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை (Price) மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்ஜி மோட்டார் நிறுவனம் கோமெட் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலையை 7.98 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த சூழலில், எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரின் மற்ற வேரியண்ட்களின் விலைகள் நாளை (மே 5) அறிவிக்கப்படவுள்ளன.

இந்த தகவலை எம்ஜி மோட்டார் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் கார் மொத்தம் 3 வேரியண்ட்களில் கிடைக்கும். அவற்றின் பெயர்களும் நாளைதான் அறிவிக்கப்படவுள்ளன. அதே நேரத்தில் எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் கார் மொத்தம் 5 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும்.
அவை கேண்டி ஒயிட், அரோரா சில்வர், ஸ்டாரி பிளாக், ஸ்டாரி பிளாக் மேற்கூரையுடன் ஆப்பிள் க்ரின் மற்றும் ஸ்டாரி பிளாக் மேற்கூரையுடன் கேண்டி ஒயிட் ஆகியவை ஆகும். எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரின் அனைத்து வேரியண்ட்களிலும் 17.3 kWh பேட்டரி (Battery) தொகுப்புதான் பொருத்தப்பட்டிருக்கும்.

இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 230 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சிறப்பான ரேஞ்ச் (Range) என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம் இந்த எலெக்ட்ரிக் காரின் பவர் அவுட்புட் 41 பிஹெச்பி மற்றும் 110 என்எம் ஆக உள்ளது. எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரின் விலை குறைவாக இருந்தாலும், வசதிகளுக்கு (Features) பஞ்சமில்லை.
இதில், டேஷ்போர்டில் வழங்கப்பட்டுள்ள இரண்டு 10.25 இன்ச் திரைகள் முக்கியமானவை. இந்த இரண்டில் ஒன்று டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகவும், மற்றொன்று இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகவும் செயல்படும். இதுதவிர வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வசதியையும் இந்த எலெக்ட்ரிக் கார் பெற்றுள்ளது.
மேலும் பின் பகுதியில் 50:50 ஸ்பிளிட் இருக்கைகள், 2 ஏர்பேக்குகள், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் கேமரா, இபிடி உடன் ஏபிஎஸ் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்ற வசதிகளும் எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரில் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே இது நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இருக்கும்.
இந்திய சந்தையில் டாடா டியாகோ இவி மற்றும் சிட்ரோன் இசி3 ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு போட்டியாக எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய எலெக்ட்ரிக் காரை நாங்கள் ஏற்கனவே ஓட்டி பார்த்து விட்டோம். எங்கள் ரிவியூ செய்தியை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் நீங்கள் படிக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அளவில் சிறியதாக இருப்பதால், தினசரி நகரங்களில் பயன்படுத்துவதற்கு ஏற்ற எலெக்ட்ரிக் காராக எம்ஜி கோமெட் இவி திகழ்கிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர சாலைகளில் தினசரி கார் பயன்படுத்தியே ஆக வேண்டும், அது எலெக்ட்ரிக் காராகவும், விலை குறைவானதாகவும் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பவர்களுக்கு எம்ஜி கோமெட் இவி நல்ல ஆப்ஷன்.


Click it and Unblock the Notifications








