எம்ஜி கோமெட் இவி கார்ல இவ்வளவு புது விஷயங்கள் இருக்குதா? இதெல்லாம் எப்படி யோசிச்சாங்க?

எம்ஜி நிறுவனம் சமீபத்தில் தனது கோமெட் இவி என்ற சிறிய ரக எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியது. இந்த காரின் உள்ள சில சுவாரஸ்யமான விஷயங்கள பற்றி இங்கே விரிவாக காணலாம்.

ஸ்மார்ட் கீ: இந்த காருக்கு சாவி கிடையாது. அதற்கு பதிலாக ஸ்மார்ட் கீ மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி காரை லாக் மற்றும் அன்லாக் செய்யலாம். வழக்கமான சாவி முறை இந்த காரில் இல்லாமல் ரிமோட் என்டரி அம்சம் வழங்கப்பட்டுள்ளது.

MG Comet EV Interesting Features

ஸ்டார்ட் பட்டன் கிடையாது: பொதுவாக ரிமோட் வசதியுள்ள காரில் காரை ஸ்டார்ட் செய்ய ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் வழங்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த காரில் ஸ்டார்ட் பட்டன் என்ற அம்சமே கிடையாது. அதற்கு பதிலாக காரில் ஏறி அமர்ந்து பிரேக்கை 2 முறை மிதித்தால் போதும் கார் தானாக ஸ்டார்ட் ஆகிவிடும்.

ஸ்டாப் செய்வது எப்படி: ஸ்டார்ட் பட்டன் எப்படி இல்லையோ அதே போல ஸ்டாப் பட்டனும் கிடையாது. உண்மையில் சொல்லப்போனால் இந்த காரை நீங்கள் ஸ்டாப் செய்ய வேண்டிய தேவையே இல்லை. இந்த காரை நிறுத்திவிட்டு நீங்கள் வெளியே சென்று காரை லாக் செய்துவிட்டால் கார் தானாக ஸ்டாப் ஆகிவிடும்.

MG Comet EV Interesting Features

சென்டர் கன்சோல்: பொதுவாக கார்களில் முன்பக்கத்தில் டிரைவருக்கும் பயணிகளுக்கு இடையே சென்டர் கன்சோல் இருக்கும். இதில் கியர் நாப், ஸ்டேரேஜ் ஸ்பேஸ், செல்போன் சார்ஜ் செய்யும் இடம் உள்ளிட்டவை இருக்கும். இந்த காரில் அப்படி எதுவுமே கிடையாது. நீங்கள் டிரைவர் சீட்டிலிருந்து பயணிகள் சீட்டிற்கு தாராளமாக போய் வரலாம்.

ஹூக்: இந்த கார் சிட்டி பயன்பாட்டிற்கு ஏற்ற கார் என்பதால் பலர் கையில் சிறிய பைகளை எடுத்து செல்வார்கள். உதாரணமாக சூப்பர் மார்கெட் ஷாப்பிங் உள்ளிட்டவற்றிற்கு இந்த காரை பயன்படுத்துவார்கள். இந்த பைகளை தொங்க விட இந்த காரின் முன் சீட் பயணிகள் இருக்கை அருகே ஹூக் வழங்கப்பட்டுள்ளது. இது காரின் பிராக்டிகாலிட்டி வசதியை அதிகப்படுத்தியுள்ளது.

MG Comet EV Interesting Features

இன்ஸ்ட்ரூமென்டேஷன் ஆன்: இந்த காரில் சாவி கிடையாது, ஸ்டார்ட் பட்டன் கிடையாது, அப்படி என்றால் காரின் இன்ஸ்ட்ரூமென்டேஷன் எப்படி ஆன் ஆகும் என்ற கேள்வி எல்லோருக்கும் இருக்கும். இது ஆட்டோமெட்டிக்காக கார் ஆன் லாக் ஆகி கார் டிரைவர் சீட்டில் ஒரு நபர் அமர்ந்ததும் தானாக ஆன் ஆகிவிடும். இதற்கு எந்த விதமான இன்புட்டும் கொடுக்க வேண்டிய தேவையில்லை.

வேக கட்டுப்பாடு: பெரும்பாலான கார்களில் இல்லாத ஒரு வசதி இந்த எம்ஜி கோமெட் இவி காரில் இருக்கிறது. இந்த காரில் காரின் அதிகபட்ச வேகத்தை செட் செய்யும் ஆப்ஷன் இருக்கிறது. 30 கி.மீ வேகம் முதல் 80 கி.மீ வரை வேகத்தை செட் செய்து கொள்ள முடியும். இதன் தேவையை பொருத்து மாற்றிக்கொள்ளலாம்.

கீ ஷேரிங்: எம்ஜி நிறுவனம் அதன் ஸ்மார்ட்- கீ தொழிற்நுட்பத்தை இந்த சாவியை இரண்டு பேர் பகிர்ந்து கொள்ளுபடி ஆப்ஷன வழங்கியுள்ளது. வீட்டில் கணவன் மனைவி இருந்தால் இருவரும் தனித்தனியாக காரை எடுத்து செல்ல விரும்பினால் எடுத்து செல்லலாம். இந்த தொழிற்நுட்பம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

பூட் ஸ்பேஸ்: இந்த காரின் பூட் சிறியதாக தான் இருக்கிறது. இருந்தாலும் பின் வரிசை சீட்டை மடக்கிகொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி மடக்கி கொண்டால் அதிகமான பூட் வசதியை பெற முடியும். ஒரு பெரிய காரில் உள்ள பூட் வசதி இந்த காரிலும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

சார்ஜர்: பொதுவாக எலெக்ட்ரிக் கார்களுக்கு பிரத்தியேகமாக சார்ஜர் வழங்கப்படும். ஆனால் இந்த காருக்கு வழங்கப்படும் சார்ஜர் நாம் வீட்டில் பயன்படுத்தும் சாதாரண 3 பின் சார்ஜர் போல வழங்கப்பட்டுள்ளது. லேப்டாப், செல்போன் போல இந்த காரையும் சார்ஜ் செய்து கொள்ளலாம்.

100+ வாய்ஸ் கமெண்ட்ஸ் : இந்த காரில் 100க்கும் மேற்பட்ட வாய்ஸ் கமெண்ட்ஸ் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி கார் ஓட்டும் போது உங்களுக்கு தேவையான தகவல்களை வாய்ஸ் கமெண்ட்ஸ் மூலமே பெற்றுக்கொள்ள முடியும். குறிப்பாக பாட்டை மாற்றுவது, மேப்பில் டிராஃபிக் குறித்த தகவல்களை அறிவது ஆகியவற்றை செய்து கொள்ள முடியும்.

More from DriveSpark

Article Published On: Monday, April 24, 2023, 13:30 [IST]
English summary
Mg comet ev interesting features
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X