உங்க ஏரியால ரோடு சரி இல்லையா? எப்பேர்பட்ட ரோடா இருந்தாலும் இந்த குட்டி கார் சமாளிச்சிரும்! இந்தியாவுக்கான கார்

டாடா மோட்டார்ஸ் (Tata Motors)க்கே சவால் விடும் வகையில் மிக மிக குறைவான விலையில் எம்ஜி (MG) நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கும் புதுமுக எலெக்ட்ரிக் கார் மாடலே கோமெட் இவி (Comet EV) ஆகும். மிக சமீபத்திலேயே இதன் அனைத்து வேரியண்டுகளின் விலையையும் எம்ஜி நிறுவனம் வெளியீடு செய்தது.

நகர பயன்பாட்டிற்கு உகந்த வாகனமாக இதனை நிறுவனம் தயாரித்து இருக்கின்றது. இந்த நிலையில் இந்தியாவின் அனைத்து விதமான சாலையையும் சமாளிக்கும் திறன் கொண்டதாகவும் அந்த வாகனம் உருவாக்கப்பட்டு இருப்பது ஓர் வீடியோ வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. எம்ஜி கோமெட் இவி இந்தியாவின் கரடு-முரடான சாலையை அசால்டு செய்யும் வீடியோவே தற்போது வெளியாகி இருக்கின்றது.

Mg comet ev off roading

அந்த வீடியோவில் குட்டியான தோற்றம் கொண்ட கோமெட் குண்டும், குழியுமாகக் காட்சியளிக்கும் பாதையில் மிக சிறப்பாக இயங்கும் காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. உண்மையில், அந்த சாலையில் அதன் செயல்பாடு அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது. கரடு-முரடான கற்கள் நிறைந்த பாதையிலேயே எம்ஜி கோமெட் கார் அசால்டாக பயணித்திருக்கின்றது.

இந்த சாலையில் சில முன்னணி பிராண்டுகளின் கார்களே செல்லுமா என்பது சந்தேகமாக இருக்கின்றது. இந்த மாதிரியான ஓர் அமைப்பைக் கொண்ட, அதாவது, வாகனங்கள் இயங்க சற்றும் உகந்ததே அல்ல என கூறும் அளவிற்கு இருக்கும் ஓர் பாதையிலேயே கோமெட் இவி பயணித்திருக்கின்றது.

Mg comet ev off road travel

கோமெட் இவி இரண்டு கதவுகள் மட்டுமே சிறிய ரக எலெக்ட்ரிக் காராகும். இதில் ஐந்து பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும். பார்க்க குட்டியாக இருந்தாலும், இந்த காரில் நவீன தொழில்நுட்ப வசதிகள் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த விஷயத்தில் சற்றும் குறைச்சல் இல்லாத காராக கோமெட் இவி காட்சியளிக்கின்றது.

முழுக்க முழுக்க நகர பயன்பாட்டைக் கருத்தில் கொண்டே இந்த காரை எம்ஜி நிறுவனம் உருவாக்கி இருக்கின்றது. நகரத்தில் வாகனங்களை நிறுத்த போதிய இட வசதி இருக்காது. இந்த மாதிரியான சூழலுக்கு ஏற்ற வாகனமாகவே கோமெட் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த காரை நிறுத்த பெரிய அளவில் இட தேவை இருக்காது.

Mg comet ev front and side view

ஓர் ஆட்டோவை நிறுத்தி வைப்பதற்கு தேவையான இடமே கோமெட்டை பார்க் செய்ய போதுமானது. இத்தகைய ஓர் குட்டியான காரே அதிக மேடான மற்றும் ஆஃப்-ரோடு பாதையில் அசால்டாக இயங்கி இருக்கின்றது. சாதாரணமாக இந்த மாதிரி ஓர் பாதையை ஓர் வாகனம் கடக்க வேண்டும் எனில் அந்த வாகனம் 4 வீல் இயக்க திறன் மற்றும் ஆஃப்-ரோடு இயக்கத்திற்கான டயர்களைக் கொண்டிருக்க வேண்டும்.

ஆனால், இதுபோன்ற எந்தவொரு அம்சத்தையும் கோமெட் இவி கொண்டிருக்கவில்லை. பின் வீலுக்கு மட்டுமே இயக்க அனுபவத்தை வழங்கும் மின்சார மோட்டார், சிறிய 145/80 R12 டயர்களே கோமெட் எலெக்ட்ரிக் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இதைக் கொண்டு எப்படி இந்த ஆஃப்-ரோடை கோமெட் சமாளித்தது என்பதே பெருத்த ஆச்சரியமாக அமைந்திருக்கின்றது.

அதேவேளையில், சில மிகவும் மோசமான பகுதிகளில் கோமெட் முன்னேற லேசாக சிரமப்பட்டதை நம்மால் பார்க்க முடிகின்றது. இருப்பினும், அதன் திறன் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது. கோமெட் இவி-யின் இயக்கத்தில் டிரைவரின் பங்களிப்பு மிக முக்கியமானது. அவர் சரியான நேரத்தில் மிக சரியாக த்ரோட்டிலை வழங்கியதனாலேயே எலெக்ட்ரிக் காரால் அந்த பகுதியில் திறம்பட இயங்க முடிந்திருக்கின்றது.

அதிக வேகத்தில் அது செயல்படவில்லை என்றாலும், ஓரளவிற்கு, அதாவது, பாராட்டும் அளவிற்கு அது இயங்கி இருக்கின்றது. அதேநேரத்தில் எம்ஜி கோமெட் ஆஃப்-ரோடு மற்றும் நீண்ட தூர பயன்பாட்டிற்கு உகந்த வாகனம் அல்ல என்பதையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். ஏற்கனவே கூறியதைபோல் இதனை முழுக்க முழுக்க நகர பயன்பாட்டிற்கு ஏற்ற வாகனமாகவே எம்ஜி வடிவமைத்திருக்கின்றது.

ஒட்டுமொத்தமாக மூன்று விதமான வேரியண்டுகளில் கோமெட் இவி விற்பனைக்குக் கிடைக்கும். அவை, பேஸ் (Pace), பிளே (Play) மற்றும் பிளஷ் (Plush) ஆகும். இதன் ஆரம்ப விலை ரூ.7.98 லட்சம் (இது எக்ஸ்-ஷோரூம் விலை) ஆகும். முதல் ஐந்தாயிரம் வாடிக்கையாளர்களால் மட்டுமே இந்த ஆரம்ப விலையில் கோமெட் இவி-யை வாங்கிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதன் விலையைபோலவே இதை பயன்படுத்தவும் மிகவும் குறைவாகவே செலவாகும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. நிறுவனம் கூறியிருப்பதன்படி, கோமெட் இவி-யை பயன்படுத்த ஒரு மாதத்திற்கே ரூ. 519 மட்டுமே செலவாகும் என்பது தெரிய வந்திருக்கின்றது. இந்த கார் ஓர் முழு சார்ஜில் 230 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

இந்த ரேஞ்ஜ் திறனுக்காக 17.3 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது 3.3 kW சார்ஜரில் வைத்து சார்ஜ் செய்யும்பட்சத்தில் முழுமையான சார்ஜை எட்ட 7 மணி நேரங்கள் வரை எடுத்துக் கொள்ளும். எம்ஜி கோமெட் இவியில் 41 பிஎச்பி மற்றும் 110 என்எம் டார்க்கை வெளியேற்றும் மின்சார மோட்டாரே பொருத்தப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி கோமெட் இவி நகரவாசிகளைக் கருத்தில் கொண்டே உருவாக்கப்பட்டு இருக்கின்றது. மேலும், பட்ஜெட் விலையில் எலெக்ட்ரிக் காரை வாங்க விரும்புவர்களையும் இந்த கார் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வெகு விரைவில் இந்த காருக்கான புக்கிங்குகள் தொடங்கப்பட இருக்கின்றன. மே 15ம் தேதி புக்கிங்கும், மே 22ல் டெலிவரியும் தொடங்கப்பட உள்ளன.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 9, 2023, 20:09 [IST]
English summary
Mg comet ev off roading video
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X