காசு ரொம்ப செலவாகாது!! இந்த எலக்ட்ரிக் காரை சில லட்சங்களில் சொந்தமாக்கிடலாம்... சென்னை ஆன்-ரோடு விலைகள்!!

எம்ஜி மோட்டார் நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கோமெட் இவி (Comet EV) என்ற பெயரில் புதிய எலக்ட்ரிக் காரை இந்தியாவில் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இதன் அறிமுகத்திற்கு முன்பு வரையில், இந்தியாவில் அதிக விலையில் கிடைக்கக்கூடிய எலக்ட்ரிக் காராக டாடா டியாகோ இவி விளங்கிவந்தது. ஆனால் தற்போது அந்த இடத்தை எம்ஜி கோமெட் இவி பெற்றுள்ளது.

பழைய டாடா நானோ கார்களை போன்றதான தோற்றத்தில் கோமெட் இவி உள்ளது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், நானோவை காட்டிலும் கோமெட் இவி கிட்டத்தட்ட சதுர வடிவில் பெட்டகம் போன்றதாக உள்ளது. கோமெட் இவி எலக்ட்ரிக் காரை ரூ.7.98 லட்சம் என்கிற விலையில் எம்ஜி நிறுவனம் கடந்த மே மாதத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

mg comet ev chennai on-road prices

எம்ஜி கோமெட் இவியின் அதிகப்பட்ச எக்ஸ்-ஷோரூம் விலையும் ரூ.9.98 லட்சம் மட்டுமே. ஆனால் இவை கோமெட் இவியின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பதை மீண்டும் ஒருமுறை கூறிக்கொள்கிறோம். அதாவது, கோமெட் இவி எலக்ட்ரிக் காரை நீங்கள் ஷோரூமிற்கு சென்று வாங்கப் போகிறீர்கள் எனில், இவற்றை காட்டிலும் கூடுதல் விலையை செலுத்த வேண்டியிருக்கும். இதனையே ஆன்-ரோடு விலை என்கிறார்கள்.

ஆன்-ரோடு விலையில் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை உடன் காருக்கான இன்ஸ்சூரன்ஸ் கட்டணங்கள், ஆர்டிஓ வாகன பதிவு கட்டணங்கள் & சாலை வரி மற்றும் ஷோரூம் மெயிண்டெனன்ஸ் கட்டணம் உள்பட சில கட்டணங்கள் அடங்கும். இதனால் எக்ஸ்-ஷோரூம் விலையை காட்டிலும் கூடுதல் கட்டணங்களையும் செலுத்திய பின்னரே எம்ஜி கோமெட் இவி மட்டுமின்றி, எந்தவொரு ஆட்டோமொபைல் வாகனத்தையும் வாங்க வேண்டியிருக்கும்.

mg comet ev chennai on-road prices

மேற்கூறப்பட்ட கட்டணங்கள் ஒவ்வொரு காரை பொறுத்தும் மாறுப்படும். அதாவது, கோடி ரூபாய்களில் விலை கொண்ட காருக்கு இந்த கட்டணங்கள் மொத்தமாக ரூ.1 கோடியை விட அதிகமாக கூட வரலாம். எம்ஜி கோமெட் இவி என்ற விலை குறைவான காருக்கு எக்ஸ்-ஷோரூம் விலையை காட்டிலும் ஆன்-ரோடு விலை ரூ.40,000- 50,000 மட்டுமே அதிகமாக நிர்ணயிக்கப்படுகிறது.

காருக்கு கார் மாறுப்படுவது மட்டுமின்றி, ஒவ்வொரு காரின் வேரியண்ட்களுக்கு இடையேயும் மேற்கூறப்பட்ட கட்டணங்கள் மாறுப்படுகின்றன. அதாவது, ஆரம்ப நிலை வேரியண்ட்களுக்கு குறைவான கட்டணங்களும், உயர்நிலை வேரியண்ட்களுக்கு அதிக கட்டணங்களும் பெறப்படுவது உண்டு. எம்ஜி கோமெட் இவி மொத்தம் 3 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. பேஸ், பிளே மற்றும் ப்ளஷ் என்பவை அந்த 3 வேரியண்ட்கள் ஆகும்.

mg comet ev chennai on-road prices

கோமெட் இவியின் ஆரம்ப நிலை பேஸ் வேரியண்ட்டின் சென்னை ஆன்-ரோடு விலை தற்சமயம் ரூ.8.43 லட்சம் என்ற அளவில் உள்ளது. பிளே வேரியண்ட்டின் ஆன்-ரோடு விலை ரூ.9.80 லட்சமாகவும், உயர்நிலை ப்ளஷ் வேரியண்ட்டின் ஆன்-ரோடு விலை ரூ.10.53 லட்சமாகவும் உள்ளன. அதுவே, பெங்களூரில் எம்ஜி கோமெட் இவியின் ஆன்-ரோடு விலைகள் ரூ.8.42 லட்சத்தில் இருந்து ரூ.10.51 லட்சம் வரையில் தற்சமயம் உள்ளன.

MG Comet EV On-road Prices
City Pace Play Plush
Mumbai ₹8.41 Lakh ₹9.79 Lakh ₹10.51 Lakh
Delhi ₹8.45 Lakh ₹9.83 Lakh ₹10.55 Lakh
Chennai ₹8.43 Lakh ₹9.80 Lakh ₹10.53 Lakh
Kolkata ₹8.41 Lakh ₹9.79 Lakh ₹10.51 Lakh
Bangalore ₹8.42 Lakh ₹9.80 Lakh ₹10.52 Lakh
Hyderabad ₹8.41 Lakh ₹9.79 Lakh ₹10.51 Lakh
Ahmedabad ₹8.41 Lakh ₹10.34 Lakh ₹11.11 Lakh
Chandigarh ₹8.40 Lakh ₹10.61 Lakh ₹11.39 Lakh
Pune ₹8.41 Lakh ₹₹9.79 Lakh ₹10.51 Lakh
Kochi ₹8.40 Lakh ₹10.15 Lakh ₹10.90 Lakh

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இன்ஸ்சூரன்ஸ், ஆர்டிஓ கட்டணம் உள்ளிட்ட கட்டணங்கள் அவ்வப்போது மாறுப்படாது என்றாலும், உற்பத்தி செய்யும் காருக்கு தயாரிப்பு நிறுவனங்கள் விதிக்கும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் அவ்வப்போது மாறுப்படக்கூடியவை. ஷோரூம் பராமரிப்பு செலவு கட்டணம் கூட அடிக்கடி மாறுப்படக்கூடியதே. ஆதலால் மேலே பதிவிடப்பட்டுள்ள ஆன்-ரோடு விலைகள் நீங்கள் இந்த செய்தியை படிக்கும் நேரத்தில் கூட மாறியிருக்கலாம். ஆனால் பெரியதாக மாறுப்பட வாய்ப்பில்லை, சில ஆயிரங்கள் மட்டுமாகவே இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, June 16, 2023, 14:28 [IST]
English summary
Mg comet ev on road prices in chennai
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X