மலிவு விலை எம்ஜி கோமெட் காரில் இப்படி ஒரு ஸ்டியரிங் வீலா... இதுக்காகவே இந்த காரை வாங்க கூட்டம் அலை மோதபோகுது!

எம்ஜி நிறுவனம் இன்னும் ஒரு சில நாட்கள் அல்லது வாரங்களில் தன்னுடைய கோமெட் இவி எலெக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் இப்போதே எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்தக் காணப்படுகின்றது. இந்த காரை நிறுவனம் டாடாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் கார் மாடலான டியாகோ இவி-க்கு போட்டியாக விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

இந்த காரணத்திற்காகவே இந்த காரின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. அதாவது, இந்த காரை மலிவு விலையில் எம்ஜி விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக கூறப்படுகின்றது. இதுவும் அந்த காரின் மீதான எதிர்பார்ப்பு இந்தியர்கள் மத்தியில் பலமடங்கு அதிகரித்துக் காணப்படுவதற்கான ஓர் முக்கியக் காரணமாக இருக்கின்றது.

MG Comet EV Interior

இந்த நிலையில் கோமெட்டின் மீதான எதிர்பார்ப்பை கூடுதலாக்கும் விதமாக, அதாவது, இரட்டிப்பாக்கும் வகையில் நிறுவனம் அவ்வப்போது எலெக்ட்ரிக் கார் பற்றிய சுவாரஷ்யமான தகவல்களை வெளியிட்ட வண்ணம் இருக்கின்றது. அந்தவகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ஜ் திறன் மற்றும் மின் மோட்டார் பற்றிய முக்கிய விபரங்கள் வெளியீடு செய்யப்பட்டன.

இதைத்தொடர்ந்து தற்போது காரின் உட்பக்க முன்பகுதி படத்தை நிறுவனம் வெளியிட்டு இருக்கின்றது. இதுவரை வெளிப்புறத் தோற்றம் மட்டும் காட்சிப்படுத்தப்பட்டு வந்தநிலையில் முதல் முறையாக உட்பக்கம் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றது. குறிப்பாக, கோமெட்டின் ஸ்டியரிங் வீலே காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றது. இரு ஸ்போக்குகள் கொண்ட அந்த ஸ்டியரிங் வீல் பார்ப்பதற்கு வீடியோ கேம் விளையாட உதவும் ஜாய் ஸ்டிக் போன்றுக் காட்சியளிக்கின்றது.

MG Comet EV Interior

இரு வண்ணங்கள் ஸ்டியரிங் வீலை அலங்கரிக்கும் விதமாக பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. வழக்கமான கருப்பு நிறம் கைப் பிடிக்கும் வளையத்திற்கும், சில்வர் நிறம் பொத்தான்களுக்கும் இது இருக்கும் ஸ்போக்குகளுக்கும் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, குரோம் எம்ஜி பேட்ஜ் மற்றும் அதை சுற்றி ஓர் சில்வர் நிற வளையமும் அந்த ஸ்போக் வீலில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

இது நிச்சயம் காரின் உட்பக்கத்திற்கு கூடுதல் கவர்ச்சி சேர்க்கக் கூடிய அம்சமாக இருக்கும். இந்த எலெக்ட்ரிக் காரில் இந்த அம்சம் மட்டுமின்றி இன்னும் பல அம்சங்கள் இடம் பெற இருக்கின்றன. அந்தவகையில், கார் இணைப்பு தொழில்நுட்பம், முழு டிஜிட்டல் திறன் கொண்ட 10.25 அங்குல இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் 10.25 அங்குகல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவையும் இடம் பெற இருக்கின்றது.

MG Comet EV Interior

எம்ஜி கோமெட் இவி ஓர் இரண்டு கதவுகள் மட்டுமேக் கொண்ட எலெக்ட்ரிக் காராகும். ஆனால், இதில் டிரைவருடன் சேர்த்து ஐந்து பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும். இது ஓர் சிறிய ரக கார் என்பதால் சற்று மெல்லிய தேகம் கொண்டவர்களாக இருந்தால் மட்டுமே ஐந்து பேராக பயணிக்கும்போதும் தாராளமான இட வசதியுடன் பயணிக்க முடியும்.

கொஞ்சம் கொழுக்கு மொழுக்கு என இருப்பவராக இருந்தால் இடம் கொஞ்சம் நெருக்கமாகவே இருக்கும். நகர்புற பயன்பாட்டிற்கு ஏற்ற காராக இந்த காரை எம்ஜி உருவாக்கி இருக்கின்றது. ஆட்டோக்கள் செல்லும் சாலையில் கூட இதனால் அசால்டாக பயணிக்க முடியும் என கூறப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் காரின் அளவுகள் இருக்கின்றன.

இதேபோல் இந்த காரில் 25 kWh பேட்டரி பேக் ஆப்ஷன் முதன்மையான தேர்வாக வழங்கப்பட இருக்கின்றது. நடுத்தர மக்களையும் கவரக் கூடியதாக இந்த தேர்வு இருக்கும். இது ஓர் முழு சார்ஜில் 150 கிமீ முதல் 200 கிமீ வரையில் ரேஞ்ஜ் தரக் கூடிய பேட்டரி பேக் ஆகும்.

விலைக் குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த அளவு குறைவான ரேஞ்ஜ் தரக் கூடிய பேட்டரி பேக் கோமெட்டில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது ஓர் எல்எஃப்பி (lithium iron phosphate) ரக பேட்டரி பேக்காகும். இத்துடன், 50 kW திறன் கொண்ட மின் மோட்டாரே கோமெட்டில் பயன்படுத்தப்பட இருக்கின்றது.

இந்த காரில் கூடுதல் பிரீமியம் அம்சங்களாக கேபினை விரைவில் கூலாக்கும் வசதிக் கொண்ட ஏசி சிஸ்டம் வழங்கப்பட இருக்கின்றது. ஏசி வெண்ட் பிரத்யேகமாக மைய கன்சோல் இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுபோன்று இன்னும் பல ஏராளமான வசதிகள் கொண்ட காராகவே எம்ஜி கோமெட் இந்திய மின் வாகன சந்தையைக் களம் காண இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து

எம்ஜி கோமெட் இவி இந்த மாதமே வெளியீட்டைப் பெற இருக்கின்றது. இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் சில வருகின்ற 19ம் தேதி இந்த கார் அறிமுகமாக இருப்பதாக தெரிவிக்கின்றன. அன்றைய கார் பற்றிய இன்னும் பல முக்கிய விபரங்கள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. விலை மற்றும் சொகுசு வசதிகள் உள்ளிட்ட தகவல்களும் அன்றைய தினத்தில் எதிர்பார்க்கப்படுகின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, April 7, 2023, 17:41 [IST]
English summary
Mg comet ev steering wheel picture revealed
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X