பென்ஸ் காரின் வசதிகள் இவ்ளோ கம்மியான விலையிலா! ஷோரூம்களுக்கு படையெடுக்கும் மக்கள் கூட்டம்!
இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) எலெக்ட்ரிக் கார், தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 2 டோர்களை மட்டுமே கொண்ட ஹேட்ச்பேக் ரக கார் ஆகும். மிகவும் சிறிய அளவில், பார்ப்பதற்கே வித்தியாசமான முறையில் எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் கார் டிசைன் (Design) செய்யப்பட்டுள்ளது.
எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரில், 17.3 kWh பேட்டரி (Battery) தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 230 கிலோ மீட்டர்கள் ஆகும். அதாவது பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 230 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என எம்ஜி மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரில், ஒரே ஒரு சார்ஜர் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அது 3.3 kW சார்ஜர் ஆகும். பேட்டரியை பூஜ்ஜியத்தில் இருந்து 100 சதவீதம் வரை நிரப்புவதற்கு இது சுமார் 7 மணி நேரம் எடுத்து கொள்ளும். அளவு, பேட்டரி மற்றும் சார்ஜ் ஆக எடுத்து கொள்ளும் நேரம் ஆகியவற்றை எல்லாம் வைத்து பார்க்கையில், இது தினசரி நகர பயன்பாடுகளுக்கு ஏற்றதாக உள்ளது.
அளவில் சிறியதாக இருந்தாலும், எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரில் ஏராளமான வசதிகள் (Features) வழங்கப்பட்டுள்ளன. இதில், தலா 10.25 இன்ச் அளவில் வழங்கப்பட்டுள்ள 2 திரைகள் மிகவும் முக்கியமானவை. இதில் ஒரு திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்துக்கானது. மற்றொன்று இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கானது. மெர்சிடிஸ் பென்ஸ் கார்களில் இதுபோன்றுதான் இன்ஃபோடெயின்மெண்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டதாக இருந்தாலும், எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை (Price) வெறும் 7.98 லட்ச ரூபாய் மட்டுமே (எக்ஸ் ஷோரூம்). இது அறிமுக சலுகை விலை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் வரும் மே 15ம் தேதியில் இருந்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து மே மாதத்தில் இருந்தே வாடிக்கையாளர்களுக்கு எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரை டெலிவரி (Delivery) செய்யும் பணிகளும் தொடங்கப்படவுள்ளன. அதற்கு முன்னதாக எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் உள்ள எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் ஷோரூம்களுக்கு வர தொடங்கியுள்ளது.
அத்துடன் வாடிக்கையாளர்களுக்கான டெஸ்ட் டிரைவ் பணிகளும் (Test Drives) தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு, அருகில் உள்ள எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் டீலர்ஷிப்களை நீங்கள் தொடர்பு கொள்ளலாம். எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரை நாங்கள் ஏற்கனவே ஓட்டி பார்த்து விட்டோம்.
அந்த ரிவியூ செய்தியை டிரைவ்ஸ்பார்க் தமிழ் இணையதளத்தில் நீங்கள் படிக்கலாம். இந்திய சந்தையில் சிட்ரோன் இசி3 (Citroen eC3) மற்றும் டாடா டியாகோ இவி (Tata Tiago EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு போட்டியாக எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் கார் களமிறக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உண்மையில் எம்ஜி மோட்டார் நிறுவனம் கோமெட் இவி எலெக்ட்ரிக் காருக்கு சிறப்பான விலையை நிர்ணயம் செய்துள்ளதாகவே நாங்கள் கருதுகிறோம். நீங்கள் கொடுக்கும் சுமார் 8 லட்ச ரூபாய் பணத்திற்கு இது மதிப்பு வாய்ந்த தயாரிப்புதான் என்பது எங்கள் கருத்து.


Click it and Unblock the Notifications








