MG Comet EV எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! இனி மளிகை கடைக்கு கூட கார்ல போயிட்டு வரலாம்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் தற்போது எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) மிகவும் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. எனவே புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதில் பல்வேறு நிறுவனங்களும் அதிக ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளன. இதில், எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனமும் ஒன்று.

எம்ஜி மோட்டார் நிறுவனம் ஏற்கனவே எம்ஜி இஸட்எஸ் இவி (MG ZS EV) என்ற எலெக்ட்ரிக் காரை விற்பனை செய்து வருகிறது. ஆனால் இதன் விலை (Price) மிகவும் அதிகம். தற்போதைய நிலையில் இந்த எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலையே 23.38 லட்ச ரூபாயாக உள்ளது. அதே சமயம் டாப் வேரியண்ட்டின் விலை 27.40 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

MG Comet EV

எனவே அனைவராலும் இந்த காரை வாங்க முடியாது. இதன் காரணமாக விலை குறைவான புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை எம்ஜி நிறுவனம் வெகு விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. எம்ஜி மோமெட் இவி (MG Comet EV) என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த எலெக்ட்ரிக் கார், வரும் ஏப்ரல் 19ம் தேதி பொது பார்வைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதை தொடர்ந்து நடப்பு ஏப்ரல் மாத இறுதிக்குள் இந்த எலெக்ட்ரிக் காரின் விலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக எம்ஜி கோமெட் எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 10 லட்ச ரூபாய் என்ற அளவில்தான் இருக்கும் என கூறப்படுகிறது.

எனவேதான் இந்த எலெக்ட்ரிக் கார் மீது இந்திய வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இந்திய சந்தையில் எம்ஜி கோமெட் எலெக்ட்ரிக் கார் மொத்தம் 5 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும். அவை மஞ்சள், பச்சை, பிங்க், நீலம் மற்றும் வெள்ளை ஆகிய கலர்கள் ஆகும்.

அதே சமயம் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்களுடன், எம்ஜி கோமெட் எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவை 17.3 kWh மற்றும் 26.7 kWh பேட்டரிகள் ஆகும். இதில், 17.3 kWh பேட்டரியின் ரேஞ்ச் (Range) 200 கிலோ மீட்டர்களாக இருக்கலாம்.

அதே நேரத்தில் 26.7 kWh பேட்டரியின் ரேஞ்ச் 300 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, டாடா டியாகோ இவி (Tata Tiago EV), சிட்ரோன் இசி3 (Citroen eC3) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுடன், எம்ஜி கோமெட் இவி போட்டியிடும்.

விலை குறைவான மற்றும் அளவில் சிறிய எலெக்ட்ரிக் காராக இருந்தாலும் கூட, எம்ஜி கோமெட் எலெக்ட்ரிக் காரில் ஏராளமான வசதிகள் (Features) வழங்கப்படவுள்ளது. இதன்படி இந்த எலெக்ட்ரிக் காரின் உள்ளே 10.25 இன்ச் அளவுடைய 2 திரைகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஒன்று டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகவும், மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகவும் இருக்கலாம்.

இதுதவிர கனெக்டட் கார் தொழில்நுட்பம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, சன்ரூஃப் போன்ற வசதிகளும் கூட எம்ஜி கோமெட் எலெக்ட்ரிக் காரில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வசதிகள் எல்லாம் இந்த எலெக்ட்ரிக் காரின் டாப் வேரியண்ட்டில் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்னன.

டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளதால், எம்ஜி கோமெட் எலெக்ட்ரிக் காரின் வருகை, டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் மற்றும் சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் ஆகிய மாடல்களுக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தலாம். அத்துடன் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை உயர்வதற்கும், கோமெட் எலெக்ட்ரிக் கார் உதவி செய்யலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, April 7, 2023, 19:19 [IST]
English summary
Mg comet ev unveil date expected price range features
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+