MG Comet EV Unveiled! ரேஞ்சை கேட்டா இப்பவே வாங்கிடுவீங்க! விலையும் சும்மா தாறுமாறுதான்!

எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவிற்குள் வந்து குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்ற நிறுவனம். இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் தரமானதாகவும் அதிக தொழிற்நுட்ப வசதிகள் கொண்டதாகவும் இருக்கும் என்ற பெயரைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் எம்ஜி மோட்டார் நிறுவனம் இன்று தனது எம்ஜி கோமெட் என்ற சிறிய ரக எலெக்ட்ரிக் காரை முதன் முறையாக பொது வெளியில் இன்று காட்சிப்படுத்தியுள்ளது. நீண்ட எதிர்பார்ப்பிற்கிடையில் இந்த கார் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கு மவுசு அதிகமாகி வரும் சூழ்நிலையில் இந்த கார் இந்தியாவிற்குள் வந்துள்ளது.

MG Comet EV Unveiled

இந்த கார் ஏற்கனவே சீனாவின் எம்ஜி நிறுவனத்தின் மற்றொரு பிராண்டான வூலிங் என்ற பிராண்டில் ஏர் என்ற பெயரில் வெளியாகியுள்ளது. இந்த கார் தற்போது இந்தியாவிற்குத் தகுந்தார் போல மாற்றப்பட்டு எம்ஜி கோமெட் என்ற பெயரில் விற்பனைக்கு வரவுள்ளது.

இன்று காலை கூர்கான் பகுதியில் இந்த கோமெட் இவி கார்கள் சாலையில் செல்லும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் பரவின. தற்போது கூர்கானில் இந்த கார் முதன்முறையாக அதிகாரப்பூர்வமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

MG Comet EV Unveiled

ஸ்டைலிங்: இந்த கார் காம்பேக்ட் கார் என்பதால் பாக்ஸி டிசைனில் தான் உருவாக்கப்பட்டுள்ளது. 2 டோர் கொண்ட இந்த காரில் 4 பேர் அமர்ந்து செல்லும்படி சீட்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த காரில் எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட் மற்றும் இலுமினேடட் எம்ஜி லோகோ முன்பக்கமும் பின்பக்கமும் எல்இடிலைட் பார் வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி மற்றும் பவர்டெரைன்: எம்ஜி கோமெட் இவி காரில் 17.3 கிலோவாட் ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது 42 பிஎச்பி பவரையும் 110 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் எனவும், இது ரியர் வீல் டிரைவ் காராக வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது. இதன் பேட்டரி பவரில் இந்த கார் முழு சார்ஜில் 230 கி.மீ வரை செல்லும் திறன் கொண்டது என கூறப்படுகிறது. .

சார்ஜர்: இந்த காாின் சார்ஜரை பொருத்தவரை 3.3 கிலோவாட் ஹவர் சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 0-80 சதவீத பேட்டரியை வெறும் 5 மணி நேரத்தில் சார்ஜ் ஏற்றிவிடுகிறது. ஆனால் முழுமையாக சார்ஜ் ஏற 7 மணி நேரம் வரை ஆகிறது.

அளவுகள்: இந்த கார் சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் சிட்டி டிராஃபிக்கிற்கு ஏற்ற கார் இது. அதற்கு ஏற்றார் போல சிறிய ரக காராக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 2,974 மிமீ நிளமும், 1,505 மிமீ அகலமும், 1,640 மிமீ உயரமும் கொண்டது. 2,010 மிமீ வீல் பேஸ் கொண்டது என தெரிகிறது. இந்த காரில் 12 இன்ச் ஸ்டீல் வீல் பொருத்தப்பட்டுள்ளது. கதவு ஹேண்டில்களில் க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

சஸ்பென்சன்: சஸ்பென்சனை பொருத்தவரை முன்பக்கம் 2 வீலில் மெக் பெர்சன் ஸ்டர்ட் சஸ்பென்சன் மற்றும் பின்பக்கம் மல்டி லிங்க் காயில் சஸ்பென்சன்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரேக்குகளை பொருத்தவரை முன்பக்கம் டிஸ்க் மற்றும் பின்பக்கம் டிரம் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொழிற்நுட்ப அம்சங்கள்: இந்த கார் சிறிய ரக காராக இருந்தாலும் இந்த காரின் உட்புறத்தில் பல தொழிற்நுட்ப அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 10.5 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் தனித்தனியாக வழங்கப்பட்டுள்ளது. இது இந்த கார் குறித்து வெளியான புகைபடத்திலேயே தெளிவாக தெரிகிறது.

இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகிய அம்சங்கள் இருப்பதாகவும், இது போக ஸ்டியரிங் மவுண்ட்டட் கண்ட்ரோல்களும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இது போக இதில் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்ட சில முக்கிய அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது போக கீலெஸ் என்ட்ரி, எலெக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட்புள் ஓஆர்விஎம், டில்ட் அட்ஜெஸ்டபுள் ஸ்டியரிங், பின்பக்கம் 50:50 ஸ்பிலிட் சீட் ஆகிய வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பாதுகாப்பு அம்சங்கள்: இது போக இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களாக டூயல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், சீட்பெல்ட் ரிமைன்டர் சிஸ்டம், ஸ்பீடு அலர்ட் சிஸ்டம், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, ஸ்பீடு சென்சிங் டோர் லாக், ஆட்டோ டோர் அன்லாக் பங்சன் ஆகிய வசதிகளும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஸ்மார்ட் கீ: இந்த காரில் முதன் முறையாக ஸ்மார்ட் கீ அம்சம் வழங்கப்பட்டுள்ளது. எம்ஜி கார்களிலேயே இது தான் முதன் முறை. இது குறித்த டீசர் நேற்று வெளியாகியிருந்து. இது பார்க்க சதுரமாக 3 பட்டன்களுடன் இருந்தது. லாக், அன்லாக், மற்றும் பூட் டோர் திறக்கும் பட்டன்கள் இருந்தது. ஆனால் இதில் கீ செயின் மாட்டும் அம்சம் இல்லை.

இந்த கீ தான் கீ லெஸ் என்ட்ரிகான சாவியாகவும் இருக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும் இந்த காரை அதன் உரிமையாளர்கள் அவர்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் கொடுத்து அனுப்பும் வசதியும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்த விரிவான தகவல்கள் பின்னர் வெளியாகும்.

விலை: இறுதியாக இந்த காரின் விலையைப் பொருத்தவரை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை. வரும் மே 26ம் தேதி முழு தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நமக்குக் கிடைத்த தகவல்களின்படி இந்த காரின் விலையைப் பொருத்தவரை ரூ10 லட்சத்திற்கு மேல் ரூ15 லட்சத்திற்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கார் மார்கெட்டிற்கு வரும்போது டாடா டியாகோஇவி மற்றும் சிட்ரோன் இசி3 ஆகிய கார்களுக்கு போட்டியாக வரும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி நிறுவனம் இந்த காரை ஒரு பிரிமியம் வெர்ஷன் காராக முதலில் வெளியிட்டுள்ளதால் இதன் விலை அதிகமாக இருக்கிறது. இந்தியாவின் குட்டி கார் குறைந்த விலையில் இருக்க வேண்டும் என மக்கள் அதிகம் விரும்புவார்கள். மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப இதே காரின் குறைந்த விலை வேரியன்ட்கள் அடுத்தடுத்து வெளியாகலாம் எனத் தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 19, 2023, 22:21 [IST]
English summary
Mg comet ev unveiled interior range price and other details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+