எம்ஜி கோமெட் இவி... சைஸ் சின்னதுனாலும், உள்ளே டெக்னாலஜிஸ் அதிகமா இருக்கே!! எந்த வேரியண்ட்டில் காரை வாங்கலாம்?

எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) எலக்ட்ரிக் கார் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் காரின் ஆரம்ப விலை மட்டுமே ரூ.7.98 லட்சம் என அறிவிக்கப்பட்டது, எந்தெந்த வேரியண்ட்களில் இந்த எலக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்பட உள்ளது என்பது அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் இன்று எம்ஜி கோமெட் எலக்ட்ரிக் காரின் மற்ற வேரியண்ட்களின் பெயர்களும், அவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகளும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி பார்க்கும்போது, பேஸ், பிளே, ப்ளஷ் என மொத்தம் 3 விதமான வேரியண்ட்களில் கோமெட் இவி விற்பனைக்கு வந்துள்ளது. இதில் பேஸ் வேரியண்ட்டின் விலை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், பிளே வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.9.28 லட்சம் எனவும், ப்ளஷ் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.9.98 லட்சம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பேஸ் வேரியண்ட்டிற்கு அடுத்த வேரியண்ட்டின் விலை கிட்டத்தட்ட ரூ.1.30 லட்சம் அதிகமாகும்.

MG Comet EV variant wise features

இவை அறிமுக சலுகை விலையாம். வாடிக்கையாளர்களை கவர்வதற்காக அறிவிக்கப்பட்டிருக்கும் இவை முதல் 5 ஆயிரம் கோமெட் இவி வாடிக்கையாளர்களுக்கு மட்டும் தானாம். அதன்பின் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் அதிகரிக்கப்படும். எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமின்றி, கோமெட் இவி-இல் வழங்கப்பட்டுள்ள வசதிகளும் வேரியண்ட்கள் வாரியாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

பேஸ் வேரியண்ட்: இந்தியாவின் மலிவான எலக்ட்ரிக் காராக அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் எம்ஜி கோமெட் இவி-இன் விலை குறைவான வேரியண்டான இதில் உட்பக்க கேபின் முழுக்க முழுக்க கருப்பு நிறத்தில் கிடைக்கும். இதன் டேஸ்போர்டில் 10.25 இன்ச் எல்சிடி திரை உடன் டிஜிட்டல் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது. விலை குறைவு என்ற போதிலும், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் இந்த வேரியண்ட்டில் இடம்பெற்றுள்ளன. ஆனால் கேமிரா இல்லை. அதேபோல் இந்த காரின் ORVM-களை எலக்ட்ரிக் மூலம் மடக்கி, நீட்டி கொள்ளலாம்.

MG Comet EV variant wise features

பிளே வேரியண்ட்: இந்த வேரியண்ட் கிரே நிறத்தில் வழங்கப்படும். இந்த வேரியண்ட் காரில் டேஸ்போர்டில் 10.25-இன்ச்சில் இரு திரைகள் கிடைக்கும். ஒன்று இன்ஃபோடெயின்மெண்ட்டிற்கானது, மற்றொன்று இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கானது. இவற்றை விட முக்கியமாக, கோமெட் பிளே வேரியண்ட்டில் இருந்து கோமெட் எலக்ட்ரிக் காரில் ஐ-ஸ்மார்ட் தொகுப்பு என்ற பெயரில் 55க்கும் அதிகமான இணைப்பு வசதிகளை பெறலாம்.

ப்ளஷ் வேரியண்ட்: விலைமிக்க டாப் வேரியண்ட்டான இதனை ஸ்டார்ட் செய்வதற்கு உதவியாக ஸ்மார்ட் ஸ்டார்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. அத்துடன், ப்ளூடூத் வசதி உடன் டிஜிட்டல் சாவியும் இந்த வேரியண்ட்டில் கிடைக்கும். இந்த வேரியண்ட் காரை ரிவர்ஸில் பார்க்கிங் செய்வதற்கு உதவியாக கேமிரா வழங்கப்பட்டுள்ளது. இவை தவிர்த்து பிளே வேரியண்ட்டில் கிடைக்கும் அம்சங்களை இந்த டாப் வேரியண்ட்டிலும் பெறலாம்.

MG Comet EV variant wise features

எம்ஜி கோமெட் எலக்ட்ரிக் காரில் 17.3kWh பேட்டரி இடம்பெற்றுள்ளது. இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால், அதிகப்பட்சமாக 230கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என்கிறது எம்ஜி மோட்டார் நிறுவனம். இந்த பேட்டரி பொருத்தப்பட்ட எலக்ட்ரிக் மோட்டாரின் மூலமாக அதிகப்பட்சமாக 41 பிஎச்பி மற்றும் 110 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம். விற்பனையில் இந்த புதிய எம்ஜி எலக்ட்ரிக் காருக்கு டாடா டியாகோ இவி மற்றும் சிட்ரோன் இசி3 எலக்ட்ரிக் கார்கள் நேரெதிர் போட்டியாக விளங்குகின்றன.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: விலை உடன் ஒப்பிட்டு பார்த்தோமேயானால், எம்ஜி கோமெட் இவி -இல் வழங்கப்பட்டுள்ள வசதிகள் கொடுக்கும் பணத்திற்கு ஏற்றவையே. முதல் 5 ஆயிரம் வாடிக்கையாளர்களுள் ஒருவராக காரை முன்பதிவு செய்தால், குறைந்த விலையிலேயே மேற்கூறப்பட்ட மாடர்ன் வசதிகளை பெற முடியும். அதுமட்டுமின்றி, தோற்றமும் பெட்டகம் வடிவில் இருப்பது நிச்சயம் பல்வேறு வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் என்பது உறுதி.

More from DriveSpark

Article Published On: Friday, May 5, 2023, 17:45 [IST]
English summary
Mg comet ev variant wise features details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X