MG Comet EV இந்த நாளில்தான் அறிமுகமாக போகுது.. இந்த ஒத்த நாளுக்குதான் ஒட்டுமொத்த நாடே வெயிட்டிங்!

இந்தியர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) எலெக்ட்ரிக் கார் இருக்கின்றது. கடந்த 19 ஆம் தேதி அன்றே இந்த காரை எம்ஜி நிறுவனம் இந்தியாவில் காட்சிப்படுத்தியது. இதுவே அந்த கார் இந்தியாவில் காட்சியளிப்பது முதல் முறையாகும்.

இந்த வெளியீட்டு நிகழ்வைத் தொடர்ந்து தற்போது எலெக்ட்ரிக் காரை அதிகாரப்பூர்வமாக இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தும் பணியில் எம்ஜி நிறுவனம் களமிறங்கி இருக்கின்றது. இந்த அறிமுக நாள் எப்போது என்கிற தகவலே தற்போது வெளியாகி உள்ளது. ஏப்ரல் 26 ஆம் தேதி அன்றே எம்ஜி கோமெட் அதிகாரப்பூர்வமாக இந்திய மின்சார வாகன சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.

Mg comet white blue color pic

அன்றைய தினமே எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவு பணிகளும் தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இதனை எம்ஜி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மலிவு விலை எலெக்ட்ரிக் காரான டியாகோ இவி-க்கு போட்டியாகவே எம்ஜி கோமெட் இந்திய சந்தையில் விற்பனைக்கு களமிறக்கப்பட இருக்கின்றது.

இது ஓர் இரண்டு கதவுகள் மட்டுமே கொண்ட சிறிய ரக ஹேட்ச்பேக் மின்சார காராகும். இந்த காரில் டிரைவருடன் சேர்த்து ஐந்து பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும். இதுமட்டுமின்றி பன்முக பிரீமியம் வதிகளை தாங்கிய வாகனமாகவும் எம்ஜி கோமெட் காட்சியளிக்கின்றது.

Mg comet interior

இத்தகைய சூப்பரான காரையே வரும் ஏப்ரல் 26 ஆம் அன்று இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. சமீபத்தில் கோமெட் இவி பற்றிய சில முக்கிய தகவல்கள் இணையத்தின் வாயிலாக வெளியாகின. பேட்டரி பேக், மின் மோட்டார், சார்ஜர் கனெக்சன் டைப், சார்ஜாகும் வேக திறன் மற்றும் ரேஞ்ஜ் திறன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விபரங்கள் வெளியாகின.

இதுதவிர என்ன மாதிரியான பிரேக்கிங் செட்-அப் கோமெட் இவி எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட இருக்கின்றது என்பது பற்றிய விபரங்களும் வெளியாகின. கோமெட் இவி எலக்ட்ரிக் காரில் 17.3 kWh பேட்டரி பேக் தேர்வு வழங்கப்பட இருக்கின்றது. இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 230 கிமீ தூரம் வரையில் பயணிக்க முடியும்.

Mg comet front view

டைப் 2 ரக சார்ஜர் கன்னெக்சன் டைப்பே கோமெட்டில் வழங்கப்பட்டு இருக்கின்றது. 3.3 kW சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்யும்பட்சத்தில் பூஜ்ஜியத்தில் இருந்து 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய கோமெட் இவி 4 மணி நேரங்கள் வரை எடுத்துக் கொள்ளும்.

இதேபோல், இந்த காரில் மிக சிறந்த பிரேக்கிங் வசதிக்காக முன் பக்கத்தில் டிஸ்க் பிரேக்கும், பின் பக்கத்தில் டிரம் பிரேக்கும் வழங்கப்பட்டு இருக்கின்றது. கோமெட் இவி-யில் வழங்கப்பட்டு இருக்கும் மின்சார கார் 42 பிஎஸ் மற்றும் 110 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இதுபோன்று இன்னும் பல முக்கிய தகவல்கள் கோமெட் இவி பற்றி வெளியாகி இருக்கின்றன.

Mg comet ev

அந்தவகையில், 10.5 அங்குல திரைகள் இரண்டு கோமெட் இவியில் வழங்கப்பட்டிருக்கும். அதில் ஒன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்டாகவும், மற்றொன்று, இன்ஃபோடெயின்மென்ட் யூனிட்டாகவும் செயல்படும். இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஒயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய வசதிகளக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுதவிர, பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட சூப்பரான ஸ்டியரிங் வீல் கோமெட் இவியில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

மேலும், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், சாவி இல்லாமல் நுழையும் வசதி, எலெக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட்புள் ஓஆர்விஎம், டில்ட் அட்ஜெஸ்டபுள் ஸ்டியரிங், பின்பக்கத்தில் 50:50 ஸ்பிலிட் சீட் ஆகிய அம்சங்களும் கோமெட் இவியில் வழங்கப்பட்டுள்ளது. இதன் ஏசி சிஸ்டம் விரைவில் கேபினை குளிர்விக்கும் திறன் கொண்டது என எம்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகையால் மிக சிறந்த தயாரிப்பாக இந்த கோமெட் இவி இருக்கும் என தெரிகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி கோமெட் இந்தியாவில் மலிவு விலையில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில், அது மலிவான விலையில் விற்பனைக்கு வரும் என்றால், டாடா டியாகோ இவிக்கு கோமெட் இவியின் வருகை மிகப் பெரிய போட்டியாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

More from DriveSpark

Article Published On: Friday, April 21, 2023, 20:09 [IST]
English summary
Mg comet smart ev launch date confirmed
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X