நானோவ குறை சொன்ன வாயெல்லாம் இனி என்ன பேச போகுதோ!கோமெட் காரோட இந்த ஊரறிந்த ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?
இந்தியாவின் சிறிய இவி காராக எம்ஜி நிறுவனத்தின் கோமெட் இவி கார் நாளை (ஏப்26ம் தேதி) அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதற்கு முன்னர் இந்தியாவின் சிறிய காராக டாடா நிறுவனத்தின் நானோ கார் பேசப்பட்டது.
நானோ கார் இந்தியாவின் சிறிய கார் மட்டுமல்ல இந்தியாவின் குறைந்த விலை காராகவும் விற்பனையாகி வந்தது. அந்த கார் தற்போது மார்கெட்டில் இல்லாத நிலையில் எம்ஜியின் கோமெட் இவி கார் தான் சிறிய காராக விற்பனைக்கு வரவுள்ளது. நானோ பெட்ரோல் கார், கோமெட் இவி கார் என்பதால் இரண்டையும் ஒப்பிட முடியாது ஆனால் அளவுகளில் ஒப்பிட முடியும் இதைத் தான் இங்கே காணப்போகிறோம்.

முதலில் எம்ஜி கோமெட் இவி காரின் அளவு பற்றிக் காணலாம். இந்த கார் 2974 மிமீ நீளம், 1,505 மிமீ அகலம் மற்றும் 1,631 மிமீ உயரம் மற்றும் 2,010 மிமீ வீல் பேஸ் கொண்டது. இந்த தகவலைத் தான் எம்ஜி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அடுத்தாக டாடா நானோ கார் இதன் அளவுகளைப் பொருத்தவரை 3,164 மிமீ நீளம், 1,750 மிமீ அகலம், 1,652 மிமீ உயரம் மற்றும் 2,230 மிமீ வீல் பேஸ் கொண்டது. இதுதான் கடைசியாக விற்பனையிலிருந்தா டாடா நானோ காரின் அளவுகள். இதை இரண்டையும் ஒப்பிடும் போது நமக்கு ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைக்கும்.

எம்ஜி கோமெட் கார் டாடா நானோ காரை விட நீளம், உயரம், அகலம், வீல் பேஸ் என அனைத்து வகையிலும் சிறிய கார். பார்த்தால் நம்பவே முடியவில்லை அல்லவா? நானோ காரை விட சிறிய காரை தான் எம்ஜி நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வரப்போகிறது.
அதே போல நானோ கார் ஒரு 4 டோர் காராக இருக்கிறது. ஆனால் எம்ஜி கோமெட் கார் 2 டோர் கொண்ட காராக இருக்கிறது. என்னதான் சிறிய காராக இருந்தாலும் இதில் வசதி என்பது இந்நிறுவனம் எப்படி இந்த காரின் உட்கட்டமைப்பை வைத்திருக்கிறது என்பதில் தான் இருக்கிறது. அந்த வகையில் இவ்வளவு சிறிய கார் என்பதே தெரியா அளவிற்கு இந்த காரை வடிவமைத்துள்ளது.

எம்ஜி கோமெட் இவி காரை பொருத்தவரை 42 பிஎஸ் பவரையும், 110 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் மோட்டாரை கொண்டுள்ளது. இந்த மோட்டாருக்கு 17.3 கிலோ வாட் ஹவர் பேட்டரி மூலம் பவர் செலுத்தப்படுகிறது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 3.3 கிலோ வாட் சார்ஜ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சார்ஜர் 0-100 சதவீத பேட்டரியை சார்ஜ் செய்ய 7 மணி நேரமும், 10-80 சதவீத பேட்டரியை சார்ஜ் செய்ய 5 மணி நேரமும் எடுத்துக்கொள்கிறது. இந்த கார் முழு பேட்டரியில் 230 கி.மீ ரேஞ்ச் தரும் என கூறப்பட்டுள்ளது. இந்த கார் எஸ்ஏஐசி-ஜிஎம் என்ற பிளாட்ஃபார்மில் தான் உருவாக்கப்பட்டுள்ளது. வூலிங் என் உலகிலேயே சிறிய காரும் இந்த பிளாட்ஃபார்மில் தான் உருவாக்கப்படுகிறது.
இந்த காரில் எல்இடி ஹெட்லைட்கள், எல்இடி டெயில் லைட், 10.25 இன்ச் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆப்பிள் ஐபாட் இன்ஸ்பயர்டு மல்டி ஃபங்சன் ஸ்டியரிங் வீல் ஆகிய அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது.
இந்த காரை எம்ஜி நிறுவனம் ஏப்.26ம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில் காரின் விலை விபரங்கள் நாளையே வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் சில பிரிமியம் அம்சங்களுடன் இருப்பதால் இந்த காரின் விலை ரூ10-15 லட்சம் வரை இருக்கலாம் எனப் பேசப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடாவின் நானோ காரைவிட சிறிய காரை எம்ஜி நிறுவனம் வெளியிடவுள்ளது. இந்த கார் விற்பனைக்கு வரும் போது இதன் விலை அதிகமாக இருந்தாலும், எதிர்காலத்தில் குறைந்த விலை வேரியன்ட்கள் விற்பனைக்கு வர வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. பொறுத்திருந்தது பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









