விலை கம்மின்னு இந்த காரை கேவலமா நினைக்காதீங்க! கம்பேர் பண்ணிப் பார்த்த தரமா செஞ்சிருக்காங்கனு தெரியும்!

எம்ஜி நிறுவனம் இந்தியாவில் தனது இரண்டாவது இவி காராக கோமெட் இவி காரை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே இசட்எஸ் இவி காரை பிரிமியம் இவி காராக விற்பனை செய்து வருகிறது. தற்போது இரண்டாவதாக கொமெட் இவி என்ற சிட்டி ரைடிங் காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த கார் 2 டோர், 4 சீட்டர் காராக விற்பனைக்கு வருகிறது. இந்த காருக்கு நேரடியாக எந்த காரும் போட்டிக்கு இல்லை என்றாலும் இதன் விலை மற்றும் இவி கார் என்ற ரீதியில் டாடாவின் டியாகோ இவி மற்றும் சிட்ரோன் நிறுவனத்தின் இசி3 ஆகிய கார்கள் போட்டி கார்களாக உள்ளன. இதை ஒப்பீட்டை இங்கே காணலாம் வாருங்கள்.

Citroen eC3

அளவுகள்: அளவுகளில் எம்ஜி கோமெட் இவி கார் தான் சிறிய கார். நீளம் 2,975 மிமீ, அகலம் 1,505 மிமீ, உயரம் 1,640 மிமீ, வீல்பேஸ் 2,010 மிமீ கொண்டது. டாடா டியாகோ இவி காரை பொருத்தவரை நீளம் 3,769 மிமீ, அகலம் 1,677 மிமீ, உயரம் 1,536 மிமீ, வீல் பேஸ் 2450 மிமீ. சிட்ரோன் இசி3 காரை பொருத்தவரை நீளம் 3981 மிமீ, அகலம் 1733 மிமீ, உயரம் 1,604 மிமீ, வீல்பேஸ் 2540 மிமீ, டியாகோ பூட் ஸ்பேஸ் 240 லிட்டர், சிட்ரோன் பூட் ஸ்பேஸ் 315 லிட்டர் அதில் அளவில் சிட்ரோன் சி3 கார் தான் பெரிய கார்.

பேட்டரி மற்றும் ரேஞ்ச்: எம்ஜி கோமெட் இவி காரில் 17.3 கிலோ வாட்ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. டியாகோ இவி காரில் 19.2 கிலோ வாட் ஹவர் மற்றும் 24 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் ஆப்ஷன்கள் உள்ளன. சிட்ரோன் இசி3 காரை பொருத்தவரை 29.2 கிலோ வாட் ஹவர் பேட்டரிபேக் வழங்கப்பட்டுள்ளது. ரேஞ்சை பொருத்தவரை கோமெட் இவி 230 கி.மீ ரேஞ்சையும், டியாகோ இவி சிறிய பேட்டரியில் 250 கி.மீ ரேஞ்சையும், பெரிய பேட்டரியில் 315 கி.மீ ரேஞ்சையும் வழங்குகிறது. சிட்ரோன் இசி3 காரில் 320 கி.மீ ரேஞ்ச் கிடைக்கிறது.

MG Comet

பேட்டரிக்கு தகுந்தார் போல காரின் பவர் மற்றும் டார்க் வித்தியாகப்படுகிறது. இருப்பதிலேயே குறைவான ரேஞ்ச், பேட்டரி, பவர், மற்றும் டார்க் கொண்டது. எம்ஜி கோமெட் இவி தான். இதுவே அதிகம் என்று பார்த்தால் சிட்ரோன் இசி3 கார் தான் இது இந்த மூன்று காரிலேயே பெரிய பேட்டரி, பவர், டார்க், ரேஞ்ச் கொண்டது.

அம்சங்கள்: எம்ஜி கோமெட் இவி காரில் 10.25 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இது போக வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, மேனுவல் ஏசி டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

Tata Tiago ev

டியாகோ இவி காரில் 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்டு ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே சிஸ்டம், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளது.

சிட்ரோன் இசி3 காரை பொருத்தவரை 10.2 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, மேனுவல் ஏசி, உயரம் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் சீட் ஆகிய அம்சங்கள் இருக்கிறது.

அம்சங்களைப் பொருத்தவரை டியாகோ இவி காரில் தான் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல் ஆகிய ஆப்ஷன்கள் இருக்கிறது. கோமெட் மற்றும் இசி3 காரில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆப்பிள் கார்பிளே ஆகிய அம்சங்கள் இருக்கிறது.

பாதுகாப்பு அம்சங்களைப் பொருத்தவரை 3 காரிலும் டூயல் முன்பக்க ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ரியர் வியூ கேமரா, ஆகியவை உள்ளது. கோமெட் மற்றும் டியாகோ இவி காரில் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளது.

விலை: எம்ஜி கோமெட் காரை பொருத்தவரை தற்போதைய நிலையில் இந்த கார் ரூ7.98 லட்ம் என்ற விலையில் விற்பனைக்கு வரவுள்ளது. இது தான் குறைந்த விலை இவி காராக தற்போது இருக்கிறது. அடுத்தாக டாடா டியாகோ காரை பொருத்தவரை ரூ8.69 லட்சம் முதல் ரூ11.99 லட்சம் என்ற விலையிலும், சிட்ரோன் இசி3 காரை பொருத்தவரை ரூ11.50 லட்சம் முதல் ரூ12.76 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விலையை பொருத்தவரை எம்ஜி கோமெட் கார் குறைவாக இருந்தாலும் அம்சங்களை ஒப்பிடும் போது சிட்ரோன் இசி3 கார் சிறப்பாக இருக்கிறது. ஆனால் விலை அதிகம். இந்த மூன்றும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் மக்களுக்கு பயனளிக்க கூடியதாக இருக்கிறது. மக்கள் அவர்களின் தேவைக்கு ஏற்ப தங்கள் வாகனங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 26, 2023, 16:34 [IST]
English summary
Mg comet vs tata tiago vs citroen ec3 price features range comparison
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X