எம்ஜி கோமெட் Vs டியாகோ இவி குடுக்குற காசுக்கு எது ஒர்த்?
எம்ஜி நிறுவனம் தனது கோமெட் இவி காரின் வேரியன்ட் விபரங்களை வெளியிட்டுள்ளது. இந்த காரை வேரியன்ட் வாரியாக இதன் போட்டி காராக டாடா டியாகோ இவி காருடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம் வாருங்கள்.
எம்ஜி நிறுவனம் தற்போது இந்தியாவில் குறைந்த விலை காரும் தனது நிறுவனத்தின் இரண்டாம் எலெக்ட்ரிக் காருமான கோமெட் இவி காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காருக்கான புக்கிங் மே 15ம் தேதி துவங்குகிறது. மே 22ம் தேதி முதல் இந்த காரின் டெலிவரி துவங்குகிறது. இந்த காருடன் டாடா டியாகோ இவி காருடனான ஒப்பீட்டைக் காணலாம்.

டாடா டியாகோ இவி கார் மொத்தம் 7 விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. எம்ஜி கோமெட் இவி கார் 3 விதமான வேரியன்ட்களில் விற்பனைக்கு வருகிறது. டிசைனை பொருத்தவரை இரு கார்களும் வேறு வேறு விதமான வடிவமைப்பைக் கொண்டவை , டியாகோ இவி கார் டிகோர் காரின் வடிவமைப்பை ஒத்து டிசைன் செய்யப்பட்டது. கோமெட் இவி கார் சிட்டி பயன்பாட்டை மனதில் வைத்து டிசைன் செய்யப்பட்டுள்ளது.
டியாகோ இவி கார் தற்போது இந்தியாவில் வேகமாக புக் ஆகி வரும் ஒரு இவி காராக விற்பனையாகி வருகிறது. இந்த கார் அறிமுகமான 24 மணி நேரத்தில் 10 ஆயிரம் பேர் இந்த காரை புக்கிங் செய்தனர். கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆயிரம் பேர் இந்த காரை புக்கிங் செய்துள்ளனர்.

பேட்டரியை பொருத்தவரை டியாகோ இவி காரை பொருத்தவரை 2 பேட்டரி ஆப்ஷன்கள் உள்ளது. குறைந்த பேட்டரியாக 19.2 கிலோ வாட் ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது 250 கி.மீ ரேஞ்சை தரக்கூடியது. அதிக பவர் பேட்டரியாக 24 கிலோ வாட் ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது 315 கி.மீ ரேஞ்சை தரும் திறன் கொண்டது. எம்ஜி கோமெட் காரை பொருத்தவரை 17.3 கிலோவாட் ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது 230 கி.மீ ரேஞ்சை தரும் திறன் கொண்டது.
விலையை பொருத்தவரை டாடா டியாகோவி இவி காரின் அடிப்படை வேரியன்டான எக்ஸ்இ எம்ஆர் வேரியன்ட் ரூ8.69 லட்சம் என்ற விலையிலும், எக்ஸ்டி எம்ஆர் வேரியன்ட் ரூ9.29 லட்சம் என்ற விலையிலும், எக்ஸ்டி எல்ஆர் வேரியன்ட் ரூ10.19 லட்சம் என்ற விலையிலும்,

எக்ஸ்இசட் +எல்ஆர் வேரியன்ட் ரூ10.99 லட்சம் என்ற விலையிலும், எக்ஸ் இசட் + டெக் லக்ஸ் எல்ஆர் மற்றும் எக்ஸ் இசட் + எல்ஆர் (7.2 கிலோவாட் சார்ஜர்) ஆகிய வேரியன்ட்கள் ரூ11.49 லட்சம் என்ற விலையிலும், எக்ஸ் இசட் + டெக் லக்ஸ் எல்ஆர் (7.2 கிலோவாட் சார்ஜர்) வேரியன்ட் ரூ11.99 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது.
இதுவே எம்ஜி கோமெட் இவி காரை பொருத்தவரை 3 வேரியன்ட் தான் பேஸ் என்ற வேரியன்ட் தான் அடிப்படை வேரியன்ட் இது ரூ7.98 லட்சம் என்ற விலையிலும், ப்ளே என்ற வேரியன்ட் ரூ9.28 லட்சம் என்ற விலையிலும், பிளஷ் என்ற வேரியன்ட் ரூ9.98 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது.
பவரை பொருத்தவரை எம்ஜி கோமெட் இவி கார் அனைத்து வேரியன்டிலும் ஒரே பவர் தான் 42 பிஎஸ் பவரையும், 110 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. டாடா டியாகோ இவி காரை பொருத்தவரை பேட்டரி சைஸை பொருத்தது தான் இதன் பவர் நிர்ணயம் செய்யப்படுகிறது. சிறிய பேட்டரி கொண்ட காரில் 45 கிலோ வாட் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது 110 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இது 0-60 கி.மீ வேகத்தை வெறும் 6.2 நொடியில் பிக்கப் செய்து விடும்.
அடுத்தாக பெரிய பேட்டரி பேக் கொண்ட வேரியன்டில் 55 கிலோ வாட் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது 114 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இது 0-60 கி.மீ வேகத்தை வெறும் 5.7 நொடியில் பிக்கப் செய்யும்..


Click it and Unblock the Notifications









