நம்ம ஊரில் இந்த பணத்தில் ஃபார்ச்சூனர் காரை வாங்குவதே கொஞ்சம் கஷ்டம்!! எம்ஜி மோட்டாரின் புது எலக்ட்ரிக் கார்!

எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனம் சீனாவில் அதன் புதிய சைபர்ஸ்டர் கார்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.38.04 லட்சத்தில் இருந்து இந்த எம்ஜி காரின் விலைகள் அங்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. ஆனால், முன்பு இந்த காரின் விலை சீனாவில் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.27.5 இலட்சத்தில் அறிமுகம் செய்யப்படும் எதிர்பார்க்கப்பட்டது.

சைபர்ஸ்டர் (Cyberster), எம்ஜி மோட்டாரின் 2-டோர் கன்வெர்டபிள் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார். இந்த எலக்ட்ரிக் காரின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், இதன் மேற்கூரையை தேவைக்கு ஏற்ப மடக்கியும், விரித்தும் கொள்ளலாம். குட்வுட் ஃபெஸ்டிவல் ஆஃப் ஸ்பீடு என்ற கண்காட்சியில் முதல்முறையாக இந்த எம்ஜி எலக்ட்ரிக் கார் காட்சிப்படுத்தப்பட்டது.

mg cyberster electric sports car

அதனை தொடர்ந்து, தற்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. சீனாவில் கார்களின் விலைகள் போட்டிப் போட்டிக்கு குறைக்கப்பட்டு வருகின்றன. எம்ஜி சைபர்ஸ்டர் காரின் விலை முன்பு சீனாவில் 3 இலட்ச சைனீஸ் யுவான்களாக இருந்தது. அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.35.68 இலட்சம்.

சைபர்ஸ்டரின் புதிய அப்டேடட் காரின் விலை சீனாவில் 239,800 சைனீஸ் யுவனாக நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.27.5 இலட்சம். 239,800 சைனீஸ் யுவான்கள் என்பது ஓர் யூகிப்பாகவே இருந்ததால், புதிய எம்ஜி சைபர்ஸ்டர் காருக்கு ஆளாளுக்கு ஒரு விலையை யூகித்தனர்.

mg cyberster electric sports car

ஆனால், அவர்கள் அனைவருக்கும் ஆச்சிரியமளிக்கும் விதமாக, முன்பை விட அதிகமாக 319,800 சைனீஸ் யுவான்களை சைபர்ஸ்டரின் விலையாக எம்ஜி நிர்ணயித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 38.04 இலட்சம் ஆகும். சீனாவில் மொத்தம் 3 விதமான வேரியண்ட்களில் எம்ஜி ஸ்போர்ட்ஸ்டர் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

கிளாமர் எடிசன், ஸ்டைல் எடிசன் மற்றும் பியோனீர் எடிசன் என்பன அந்த 3 வேரியண்ட்கள் ஆகும். இவை மூன்றில் முறையே 501, 580 மற்றும் 520 என 3 விதமான பவர்டிரெயின்கள் அங்கு வழங்கப்பட்டு உள்ளன. இதில் மற்ற இரு வேரியண்ட்கள் பின் சக்கரங்களின் மூலமாக இயங்கும்.

mg cyberster electric sports car

ஆனால், விலைமிக்க பியோனீர் எடிசன் மட்டும் அனைத்து 4 சக்கரங்கள் மூலமாக ஒரே நேரத்தில் இயங்கும். 319,800 சைனீஸ் யுவான்கள் என்பது எண்ட்ரீ-லெவல் கிளாமர் எடிசனின் விலை ஆகும். அதுவே, ஸ்டைல் எடிசனின் விலை 339,800 சைனீஸ் யுவான்கள் (ஏறக்குறைய ரூ.40.41 இலட்சம்) மற்றும் பியோனீர் எடிசனின் விலை 355,800 சைனீஸ் யுவான்கள் (ரூ.42.23 இலட்சம்) ஆகும்.

சீனாவில் இந்த எம்ஜி 2-டோர் கன்வெர்டபிள் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காரில் 77kWh பேட்டரி பொருத்தப்படுகிறது. இந்த பேட்டரி காரின் ட்யூயல்-மோட்டார் செட்-அப் மூலமாக 536 பிஎச்பி மற்றும் 725 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வழங்கக்கூடியதாக உள்ளது. கத்திரிக்கோல் வடிவமைப்பில் கதவுகளை பெறும் இந்த காரில் 0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 3.2 வினாடிகளில் எட்டிவிடலாம்.

mg cyberster electric sports car

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சீனாவில், எம்ஜி சைபர்ஸ்டர் காரின் விலை இவ்வாறு, எதிர்பார்க்கப்பட்டதை காட்டிலும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும், சைபர்ஸ்டரின் விலையுயர்ந்த வேரியண்ட்டின் விலை இந்தியாவில் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை விட குறைவுதான். ஏனெனில், இந்திய சந்தையில் ஃபார்ச்சூனர் கார்கள் அதிகப்பட்சமாக ரூ.51.44 இலட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

More from DriveSpark

Article Published On: Monday, November 20, 2023, 17:29 [IST]
English summary
Mg cyberster 2 door convertible electric sports car launched in china
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X