தாய்நாடுனாலே எல்லாருக்கும் ஸ்பெஷல்தான்.. சக்தி வாய்ந்த காரை நம்ப முடியாத மலிவு விலையில் களமிறக்கும் எம்ஜி!

கடந்த காலங்களில் கான்செப்ட் (Concept) மாடலாக மட்டுமே சைபர்ஸ்டர் (Cyberster) எனும் கார் மாடலை எம்ஜி நிறுவனம் முன்னிறுத்தி வந்தது. இந்த காரையே தற்போது எம்ஜி விற்பனைக்கு தயார்படுத்தி இருக்கின்றது. முதல் நாடாக நிறுவனத்தின் தாயகமான இங்கிலாந்தில் அந்த கார் விற்பனைக்குக் களமிறக்கப்பட இருக்கின்றது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக சைபர்ஸ்டர் காரை எம்ஜி நிறுவனம் அந்நாட்டில் வெளியீடு செய்திருக்கின்றது. எம்ஜி சைபர்ஸ்டர் ஓர் ரோட்ஸ்டர் ரக எலெக்ட்ரிக் காராகும். இந்த காரை முதன் முதலில் 2020இல் நடைபெற்ற ஷாங்காய் வாகன கண்காட்சியிலேயே எம்ஜி நிறுழனம் கான்செப்ட் மாடலாக காட்சிப்படுத்தியது.

Mg cyberster

இதைத்தொடர்ந்து இன்னும் சில உலக புகழ்பெற்ற வாகன கண்காட்சிகளிலும் அக்கார் கான்செப்டாக மாட்டுமே காட்சிப்படுத்தப்பட்டது. இந்தமாதிரியான சூழ்நிலையிலேயே முதல் முறையாக விற்பனைக்கான தயார்நிலையில் இங்கிலாந்து நாட்டில் சைபர்ஸ்டர் இவி காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றது. சுமார் 50 ஆயிரம் யூரோக்களு (இந்திய ரூபாய் மதிப்பில் 44.98 லட்சத்து)-க்கு அது விற்பனைக்குக் களமிறக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்த எலெக்ட்ரிக் கார் அதிக தொழில்நுட்ப வசதிகள் மற்றும் அதீத ரேஞ்ஜை வழங்கக் கூடியதாக தயார் செய்யப்பட்டு உள்ளது. எனவேதான் அதன் விலை நாம் எதிர்பார்த்ததைவிட சற்று அதிகமாக நிர்ணயிக்கப்பட உள்ளது. அதேவேளையில், டெஸ்லா போன்ற பிற பிராண்டுகளைக் காட்டிலும் இதன் விலை சற்று மலிவாகவே இருக்கும் என கூறப்படுகின்றது.

Mg cyberster front beauty

ஆனால், இதனை இன்னும் எம்ஜி உறுதிச் செய்யவில்லை. இதேபோல், இதன் இந்திய வருகையையும் நிறுவனம் உறுதி செய்யவில்லை. இப்போதைய நிலவரப்படி எம்ஜி நிறுவனத்தின் இரு கார் மாடல்கள் நாட்டில் விற்பனையில் கிடைக்கின்றன. கோமெட் இவி (புதுமுக இ-கார்) மற்றும் இசட்எஸ் இவி ஆகியவற்றையே அது இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

எனவே, இதன் (சைபர்ஸ்டரின்) வருகையும் இந்தியாவில் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியர்கள் மத்தியில் இந்த எதிர்பார்ப்பு தற்போது பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. காரணம் அதன் அழகிய ரோட்ஸ்டர் தோற்றம் மற்றும் அதிக ரேஞ்ஜ் திறனே ஆகும். சைபர்ஸ்டர் ஓர் முழு சார்ஜில் 800 கிமீ வரை ரேஞ்ஜ் தரும் என கூறப்படுகின்றது.

Mg cyberster back beauty

இந்த அதீத ரேஞ்ஜ் திறனுக்காக எலெக்ட்ரிக் காரில் 64 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. இதே பேட்டரி பேக்கையே உலக நாடுகள் சிலவற்றில் மட்டுமே விற்பனையில் இருக்கும் எம்ஜி4 இவியில் நிறுவனம் பயன்படுத்தி இருக்கின்றது. இதுதவிர இந்த எலெக்ட்ரிக் காரை அதிக வேகத்தில் பயணிக்கும் வாகனமாகவும் எம்ஜி தயார் செய்திருக்கின்றது.

இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 200 கிமீ வேகம் என கூறப்படுகின்றது. இந்த அதீத வேகத்திற்காக முன் மற்றும் பின் ஆக்ஸில்களில் அதீத திறனை வெளியேற்றக் கூடிய மின்சார மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. அவை 543 எச்பி வரை பவரை வெளியேற்றும்.

Mg cyberster side beauty

இந்த திறனே சைபர்ஸ்டரை வெறும் 3.0 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்ட செய்கின்றது. இத்தகைய சூப்பரான வேகத்தில் செல்லும் எலெக்ட்ரிக் காராகவே சைபர்ஸ்டர் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இதையே இங்கிலாந்து நாட்டில் எம்ஜி நிறுவனம் வெளியீடு செய்து நம்மை பொறாமையில் ஆழ்த்தி இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சைபர்ஸ்டர் ஓர் சாஃப்ட் டாப் வசதிக் கொண்ட 2-சீட்டுகள் மட்டுமே கொண்ட எலெக்ட்ரிக் கார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரை போர்ஷே சூப்பர் கார்களுக்கே டஃப் கொடுக்கும் அழகில் எம்ஜி தயார் செய்திருக்கின்றது. ஹெட்லைட், முகப்பு பகுதியில் உள்ள ஏர் இன்டேக், அதன் கதவு திறக்கும் விதம் என அனைத்தும் அக்காருக்கு பலமடங்கு அதிக அழகை சேர்க்கக் கூடியவையாக இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, May 13, 2023, 7:54 [IST]
English summary
Mg cyberster roadster ev revealed in uk
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X