ரூ.40 லட்சத்தில் புதிய எம்ஜி கார்... இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! இவ்வளவு ஹைலைட்ஸ் இருக்கா?

புத்தம் புதிய எம்ஜி க்ளோஸ்டர் பிளாக்ஸ்டோர்ம் (MG Gloster Blackstorm) எடிசன் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. க்ளோஸ்டர் எஸ்யூவி காரின் இந்த புதிய ஸ்பெஷல் எடிசனை பற்றிய முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் விலையுயர்ந்த கார், க்ளோஸ்டர் எஸ்யூவி ஆகும். இத்தகைய லக்சரி எஸ்யூவி காரின் விற்பனையை மேலும் அதிகரிக்கும் பொருட்டே புதியதாக பிளாக் ஸ்டோர்ம் எடிசன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. க்ளோஸ்டரின் இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் ஆனது பெயருக்கேற்ப முழுவதுமாக கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டது.

mg gloster blackstorm edition launched

புதிய எம்ஜி க்ளோஸ்டர் பிளாக்ஸ்டோர்ம் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.40.29 லட்சத்தில் இருந்து ரூ.41.77 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பிரத்யேகமான பெயிண்ட்டை தவிர்த்து, காரின் இயந்திர பாகங்களில் வேறெந்த மாற்றமும் கொண்டுவரப்பட இல்லை. அதேபோல் காரின் நீளம், அகலம், உயரம் உள்ளிட்ட பரிணாம அளவுகளிலும் எந்த மாற்றமும் இல்லை. புதிய க்ளோஸ்டர் பிளாக் ஸ்டோர்ம் எடிசனை மெட்டல் கருப்பு அல்லது மெட்டல் ஆஷ் பெயிண்ட் தேர்வுகளில் ஒன்றில் தேர்வு செய்யலாம்.

இந்த 2 பெயிண்ட் தேர்வுகளிலும் கருப்பு நிறமே பெரும்பான்மையான பாகங்களுக்கு வழங்கப்பட்டு இருக்கும். அதேநேரம் சிவப்பு நிற ஹைலைட்கள் காரின் முன்பக்க ஹெட்லேம்ப்கள், சக்கரங்களில் பிரேக் காலிபர்கள், முன்/ பின் பம்பர்கள் மற்றும் விங் மிரர்களில் கொடுக்கப்பட்டு உள்ளது. இதேபோல் காருக்கு உள்ளேயும் கருப்பு-சிவப்பு நிறங்களை மட்டுமே பார்க்க முடிகிறது.

க்ளோஸ்டர் காரில் வழக்கமாக வழங்கப்படும் அத்தனை அம்சங்களையும் புதிய பிளாக் ஸ்டோர்ம் எடிசனில் பெறலாம். இதன்படி, 12 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, ட்யூயல் பனோராமிக் சன்ரூஃப் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை புதிய க்ளோஸ்டர் பிளாக் ஸ்டோர்ம் எடிசனில் பெற முடியும். க்ளோஸ்டரின் பாதுகாப்பு அம்சங்களில் முக்கியமானது நிலை-1 அடாஸ் ஆகும்.

இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் காரையும் 6 அல்லது 7 இருக்கை தேர்வுகளில் பெறலாம். ஆனால் க்ளோஸ்டரின் மற்ற வேரியண்ட்களை 7 இருக்கைகள் உடன் மட்டுமே பெற முடியும். 6-இருக்கை வெர்சனின் விற்பனை சமீபத்தில்தான் நிறுத்தி கொள்ளப்பட்டது. இதற்கு பதிலாக 8 இருக்கைகளுடன் க்ளோஸ்டர் காரை அறிமுகப்படுத்த எம்ஜி மோட்டார் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. 8-இருக்கை க்ளோஸ்டரில் 2வது மற்றும் 3வது இருக்கை வரிசைகளில் மேசை இருக்கை வழங்கப்படும்.

இந்தியாவில் க்ளோஸ்டர் இரு விதமான வெர்சன்களில் விற்பனை செய்யப்படுகிறது. ஒன்று 2-வீல்-டிரைவ் வெர்சன், இதில் 2.0 லிட்டர் சிங்கிள் டர்போ-டீசல் என்ஜின் (163 எச்பி) பொருத்தப்படுகிறது. அதுவே, 4-வீல்-டிரைவ் வெர்சனில் 2.0 லிட்டர் ட்வின் டர்போ-டீசல் என்ஜின் (218 எச்பி) பொருத்தப்படுகிறது. இந்த இரு என்ஜின்களுடனும் 8-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்தியாவில் எம்ஜி கார்கள் சற்று விலைமிக்கவைகளாக பார்க்கப்படுவதை மறுக்க முடியாது. அதிலிலும் குறிப்பாக, க்ளோஸ்டர் இந்தியாவில் எம்ஜி விற்பதிலேயே விலையுயர்ந்த காராக விளங்குகிறது. இத்தகைய காரில் புதிய பிளாக் எடிசன் எந்த அளவிற்கு வெற்றிக்கரமானதாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Monday, May 29, 2023, 16:47 [IST]
English summary
Mg gloster blackstorm edition launched in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+