முகேஷ் அம்பானி வாங்க போறதா சொன்னாங்க, ஆனா!! எம்ஜி மோட்டார் என்ன அதுக்குள்ள இப்படி செய்துவிட்டது!

எம்ஜி க்ளோஸ்டர் (MG Gloster) எஸ்யூவி காரின் வேரியண்ட்களுள் ஒன்றின் விற்பனை அதிரடியாக இந்தியாவில் நிறுத்தி கொள்ளப்பட்டுள்ளது. எந்த வேரியண்ட் அது? இதன் காரணமாக க்ளோஸ்டர் காரை இனி எந்தெந்த வேரியண்ட்களில் மட்டும் பெற முடியும்? என்பது குறித்த முழுமையான விபரங்களை இனி பார்க்கலாம்.

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் முழு-அளவு எஸ்யூவி கார் க்ளோஸ்டர் ஆகும். இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவில் தற்போதைக்கு விலையுயர்ந்த எம்ஜி கார் இது. 2021ஆம் ஆண்டில் க்ளோஸ்டர் எஸ்யூவியை எம்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டுவந்தது. சூப்பர், ஷார்ப் மற்றும் சாவி என 3 விதமான வேரியண்ட்களில் எம்ஜி க்ளோஸ்டர் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

mg gloster super variant discontinued

ஆனால் தற்போது இந்த மூன்றில், சூப்பர் வேரியண்ட்டின் விற்பனையை எம்ஜி நிறுவனம் அதிரடியாக நிறுத்தி கொண்டுள்ளது. க்ளோஸ்டர் காரில் விலை குறைவான, ஆரம்ப-நிலை வேரியண்ட்டாக சூப்பர் வழங்கப்பட்டு வந்தது. இந்த வேரியண்ட்டை 7 இருக்கைகளுடன் மட்டுமே பெற முடிந்தது. அதேபோல் 2-சக்கர-டிரைவ் வெர்சனில் மட்டுமே க்ளோஸ்டர் சூப்பர் வேரியண்ட் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.32.60 லட்சமாக இருந்தது. இந்த வேரியண்ட்டின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதால், இனி ஷார்ப் மற்றும் சாவி என்ற 2 வேரியண்ட்களில் மட்டுமே எம்ஜி க்ளோஸ்டர் விற்பனைக்கு கிடைக்கும். இதன் விளைவாக க்ளோஸ்டரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையும் ரூ.37.48 லட்சமாக மாறியுள்ளது. இந்த விலையில் ஷார்ப் வேரியண்ட் மேற்கூறப்பட்ட அதே 7-இருக்கைகள் மற்றும் 2-சக்கர-ட்ரைவ் சிஸ்டத்துடன் கிடைக்கும்.

இதே தேர்வுகளுடன் சாவி வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.39 லட்சம் ஆகும். ஷார்ப் வேரியண்ட்டை 7 இருக்கைகள் உடன் மட்டுமே வாங்க முடியும். ஆனால் சாவி வேரியண்ட்டை 6-இருக்கை வெர்சனிலும் வாங்கலாம். அதேபோல், சாவி வேரியண்ட்டை 4-சக்கர-டிரைவ் வெர்சனிலும் வாங்க முடியும். க்ளோஸ்டர் எஸ்யூவி காரின் அதிகப்பட்ச எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.42.38 லட்சம் ஆகும். இந்த விலையில் சாவி வேரியண்ட் 6 இருக்கைகளுடன், 4-சக்கர-ட்ரைவ் அமைப்புடன் கிடைக்கும்.

mg gloster super variant discontinued

க்ளோஸ்டரின் 2-சக்கர-டிரைவ் வெர்சன்களில் 2.0 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த டர்போ டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 161 பிஎச்பி மற்றும் 375 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. அதேநேரம், 4-சக்கர-டிரைவ் வெர்சன்களில் 2.0 லிட்டர் ட்வின்-டர்போ டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த ட்வின்-டர்போ டீசல் என்ஜின் மூலம் 215 பிஎச்பி மற்றும் 480 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம்.

இந்த இரு என்ஜின் தேர்வுகளுடனும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், க்ளோஸ்டர் ஷார்ப் வேரியண்ட்டில் இருந்தே கனெக்டட் கார் தொழிற்நுட்பத்துடன் 12.3-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், பவர்டு முன் இருக்கைகள், 3-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், பனோராமிக் சன்ரூஃப், டிரைவர் சீட் வெண்டிலேஷன் மற்றும் மிக முக்கிய அம்சமாக அடாஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: சூப்பர் வேரியண்ட்டின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதனால் எம்ஜி க்ளோஸ்டர் மேலும் விலைமிக்கதாக மாறியுள்ளது. ஏற்கனவே க்ளோஸ்டருக்கு இந்தியாவில் பெரிய அளவில் வரவேற்பு இல்லை. இப்படிப்பட்ட நேரத்தில் இந்த காரின் எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்டின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. இது க்ளோஸ்டரின் விற்பனையை எந்த அளவிற்கு பாதிக்கவுள்ளது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Saturday, May 13, 2023, 19:39 [IST]
English summary
Mg gloster super variant discontinued in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+