திடீரென விலையேறிய எம்ஜி கார்! ஆனா இந்த காரை வாங்குறவங்களுக்கு இது வெறும் டீ செலவு தான்!
எம்ஜி மோட்டார் நிறுவனம் தற்போது தனது ஹெக்டர் காருக்கான விலையை அதிகரித்துள்ளது. இதனால் தற்போது ஹெக்டர் கார் ரூபாய் 15 லட்சம் என்ற ஆரம்ப விலையிலும் ஹெக்டர் பிளஸ் கார் ரூ 17.8 லட்சம் என்ற ஆரம்ப விலையிலும் விற்பனையாகி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் காலடித்தடத்தை பிடித்து மிக விரைவிலேயே மிகப்பெரிய உச்சத்தை பெற்ற நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் கார்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. பலர் எம்ஜி கார்களுக்கு ரசிகர்களாகவே மாறிவிட்டனர். இருந்தாலும் எம்ஜி நிறுவனம் ப்ரீமியம் ரக கார்களையே அதிகம் விற்பனை செய்து வருவதால் விற்பனை எண்ணிக்கை சற்று குறைவாக தான் இருக்கிறது. இந்நிலையில் எம்ஜி நிறுவனத்தின் ஆஸ்தான காரணியை அந்நிறுவனம் தற்போது உயர்த்தி உள்ளது.

மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்ற காராக இருக்கிறது. அந்நிறுவனத்தில் அதிகம் விற்பனையாகும் காராகவும் இருக்கிறது. இந்நிலையில் அந்நிறுவனம் இந்த காரின் விலையை உயர்த்தியதன் மூலம் எம்ஜி ஹெட்டர் கார் குறைந்தபட்ச விலை 15 லட்சம் எனவும் எம்ஜி ஹெக்டர் பிளஸ் கார் குறைந்தபட்ச விலையான ரூபாய் 17.8 லட்சம் எனவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த கார் மொத்தம் ஆறு விதமான வேரியண்ட்களில் விற்பனையாகி வருகிறது. ஸ்டைல், ஷைன், ஸ்மார்ட், ஸ்மார்ட் ப்ரோ, ஷார்ப் ப்ரோ, ஷாவி ப்ரோ ஆகிய வேரியன்ட் விற்பனையாகி வரும் நிலையில் ரூபாய் 40 ஆயிரம் வரை விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களில் இந்த கார் விற்பனையாகி வரும் நிலையில் இந்த இரு வேரியன்ட்களிலும் விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பெட்ரோல் வேரியன்டில் ஸ்டைல் வேரியன்ட் காருக்கு ரூபாய் 27 ஆயிரம், ஷைன் வேரியன்ட் காருக்கு ரூபாய் 31,000, ஸ்மார்ட் மற்றும் ஸ்மார்ட் எக்ஸ் வேரியண்ட் காரர்களுக்கு ரூபாய் 35 ஆயிரம், ஸ்மார்ட் ப்ரோ மற்றும் ஷார்ப் ப்ரோ வேரியன்ட் கார்களுக்கு ரூபாய் 40,000 சாவி ப்ரோ காருக்கு ரூபாய் 35,000 விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல டீசல் வேரியன்டை பொறுத்தவரை ஸ்மார்ட் வேரியன்டிற்கு ரூபாய் 24 ஆயிரம் ஸ்மார்ட் ப்ரோ மற்றும் ஷார்ப் ப்ரோ வேரியன்ட் காருக்கு ரூபாய் 40 ஆயிரம் வரையிலும் விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால் தற்போது இந்த காரை வாங்கும் நபர்கள் அதிகமாக விலை கொடுக்க வேண்டியது இருக்கும். மார்க்கெட்டில் நன்றாக இந்த கார் விற்பனையாகி வரும் நிலையில் திடீரென இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்ஜி ஹெக்டர் காரை பொருத்தவரை 1.5லி டர்போ சார்ஜர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 143எச்பி பவரையும் 250என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த இன்ஜின் 6ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி இயர் பாக்ஸுடன் இணைக்கப்படுகிறது. மற்றொரு இன்ஜின் ஆப்ஷன் ஆக 2.0லி டர்போ சார்ஜர் டீசல் இன்ஜின் இருக்கிறது. இது 170எச்பி பவரையும் 350என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
விலை உயர்வுக்கு பிறகு எம்ஜி ஹெக்டர் கார் ரூ15 லட்சம் முதல் ரூ22 லட்சம் விலையில் விற்பனையாகி வருகிறது. அதை எம்ஜி ஹெக்டர் பிளஸ் கார் ரூ17.79 லட்சம் முதல் ரூ22.5 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. மார்க்கெட்டில் உள்ள அதன் போட்டி காரின் விலையை ஒப்பிடும்போது கிட்டத்தட்ட அதே விலையில் தான் இந்த காரும் இருக்கிறது, என்பதால் விற்பனையில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த எம்ஜி ஹெக்டர் காருக்கான விலையை கடந்த செப்டம்பர் மாதம் அந்நிறுவனம் ரூபாய் 1.37 லட்சம் வரை குறைத்திருந்தது. தற்போது அதன் பின்பு விலை உயர்வை அறிவித்துள்ளது. பண்டிகை காலம் என்பதால் விலை குறைப்பை செய்து அதன் விற்பனையை அதிகப்படுத்த அந்நிறுவனம் முயற்சி செய்திருந்தது. தற்போது அந்த முயற்சிக்கு பலன் கிடைத்துள்ள நிலையில் மீண்டும் விளைவு உயர்வை அறிவித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி நிறுவனம் தற்போது தனது ஹெக்டர் காருக்கான விலை உயர்வை அறிவித்ததன் மூலம் அடுத்தடுத்து கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் கார்களில் விலையை அதிகரிக்க முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு அடுத்த மாதம் இறுதியில் வர இருப்பதால் அந்த நேரத்தில் கார் விற்பனை அதிகமாகும் என்பதால் சில நிறுவனங்கள் அதற்கு பிறகு கார் விலையை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.


Click it and Unblock the Notifications









