எம்ஜி நிறுவனத்துக்கு என்னதான் ஆச்சு!! ஹெக்டர் காரை வாங்க இன்னும் அதிக பணத்தை கொட்டனும் - விலை அதிகரிப்பு!!

எம்ஜி ஹெக்டர் (MG Hector) காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் அதிரடியாக ரூ.61,000 வரையில் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வுடன் ஹெக்டர் காரில் கொண்டுவரப்பட்டுள்ள மற்ற சில மாற்றங்கள் என்னென்ன என்பதை பற்றி இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிரிட்டிஷ் கார் தயாரிப்பு நிறுவனமான எம்ஜி மோட்டார் இந்தியாவில் முதலாவதாக அறிமுகப்படுத்திய கார் ஹெக்டர் ஆகும். இந்திய சந்தையில் தற்சமயம் எம்ஜி நிறுவனம் அடைந்திருக்கும் வெற்றி அனைத்திற்கும் பிள்ளையார் சுழி போட்டு வைத்தது ஹெக்டர் ஆகும். பல்வேறு வெளிநாட்டு சந்தைகளில் சிறப்பான வரவேற்பை பெற்ற ஹெக்டரை இந்தியாவில் கடந்த 2019இல் எம்ஜி நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

mg hector suv prices increased

அதன்பின் சில பல மாற்றங்கள் இந்த காரில் கொண்டுவரப்பட்டன. கடைசியாக, இந்த 2023ஆம் ஆண்டின் துவக்கத்தில் கூட ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் ஹெக்டரில் கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஹெக்டரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.27,000இல் இருந்து ரூ.61,000 வரையில் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வினால் ஹெக்டரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.15 லட்சத்தை தொட்டுள்ளது.

அதாவது இதுதான் இந்தியாவில் எம்ஜி ஹெக்டர் காரின் குறைவான விலை ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை என்பதை மறந்துவிட வேண்டாம். ஆன்-ரோடு விலை இன்னும் அதிகமாக வரும். புதிய விலை அதிகரிப்பினால், ஹெக்டரின் அதிகப்பட்ச எக்ஸ்-ஷோரூம் விலையும் ரூ.22.12 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வுகளுக்கு ஏற்ப எம்ஜி ஹெக்டர் காரில் எந்த அப்டேட்டும் கொண்டுவரப்படவில்லை.

mg hector suv prices increased

ஆனால், எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காரில் மீண்டும் ஷைன் வேரியண்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்பு விற்பனையில் இருந்த இந்த வேரியண்ட்டை சில பல காரணங்களினால் எம்ஜி மோட்டார் நிறுவனம் நிறுத்தி இருந்தது. தற்போது மீண்டும் விற்பனைக்கு வந்துள்ள எம்ஜி ஹெக்டர் ஷைன் காரை 3 விதமான தேர்வுகளில் வாங்கலாம். ஒன்று பெட்ரோல்-மேனுவல், மற்றொன்று பெட்ரோல்-சிவிடி மற்றும் 3வது டீசல்-மேனுவல் ஆகும்.

இதில் பெட்ரோல்-மேனுவல் தேர்வில் ஹெக்டர் ஷைன் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.16.34 லட்சமாகவும், மற்ற இரு தேர்வுகளில் முறையே ரூ.17.54 லட்சம் மற்றும் ரூ.18.59 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய ஷைன் வேரியண்ட்டை 5-இருக்கை வெர்சனில் மட்டுமே பெற முடியும், அளவில்-பெரிய ஹெக்டர் பிளஸ் காரில் பெற முடியாது. ஷைன் வேரியண்ட் ஆனது ஹெக்டர் கார் வரிசையில் ஆரம்ப-நிலை ஸ்டை ல் வேரியண்ட்டிற்கு அடுத்து நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

mg hector suv prices increased

ஸ்டைல் வேரியண்ட்டில் வழங்கப்படாதவை, ஆனால் அதற்கடுத்துள்ள ஷைன் வேரியண்ட்டில் கிடைக்கக்கூடியவை என்று, க்ரூஸ் கன்ட்ரோல், என்ஜின் ஸ்டார்ட்/ ஸ்டாபிற்கு பொத்தான், ஆட்டோமேட்டிக் டர்ன் இண்டிகேட்டர்கள், சிங்கிள்-பேன் எலக்ட்ரிக் சன்ரூஃப், ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி உடன் 10.4-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவற்றை சொல்லலாம். அத்துடன் சிவிடி தேர்வில் கூடுதலாக டிரைவ் மோட் செலக்ட் மற்றும் கீலெஸ் எண்ட்ரீயை பெறலாம்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: கடந்த 2023 ஜனவரி மாதத்தில் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை பெற்ற போதுதான் எம்ஜி ஹெக்டரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் அதிகரிக்கப்பட்டன. தற்போது இந்த வருடத்தில் 2வது முறையாக ஹெக்டர் எஸ்யூவி காரின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. இருப்பினும் 6 அல்லது 7 இருக்கைகள் உடன் கிடைக்கும் ஹெக்டர் பிளஸ் காரின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

More from DriveSpark

Article Published On: Monday, May 15, 2023, 17:06 [IST]
English summary
Mg hector suv prices increased new trim level launched
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X