என்னங்க பெரிய ரோல்ஸ் ராய்ஸ்.. எம்ஜியோட இந்த காருக்கு முன்னாடி க்ரூஸ் கப்பலே தோத்திடுங்க! விலையும் ரொம்ப கம்மி!

எம்ஜி நிறுவனம் மேக்ஸஸ் 9 (MG Maxus 9) எனும் எலெக்ட்ரிக் காரை தாய்லாந்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்து ஒட்டுமொத்த உலக நாடுகளையும் பொறாமையில் ஆழ்த்தி இருக்கின்றது. இது ஓர் எம்பிவி ரக காராகும். எம்ஜி அறிமுகம் செய்திருக்கும் இந்த எலெக்ட்ரிக் கார் மாடலுக்கு உலகளவில் எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.

குறிப்பாக, இந்தியாவில் இந்த காரை 2023 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்த பின்னர், அதன் வருகை எப்போது அமையும் என பலர் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். மிக முக்கியமாக சொகுசு கார் பிரியர்கள் மத்தியில் இந்த எண்ணம் சற்று கூடுதலாக இருக்கின்றது.

Mg maxus 9

இந்த மாதிரியான சூழலிலேயே இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த எம்ஜி, அந்த சூப்பரான காரை தாய்லாந்தில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. இந்தியாவில் இந்த காரை எம்ஜி நிறுவனம் மைஃபா 9 எனும் பெயரில் காட்சிப்படுத்தியது குறிப்பிடத்தகுந்தது. இந்த பெயரையே ரீ-பேட்ஜ் செய்து எம்ஜி நிறுவனம் தற்போது தாய்லாந்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

அதாவது, மைஃபா 9 (Mifa 9) எனும் பெயரை மாற்றி மேக்ஸஸ் 9 எனும் பெயரில் அறிமுகம் செய்திருக்கின்றது. இதைத்தொடர்ந்து, இன்னும் கணிசமான அளவில் மாற்றங்கள் மேக்ஸஸில் செய்யப்பட்டு இருக்கின்றன. அதாவது, தாய்லாந்து சந்தைக்கு ஏற்ப ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.

Mg maxus 9 seat

மேலும், இதற்கு தாய்லாந்து கரன்சி மதிப்பில் 2,499 மில்லியன் பாத்கள் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக 60 லட்சம் ரூபாய் ஆகும். இந்த விலையில் இந்தியாவில் ஓர் ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) காரையே வாங்கிவட முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆனால், ஃபார்ச்சூனர் காரைக் காட்டிலும் மிக அதிக சிறப்புகளைத் தாங்கிய வாகனமாக மேக்ஸஸ் 8 உருவாக்கப்பட்டு இருக்கின்றது. குறிப்பாக அதிக இட வசதிக் கொண்டதாக அது காட்சிளிக்கின்றது. நீளம் 5,270 மிமீட்டரையும், அகலம் 2,000 மிமீட்டரையும், உயரம் 1,840 மிமீட்டரையும் கொண்டதாக இருக்கின்றது. இதன் வீல்பேஸ் நீளம் 3,200 மிமீட்டராக இருக்கின்றது.

Mg maxus 9 sunroof

இதை வைத்து பார்க்கையில் மிக மிக தாராளமான இட வசதியை இந்த காரில் பெற்றுக் கொள்ள முடியும் என்பது தெளிவாக தெரிகின்றது. ஆட்டோமேட்டிக் ஸ்லைடிங் கதவுகள், இரண்டாவது வரிசையில் கேப்டைன் இருக்கைகள், இருக்கைகளில் வெண்டிலேட் வசதி மற்றும் மசாஜ் வசதி என எக்கசக்க அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் பலவும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. அந்தவகையில், இரு ஐ-பாட் போன்ற திரைகள் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஒன்று இன்ஸ்ட்ரூமென்டேசன் திரையாகவும், மற்றொன்று டிரைவருக்கான திரையாகவும் செயல்படும். இதைத்தொடர்ந்து, காரில் பயணிக்கும்போது வான்வெளியின் அழகை ரசித்த வண்ணம் பயணிக்க பெரிய சன்ரூஃப் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

Mg maxus 9 side view

இதைத்தொடர்ந்து, தொட்டாலே கன்ட்ரோல் ஆகும் ஏசி சிஸ்டம், ஆர்ம் ரெஸ்ட், கப் ஹோல்டர்கள், ஒயர்லெஸ் சார்ஜிங் கருவி, 64 வண்ணங்கள் அடங்கிய ஆம்பியன்ட் லைட், பின் பக்கத்திற்கான பிரத்யேக க்ளைமேட் கன்ட்ரோல் ஸோன், 12 ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டம், 9 யுஎஸ்பி போர்ட்டுகள், கேமிராவுடன் கூடிய ஐஆர்விஎம் மற்றும் 2.5 ஏர் ஃபில்டர் ஆகியவை எம்ஜி மேக்ஸஸ் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இத்தகைய பிரமாண்ட வசதிகளை உட்புறத்தில் தாங்கிய வாகனமாகவே மேக்ஸஸ் 9 காட்சியளிக்கின்றது. இதேபோல் இதன் வெளிப்புறமும் சற்றும் அழகிற்கு குறைச்சல் இல்லாத காராக காட்சியளிக்கின்றது. எல்இடி லைட் மற்றும் அழகை அதிகப்படுத்தும் அணிகலன்கள் ஆகியவற்றால் இந்த கார் மிக சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது.

இதேபோல், இந்த காரை அதிக ரேஞ்ஜ் தரும் வாகனமாகவும் எம்ஜி உருவாக்கி இருக்கின்றது. இது ஓர் முழு சார்ஜில் 540 கிமீ தூரம் வரை பயணிக்கும். இதற்காக 90 kWh battery பேட்டரி பேக் மேக்ஸஸ் 9 எலெக்ட்ரிக் காரில் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும், 245 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க் ஆகியவற்றையும் இது வெளியேற்றும். இந்த காரில் கூடுதல் தொழில்நுட்ப கருவிகளாக அடாஸ் தொழில்நுட்பம், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், டிபிஎம்எஸ், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா போன்றவை வழங்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த அம்சங்களே "என்னங்க பெரிய ரோல்ஸ் ராய்ஸ், அதையே மிஞ்சக் கூடிய வாகனமா இது இருக்கு" என கூறும் அளவிற்கு இருக்கின்றது. இந்த காரின் இந்திய வருகை எப்போது அமையும் என இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு வரவேற்பு பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. ஆகையால், அடுத்த சில மாதங்களில் இதை எம்ஜி நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, May 5, 2023, 8:54 [IST]
English summary
Mg mifa 9 ev launched in thailand with name of maxus 9
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X