இன்னும் கொஞ்ச நாள்ல இந்த கார் எதிர்த்த வீட்ல, பக்கத்து வீட்ல இருக்குது உங்க வீட்ல இல்லயான்னு கேப்பாங்க!

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் கடந்த ஜூலை மாத விற்பனை அறிக்கை வெளியாகி உள்ளது. அதன்படி நிறுவனம் ஒரே ஆண்டில் 24.89 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. இந்நிறுவனத்தின் எத்தனை காரர்கள் விற்பனையாகியுள்ளது? வளர்ச்சி எப்படி இருக்கிறது? என்று விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஆகஸ்ட் மாதம் பிறந்து விட்ட நிலையில் கார் தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் வரிசையாக கடந்த ஜூலை மாத விற்பனை விவரங்களை தற்போது வெளியிட்டு வருகின்றனர். அதன்படி எம்ஜி நிறுவனம் தனது ஜூலை மாத விற்பனை விபரத்தை வெளியிட்டுள்ளது. அதில் இந்நிறுவனம் கணிசமான அளவு வளர்ச்சியை சந்தித்துள்ளது.

mg sales report

இந்த அறிக்கையின் படி எம்ஜி மோட்டார் நிறுவனம் கடந்த ஜூலை மாதம் மட்டும் 5012 கார்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாத விற்பனையை ஒப்பிடும்போது இது 24.89 சதவீதம் வளர்ச்சியாக இருக்கிறது. கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் மொத்தம் 4013 கார்கள் விற்பனையாகி இருந்தது.

ஒரே ஆண்டில் எம்ஜி நிறுவனத்தின் விற்பனை 999 கார்கள் அதிகரித்துள்ளது. இது மார்க்கெட்டில் ஏற்படும் வாய்ப்பை எம்ஜி நிறுவனம் எவ்வாறு தனக்காக பயன்படுத்திக் கொள்கிறது என்பதை காட்டுகிறது. வாடிக்கையாளருக்கு ஏற்ற அதே நேரம் விற்பனையை அதிகரிக்க செய்யும் வகையில் தனது தயாரிப்புகளை தயாரித்துள்ளது. அதன் மார்க்கெட்டிங் நுட்பமும் சிறப்பாக இருக்கிறது.

தற்போது மார்க்கெட் நிலவரம் எம்ஜி கார்களுக்கு ஏற்றவாறு இருப்பதால் இந்த தயாரிப்புகள் மார்க்கெட்டில் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன. எம்ஜி நிறுவனம் கோமெட் என்ற புதிய சிறிய காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது எம்ஜி நிறுவனத்தின் இரண்டாவது எலக்ட்ரிக் காராகும். விரைவில் எம்ஜி நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கார்களின் அணிவகுப்பை பெரிதாக்கும் என எதிர்பார்க்கலாம்.

எம்ஜி நிறுவனத்தின் கடந்த ஆண்டு விற்பனையை விட இந்த ஆண்டு விற்பனை சிறப்பாக இருந்தாலும் கடந்த ஜூன் மாத விற்பனையை ஜூலை மாத விற்பனையுடன் ஒப்பிடும்போது 2.13 சதவீத விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஜூன் மாதத்தை விட ஜூலை மாதத்தில் 109 கார்கள் குறைவாக விற்பனையாகி உள்ளன.

இது ஒரு சின்ன சரிவு தான். சீசன் மாற்றங்கள் மற்றும் தற்காலிக மார்க்கெட் கண்டிஷன்கள் வைத்து இந்த விற்பனை சரிவை சந்தித்துள்ளது. இருந்தாலும் எம்ஜி நிறுவனம் தொடர்ந்து இந்த விற்பனையை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அடுத்தடுத்த மாதங்களில் விற்பனை பெரிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்க்கெட்டில் தனது இடத்தை தக்கவைத்துக் கொள்ளவும் தொடர்ந்து முன்னேறவும் எம்ஜி நிறுவனம் பல்வேறு யுக்திகளை கையாளுகிறது. சரியான நேரத்திற்கு புதிய கார் அறிமுகங்கள். சரியாஜ நேரத்திற்கு புதிய வகை கார்களை களம் இறக்குவது, மார்க்கெட் குறித்த ஆய்வுகளை நடத்துவது, வாடிக்கையாளர்களின் விருப்பங்களை அவ்வப்போது தெரிந்து கொள்வது உள்ளிட்டவற்றை செய்து கொண்டிருக்கிறது.

எம்ஜி நிறுவனம் தனது தயாரிப்புகளை வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட மாற்றங்களை செய்து வருகிறது. புதிய புதிய கண்டுபிடிப்புகளை தன் தயாரிப்புகள் புகுத்தி வருகிறது. வாடிக்கையாளர்கள் திருப்தியாக அளிக்கும் வகையில் சேவைகளை வழங்குகிறது. ஒருமுறை எம் ஜி காரை வாங்கி விட்டால் அவர் அடுத்த காரும் எம்ஜி கார் தான் வாங்க வேண்டும் என யோசிக்க வைக்கும் அளவிற்கு சேவைகளை வழங்குகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒட்டுமொத்தமாக பார்த்தால் எம்ஜி நிறுவனம் கடந்த ஜூலை மாதம் வருட விற்பனை வகையில் வளர்ச்சியையும், மாத விற்பனை வகையில் வீழ்ச்சியையும் சந்தித்திருந்தாலும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது எம்ஜி நிறுவனத்திற்கு ஜூலை மாதம் சிறப்பான விற்பனை தான் ஏற்பட்டுள்ளது. ஒரே மாதத்தில் 5000 கார்களை விற்பனை செய்து மார்க்கெட்டில் தனக்கான ஒரு இடத்தை உறுதி செய்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 1, 2023, 20:30 [IST]
English summary
Mg motor achieves remarkable july 2023 sales growth
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+