டூவீலர் போல இனி மின்சார காரும் எல்லார் வீட்டிலும் இருக்கும்! குட்டி இ-காரின் இந்திய வருகையை உறுதி செய்த எம்ஜி!

எம்ஜி நிறுவனத்தின் குட்டி எலெக்ட்ரிக் இந்தியாவில் விற்பனைக்கு வர இருப்பது உறுதியாகி உள்ளது. நிறுவனம் இதுகுறித்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கின்றது. எம்ஜி கோமெட் (MG Comet) எனும் பெயரிலேயே இந்த குட்டி எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வர இருக்கின்றது. கடந்த காலங்களில் ஏர் இவி (Air Ev) என இந்த மின்சார கார் குறிப்பிடப்பட்டு வந்தது கவனிக்கத்தகுந்தது.

நீண்ட காலமாக சோதனை ஓட்டத்தில் இந்த கார் ஈடுபட்டு வந்தநிலையில் இப்போதே அது விற்பனைக்கு தயாராக இருக்கின்றது. இந்த நிலையிலேயே எலெக்ட்ரிக் காரின் இந்திய வருகையை எம்ஜி உறுதி செய்துள்ளது. டாடா மோட்டார்ஸின் மலிவு விலை எலெக்ட்ரிக் கார்களுக்கு போட்டியாகவே இதனை எம்ஜி இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

எம்ஜி

கோமெட் என்கிற பெயர் 1934 இல் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா மேக் ராபர்ட்சன் ஏர் ரேஸின் (England Australia MacRobertson Air Race)-போது பயன்படுத்தப்பட்ட விமானத்தின் பெயர் ஆகும். இதையே தனது குட்டி காருக்கு எம்ஜி சூட்டி இருக்கின்றது. இந்த விமானம் இங்கிலாந்து சார்பாக பங்கேற்றது. நகர்புற பயன்பாட்டிற்கு ஏற்ற எலெக்ட்ரிக் கார் இது ஆகும்.

இதன் உருவம் சற்று சிறியது என்பதால் ஆட்டோவைப் போல் குட்டி குட்டி சந்து-பொந்துகளில்கூட செல்ல பயன்படுத்திக் கொள்ள முடியும். இத்தகைய சிறந்த வசதிக் கொண்டதே எம்ஜி கோமெட். இதுமட்டுமில்லைங்க, அதி நவீன வசதிகள் கொண்டதாகவும் இந்த காரை எம்ஜி நிறுவனம் உருவாக்கி இருக்கின்றது.

எம்ஜி

புரஜெக்டர் ரக ஹெட்லேம்ப், அகலமான ஏர் டேம், எல்இடி பகல் நேர மின் விளக்கு, காரின் கதவுகளிலேயே பொருத்தப்பட்ட ஓஆர்விஎம் மற்றும் ஸ்டீல் வீல்கள் என பலவற்றால் இந்த கார் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த அம்சங்கள் அனைத்தும் காருக்கு கண் கவர் தோற்றத்தை வழங்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

இதுதவிர, பெரிய ஒற்றை துண்டு ஸ்டைலிலான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், மெல்லிய ஏசி வெண்டுகள், ஏசியைக் கன்ட்ரோல் செய்ய ரோட்டரி க்னாப்புகள் போன்ற அம்சங்களும் எம்ஜி கோமெட்டில் வழங்கப்பட்டு உள்ளன. இதுமட்டுமில்லைங்க இன்னும் பல்வேறு சிறப்பு வசதிகளைத் தாங்கிய வாகனமாகவே எம்ஜி கோமெட் உருவாக்கப்பட்டு இருக்கின்றது.

எம்ஜி

இது ஓர் இரண்டு கதவுகள் கொண்ட வாகனம் ஆகும். இந்த காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 300 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த ரேஞ்ஜ் திறனே டாடா டியாகோவிற்கு எம்ஜி கோமெட் மிக சிறந்த போட்டியாளனாக விளங்கும் என்பதற்கு சான்றாக இருக்கின்றது.

இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக எலெக்ட்ரிக் காரில் 26.7 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பேட்டரி பேக்கில் மட்டுமில்லைங்க, மற்றுமொரு சிறிய பேட்டரி பேக் தேர்விலும் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கும். 17.3 kWh பேட்டரி பேக்கிலேயே அது கிடைக்கும். இதுவே மிக மலிவு விலையில் விற்கப்பட உள்ளது.

எம்ஜி

இந்த பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 200 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய சூப்பரான எலெக்ட்ரிக் காரையே எம்ஜி நிறுவனம் இன்னும் ஒரு சில தினங்களில் நம் நாட்டில் அறிமுகம் செய்து வைக்க இருக்கின்றது.

இதற்கு ரூ. 8 லட்சம் அல்லது ரூ. 10 லட்சத்திற்கும் குறைவான விலையையே நிறுவனம் நிர்ணயிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் டாடா டியாகோ இவி மற்றும் சிட்ரோன் இசி3 ஆகிய எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கு மிக சிறந்த போட்டியாளனாக இருக்கும். எம்ஜி நிறுவனம் இப்போதைய நிலவரப்படி இந்திய சந்தையில் இசட்எஸ் இவி எனும் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இதன் ஆரம்ப விலையே ரூ. 23.38 லட்சம் ஆகும். இத்தகைய அதிக விலையை இக்கார் கொண்டிருப்பதால் இந்தியாவின் செல்வந்தர்களை மட்டுமே அது கவர்ந்துக் கொண்டிருக்கின்றது. ஆகையால், எளிய மற்றும் நடுத்தர மக்களையும் கவரும் விதமாகவே நிறுவனம் கோமெட் காரை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 2, 2023, 16:09 [IST]
English summary
Mg motor confirms smart ev comet india launch
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X