இந்த மாசம் எம்ஜி காரை வாங்குனா ரூ1.5 லட்சம் மிச்சம் பண்ணலாம்! உடனே ஷோரூம்க்கு ஓடுங்க!

2023 ஆம் ஆண்டு இறுதி மாதம் தற்போது நடந்துவரும் நிலையில் இந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையில் வாகனங்களை விற்க வேண்டும் என்பதற்காக எம்ஜி நிறுவனம் தனது வாகனங்களுக்கான அதிக தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. அதன்படி தற்போது எம்ஜி நிறுவனங்களின் வாகனங்களை வாங்கும்போது ரூபாய் 1.5 லட்சம் வரை தள்ளுபடிகளை பெற முடியும். இது குறித்த விரிவான விபரத்தை காணலாம் வாருங்கள்.

ஆண்டு இறுதி மாதம் நடந்து வரும் நிலையில் தற்போது வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை விற்பனை செய்ய வேண்டும் என்பதால் அதிகமான தள்ளுபடிகளை அறிவித்துள்ளனர். அதன்படி மாருதி முதல் பல முக்கிய வாகன தயாரிப்பு நிறுவனங்களை தள்ளுபடிகளை அறிவித்துள்ள நிலையில் எம்ஜி நிறுவனமும் தனது வாகனங்களுக்கான தள்ளுபடி அறிவித்துள்ளது. எம்ஜி கார்களை தற்போது ரூ1.5 லட்சம் வரையில் தள்ளுபடி விலையில் பெற வாய்ப்புகள் உள்ளன.

mg motor December Discount

அதன்படி எம்ஜி அஸ்டார் என்ற மிட் சைஸ் எஸ்யூவி காரை பொறுத்தவரை தள்ளுபடியாக காரின் விலையில் இருந்து ரூபாய் 1 லட்சமும் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியாக ரூபாய் 50,000 என மொத்தம் ரூபாய் 1.5 லட்சம் தள்ளுபடி விலையில் இந்த காரை வாங்க முடியும். காரின் விலையில் இருந்து ரூபாய் 1 லட்சமும் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியாக ரூபாய் 50,000 வழங்கப்படுகிறது.

இதே தான் எம்ஜி ஸிஎஸ் காரிலும் இருக்கிறது. இது ஒரு எலக்ட்ரிக் காராகும். இந்த காரின் விலையில் ரூ1 லட்சம் தள்ளுபடியும், எக்ஸ்சேஞ்ச் போனதாக ரூ50,000 என மொத்தம் ரூ1.5 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டர் கார் என்பது பிரபலமான காராகும். இந்த காரின் விற்பனையை இந்த மாதம் அதிகரிக்க இந்த காருக்கும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

mg motor December Discount

அதன்படி எம்ஜி ஹெக்டர் காருக்கு அதன் விலையில் இருந்து ரூ50,000 கூடுதலாக எக்சேஞ்ச் போனதாக ரூ50,000 என மொத்தம் ரூ1 லட்சம் வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல எம்ஜி நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய கோமட் என்ற இவி காருக்கும் ரூ65,000 வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எம்ஜி நிறுவனம் குலோஸ்டர் காரை தற்போது டெஸ்ட் செய்து வருகிறது. இந்த கார் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

எம்ஜி நிறுவனம் வழங்கும் இந்த தள்ளுபடிகளை பெற வேண்டும் என்றால் நீங்கள் நேரடியாக எம்ஜி நிறுவனத்தின் இணையதளத்திலோ அல்லது அருகில் உள்ள எம்ஜி ஷோரூம் சென்று உங்கள் காரை புக் செய்யலாம். இந்நிறுவனத்தின் கார்களை குறைந்த விலையில் வாங்க இதுவே கடைசி சந்தர்ப்பமாக இருக்கிறது. வரும் ஜனவரி மாதம் முதல் எம்ஜி நிறுவனத்தின் கார்களின் விலை அதிகரிக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

mg motor December Discount

எம்ஜி நிறுவனம் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள பல முக்கிய வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் ஜனவரி மாதம் முதல் தங்கள் வாகனங்களின் விலையை அதிகரிக்கப் போவதாக அறிவித்துள்ளது. இதற்கு ஒவ்வொரு நிறுவனங்களும் ஒவ்வொரு விதமான காரணங்களை சொல்லுகின்றன. எம்ஜி நிறுவனம் தனது அடுத்த முக்கிய தயாரிப்பாக கோமட் என்ற இவி காரை மையப்படுத்திய காம்பேக்ட் எஸ்யூவி காரை எலெக்ட்ரிக் காராக அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது.

அடுத்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் இந்த கார் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் எலெக்ட்ரிக் கார்கள் பிரிவில் எம்ஜி நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சியை சந்திக்க காத்திருக்கிறது. எம்ஜி நிறுவனத்தின் இந்த முன்னெடுப்பால் எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் கார்கள் பிரபலமாகும் போது எம்ஜி நிறுவனத்திடம் ஏகப்பட்ட கார்கள் இருக்க வாய்ப்புள்ளது. எம்ஜி நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் கார்களை தான் அதிகம் தயாரித்து அறிமுகப்படுத்தி வருகிறது.

எம்ஜி நிறுவனம் இந்தியாவில் காலடித்தலத்தை எடுத்து வைத்தவுடன் ஹெக்டர் என்ற காரின் மூலம் மக்களின் மனதை இடம் பிடித்து விட்டது. எம்ஜி நிறுவனத்தின் கார்கள் தரமானதாகவும் அதிக தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்ததாகவும் இருக்கும் என மக்கள் மத்தியில் ஒரு நல்ல பெயரை பெற்றுவிட்டது. இதனால் இந்த கார்களின் விற்பனைக்கு நிச்சயம் அதிகமாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2023-ம் ஆண்டு இறுதி மாதம் என்பதால் இந்த மாதம் அதிக எண்ணிக்கையில் வாகனங்களை விற்பனை செய்ய வேண்டும் என வாகன தயாரிப்பு நிறுவனங்கள் விலையை அதிக அளவு குறைத்துள்ளன. அதே நேரம் அடுத்த மாதம் விலை அதிகமாக போவதால் விற்பனை சரியும் இதை ஈடு கட்டுவதற்காக இந்த மாதம் அதிகமான தள்ளுபடிகளை அறிவித்து விற்பனையை சரிகட்ட திட்டமிட்டுள்ளனர்.

More from DriveSpark

Article Published On: Saturday, December 9, 2023, 11:14 [IST]
English summary
Mg motor december discount up to 1 5lakh off on hector to astor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X