இந்த எம்ஜி காரை வாங்கனும் நினைச்சா இப்போவே புக் பண்ணுங்க!! இல்லைனா அப்புறம் ரொம்ப வருத்தப்படுவீங்க!

எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனம் அதன் ஹெக்டர் எஸ்யூவி கார்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை ரூ.40,000 வரையில் அதிரடியாக உயர்த்தி உள்ளது. எம்ஜி ஹெக்டர் கார்களின் புதிய விலைகள்...

அதிகரித்துவரும் உற்பத்தி செலவீனங்களினாலும், கார் பாகங்களின் விலைகளினாலும் வாகனங்களின் விலைகளை குறிப்பிட்ட காலத்தில் அதிகரிக்க வேண்டிய கட்டாயம் வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஏற்படுகிறது. இந்த வகையில், எம்ஜி மோட்டார் நிறுவனம் அதன் பிரபலமான ஹெக்டர் எஸ்யூவி கார்களின் விலைகளை கணிசமாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

mg increase hector cars prices

பிரிட்டிஷ் கார் நிறுவனமான எம்ஜி மோட்டார் இந்தியாவில் கடந்த 2019இல் நுழைந்தவுடன் அறிமுகப்படுத்திய முதல் கார் ஹெக்டர் ஆகும். அதன்பின், சில மாதங்கள் கழித்து ஹெக்டரின் 6/ 7-இருக்கை வெர்சனாக ஹெக்டர் பிளஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. விரைவில் இவை இரண்டின் எக்ஸ்-ஷோரூம் விலைகளும் அதிகரிக்கப்பட உள்ளன. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இவை இரண்டின் விலைகளும் வருகிற நவம்பர் 1ஆம் தேதி முதல் அதிகரிக்கப்பட உள்ளன.

எம்ஜி ஹெக்டர் & ஹெக்டர் பிளஸ் இவை இரண்டின் விலைகள் அதிகப்பட்சமாக ரூ.40,000 வரையில் உயர்த்தப்பட உள்ளன. இதனால், ஹெக்டர் பிளஸ் கார்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் நவம்பர் 1 முதல் ரூ.17.80 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கும். எம்ஜி ஹெக்டர் பிளஸ் காரின் பெட்ரோல் வேரியண்ட்களின் விலைகள் ரூ.35,000 வரையில் உயர்த்தப்பட உள்ளன.

mg increase hector cars prices

அதுவே, ஹெக்டர் பிளஸ் காரின் டீசல் வேரியண்ட்களின் விலைகள் ரூ.40,000 வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதேபோல், ஹெக்டர் பிளஸ்ஸின் ட்யூயல்-டோன் வேரியண்ட்கள் ரூ.20,000 வரையில் விலை உயர்வை சந்தித்துள்ளன. ஆனால், அதேநேரம் இந்த எம்ஜி எஸ்யூவி காரின் சில குறிப்பிட்ட வேரியண்ட்களின் விலைகள் ரூ.35,000 வரையில் குறைக்கப்பட உள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

எம்ஜி ஹெக்டர் பிளஸ் காரில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. இந்த எம்ஜி காரை வாடிக்கையாளர்கள் ஸ்டைல், ஷைன், ஸ்மார்ட், ஸ்மார்ட் புரோ, ஷார்ப் புரோ மற்றும் சாவி புரோ என 6 விதமான வேரியண்ட்களில் வாங்கலாம். அத்துடன், இந்த காரை மொத்தம் 7 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களிலும், ட்யூயல்-டோன் பெயிண்ட் ஆப்ஷன்களிலும் பெறலாம்.

mg increase hector cars prices

இந்த புதிய விலை அதிகரிப்புகளினால், எம்ஜி ஹெக்டர் காரின் புதிய எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.14,99,800இல் இருந்து ரூ.21,99,800 வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதேபோல், எம்ஜி ஹெக்டர் பிளஸ் காரின் புதிய எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.17,79,800இல் இருந்து ரூ.22,77,800 வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. விற்பனையில் இந்த எம்ஜி ஹெக்டர் கார்களுக்கு நேரடி போட்டியாக விளங்கும் டாடா ஹெரியர் மற்றும் சஃபாரி கார்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை இரண்டும் தோற்றத்திலும், தொழிற்நுட்ப வசதிகளிலும் அப்டேட் செய்யப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வழக்கமாக மேற்கொள்ளப்படும் விலை உயர்வு தான் என்றாலும், எம்ஜி ஹெக்டர் காரின் ஆரம்ப விலையே ரூ.15 லட்சத்தை நெருங்கி இருப்பது சற்று அதிர்ச்சி கலந்த ஆச்சிரியத்தை தருகிறது. இது எக்ஸ்-ஷோரூம் விலையே. ஆன்-ரோடு விலை இன்னும் ரூ.1 லட்சம் அளவில் அதிகமாக வரும். ஆக, எம்ஜி ஹெக்டர் காரை இனி ரூ.16 லட்சம் இல்லாமல் வாங்க முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. ஆனால், இந்த விலை உயர்வுகள் அனைத்தும் நவம்பர் 1ஆம் தேதிக்கு பிறகே. ஆதலால், அதற்கு முன்பாகவே காரை புக் செய்ய முயலுங்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, October 27, 2023, 8:49 [IST]
English summary
Mg motor increase hector cars prices from november 1 all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X