25 வயதே ஆன இளைஞரின் கை வண்ணத்தில் எம்ஜி கோமெட் இவி கேமெர் எடிசன்!! வீடியோ கேம் கார் கூட இதனிடம் தோற்று போகும்!

எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனத்தின் கோமெட் இவி (Comet EV) எலக்ட்ரிக் காரில் புதிய ஸ்பெஷன் எடிசன் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. 'கேமெர் எடிசன்' என்ற பெயரில் வெளிவந்துள்ள இந்த புதிய ஸ்பெஷல் எடிசனை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.

எம்ஜி மோட்டார் நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் 2வது எலக்ட்ரிக் காராக கோமெட் இவி -ஐ சில மாதங்களுக்கு முன்னர் விற்பனைக்கு கொண்டுவந்தது. எம்ஜி பிராண்டில் இருந்து ஏற்கனவே இசட்.எஸ் என்ற எலக்ட்ரிக் கார் விற்பனையில் இருந்தாலும், கோமெட் இவி குறைவான விலையில் கொண்டுவரப்பட்டதால் வழக்கத்தை காட்டிலும் எதிர்பார்ப்பு அதிகமாக எழுந்தது.

mg comet ev gamer edition

இந்தியாவின் சிறந்த விற்பனை எலக்ட்ரிக் கார்களுள் ஒன்றாக மாறிவரும் கோமெட் இவி -இல் புதியதாக ஸ்பெஷல் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 'தி கேமெர் எடிசன்' என்கிற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள இந்த ஸ்பெஷல் எடிசனை இந்தியாவின் பிரபலமான கேமெர் ஆன மார்டல் (நமன் மதூர்) டிசைன் செய்து உள்ளார். இவ்வாறு, எலக்ட்ரிக் கார் ஒன்று கஸ்டமைஸ் செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக விற்பனை செய்யப்பட உள்ளது இந்தியாவில் இதுவே முதல்முறை ஆகும்.

வழக்கமான கோமெட் இவி காரின் விலை உடன் ஒப்பிடுகையில் புதிய கேமெர் எடிசனின் விலை வெறும் ரூ.64,999 மட்டுமே அதிகமாகும். புதிய எம்ஜி கோமெட் இவி கேமெர் எடிசனை விருப்பப்படும் வாடிக்கையாளர்கள் எம்ஜி மோட்டாரின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப் மையங்களிலோ அல்லது https://cc.mgmotor.co.in/mgexpert/#/e-model/variants என்ற எம்ஜி மோட்டாரின் அதிகாரப்பூர்வ இந்திய வெப்சைட்டிலோ முன்பதிவு செய்யலாம்.

புதிய கேமெர் எடிசன் எம்ஜி கோமெட் இவி காரின் பேஸ், பிளே மற்றும் பிளஷ் என 3 விதமான வேரியண்ட்களிலும் கிடைக்கும். 'கேமெர்' என்ற பெயருக்கு ஏற்ப புதிய கோமெட் கேமெர் எடிசன் கூடுதல் கம்பீரமான தோற்றத்தில், டைனாமிக் & டெக்னோ ஹைலைட்களுடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது. டார்க் & லைட் தீம்களுடன் டிசைன் செய்யப்பட்டுள்ள இந்த காரின் வெளிப்பக்க தோற்றம் தற்கால இளம் தலைமுறையினரை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

mg comet ev gamer edition

குறிப்பாக, காரின் சக்கரங்கள் மற்றும் கதவுகளின் கீழ்பகுதிகளில் வழங்கப்பட்டுள்ள பர்பிள் கலர் காரில் இருந்து தனியாக தெரிகிறது. காரின் பின்பக்க கதவுக்கு அருகே வீடியோ கேம்-க்கு பயன்படுத்தப்படும் ஜாய்ஸ்டிக்கின் தோற்றம் ஸ்கெட்ச்சாக கொடுக்கப்பட்டுள்ளது. கோமெட் இவி கேமெர் எடிசனின் வெளிப்பக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள டார்க் க்ரோம் மற்றும் மெட்டல் ஃபினிஷிங்குகள் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்குகளால் உருவாக்கப்பட்டு உள்ளன.

வெளிப்பக்கத்திற்கு ஏற்ப, இந்த ஸ்பெஷல் எடிசன் காரின் உட்பக்கமும் வீடியோ கேம் உணர்வை வழங்குகிறது. இதற்கேற்ப, நியான் நிறத்திலான பாகங்கள் காரினுள் ஆங்காங்கே ஒளிர்வதை பார்க்க முடிகிறது. மேலும், சொரசொரப்பான பேட்டர்ன்களும் காரின் டேஸ்போர்டில் இடம்பெற்றுள்ளன. மற்றப்படி, காரின் பேட்டரி & எலக்ட்ரிக் மோட்டாரில் எந்த மாற்றமும் இல்லை.

எம்ஜி கோமெட் இவி எலக்ட்ரிக் காரில் 17.3kWh திறன் கொண்ட பேட்டரி தொகுப்பு பொருத்தப்படுகிறது. இந்த பேட்டரி தொகுப்பை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 230கிமீ தொலைவிற்கு பயணிக்க முடியும் என்கிறது எம்ஜி நிறுவனம். எம்ஜி கோமெட் இவி காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.98 லட்சம் ஆகும். விற்பனையில் இந்த எம்ஜி எலக்ட்ரிக் கார் சிட்ரோன் இசி3 மற்றும் டாடா டியாகோ இவி கார்களுக்கு போட்டியாக விளங்குகிறது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: எம்ஜி எக்ஸ்பர்ட், இ பே, எம்ஜி வி பை என்.எஃப்.டி, எம்ஜி வெர்ஸ் என தனது கார்களை இந்தியாவில் சந்தைப்படுத்துவதிலும், பின்னர் அவற்றை விற்பனை செய்வதிலும் புது, புது சாஃப்ட்வேர் முயற்சிகளை மேற்கொண்டு வந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் கோமெட் இவி கேமெர் எடிசன் மூலம் கார்களின் டிசைனிலும் தனது கற்பனையை வெளிக்காட்ட ஆரம்பித்துள்ளது. எம்ஜி மோட்டார் இந்தியா - மார்டல் நிறுவனங்களின் கூட்டணி இன்னும் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, August 3, 2023, 22:13 [IST]
English summary
Mg motor launches comet ev special gamer edition
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+