இது கார் இல்ல கப்பல்... இத மட்டும் எம்ஜி விற்பனைக்கு கொண்டு வந்துச்சு டொயோட்டா, பிஒய்டி எல்லாம் காணாம போய்டும்
இந்தியாவில் நடைபெறும் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஆட்டோ எக்ஸ்போவும் ஒன்று. கடும் குளிருக்கு மத்தியில் இந்த நிகழ்வு தலைநகர் டெல்லியில் தொடங்கி இருக்கின்றது. இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான எம்ஜி மோட்டார் அதன் அப்டேட்டட் மற்றும் எதிர்கால வாகனங்களைக் காட்சிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
அவற்றில் அனைவரையும் ஈர்க்கக் கூடிய வாகன மாடலாக மைஃபா 9 (MIFA-9) மாடல் இருக்கின்றது. இது ஓர் எம்பிவி ரக காராகும். முழு அளவிலான எம்பிவியாக இதனை எம்ஜி உருவாக்கி இருக்கின்றது. இதன் கூடுதல் சிறப்பு என்ன என்றால் இதை எம்ஜி நிறுவனம் எலெக்ட்ரிக் காராக உருவாக்கி இருப்பதுதான். இதுபோன்ற காரை வெறு எந்த நிறுவனம் உருவாக்கவில்லை என கூறலாம். சீனாவைச் சேர்ந்த பிரபல மின் வாகன உற்பத்தி நிறுவனமான பிஒய்டியும் இந்தியாவில் மின்சார எம்பிவி ரக காரை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதைக் காட்டிலும் பெரிய அளவு, அதாவது முழு அளவிலான எலெக்ட்ரிக் காராகவே மைஃபா 9 உருவாக்கப்பட்டுள்ளது.

மைஃபா 9 எலெக்ட்ரிக் கார் பெயருக்கான காரணம்
மேக்ஸிமம், இன்டலிஜென்ட், ஃப்ரெண்ட்லி மற்றும் ஆர்டிஸ்டிக் இவற்றின் சுருக்கமே MIFA 9 ஆகும். இதில் 9 என்பது ஒன்பது இருக்கைகளைக் கொண்ட கார் இது என்பதைக் குறிக்கின்றது. வழக்கமான எம்பிவி போன்று இல்லாமல் இதனை பாக்ஸி தோற்றத்தில் எம்ஜி உருவாக்கி இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க சில பிரத்யேக கண்கவர் கூறுகளையும் இந்த காரில் எம்ஜி பயன்படுத்தி இருக்கின்றது. நிறுவனத்தின் இந்த யுக்தி தற்போது விற்பனையில் இருக்கும் பிற எம்பிவி ரக கார்களுக்கு ஆப்பு வைக்கும் வகையில் உள்ளது.
குறிப்பாக, டொயோட்டா நிறுவனம் உருவாக்கி வரும் இன்னோவா எலெக்ட்ரிக் வெர்ஷனுக்குக் கடுமையான போட்டியை ஏற்படுத்தும் வகையில் மைஃபா 9 உருவாக்கப்பட்டுள்ளது. எம்பிவியின் கவர்ச்சியான தோற்றத்திற்காக ஸ்லிம்மான எல்இடி பகல்நேர லைட், பெரிய ஏர் டேம், குரோம் ட்ரிம், விண்டோக்களுக்கு ஃப்ரேம் என எக்கசக்க அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

காரின் உருவாக்க அளவு
5,270 மிமீ நீளத்திலும், 2,000 மிமி அகலத்திலும் மற்றும் 1,840 மிமீ உயரத்திலும் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வீல் பேஸ் 3,200 மிமீ ஆகும். இந்த அளவுகள் கியா கார்னிவலைக் காட்டிலும் சற்று அதிகம் ஆகும். இந்த பெரிய அளவுகள் காரின் உட்பகுதிய விசாலமானதாக தென்பட செய்துள்ளது. மேலும், இதன் உட்பகுதியைச் சொகுசு கப்பல்களுக்கு இணையானதாக எம்ஜி உருவாக்கி இருக்கின்றது. குறிப்பாக, இருக்கைகள் வேற லெவல் சொகுசு வசதிகளைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. பயணிகளின் பன்முக தேவையை உணர்ந்து உருவாக்கி இருப்பதால் இது ஆட்டோ எக்ஸ்போவில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சிறப்பம்சங்களின் பட்டியல்
பயணிகளின் சொகுசான பயணத்திற்காக கேப்டைன் ரக இருக்கை மற்றும் பென்ச் ரக இருக்கைகள் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், 9 அங்குல அகலமான தொடுதிரை, டூ-ஸ்போக் ஸ்டியரிங் வீல் உள்ளிட்ட அம்சங்கள் கேபினுக்குள் வழங்கப்பட்டுள்ளன. இது மட்டும் இல்லைங்க எலெக்ட்ரிக் மோட்டார் விஷயத்திலும் இந்த கார் அசத்தலானதாக இருக்கின்றது. 245 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

பேட்டரி பேக் மற்றும் ரேஞ்ஜ் விபரம்
மேலும், அதிக ரேஞ்ஜை வழங்குவதற்காக 90 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பெரிய பேட்டரி பேக்க ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 440 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த கார் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வரும்பட்சத்தில் பிஒய்டி இ6 எம்பிவி எலெக்ட்ரிக் காருக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தும். ஆனால், இது எப்போது விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என்கிற தகவல் வெளியிடப்படவில்லை. இதுகுறித்த தகவலை வரும் காலத்தில் எப்போது வேண்டுமானாலும் நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








