தடுமாற்றத்தில் தள்ளாடும் எம்ஜி நிறுவனம்... புதிய ஹெக்டர் வந்து தான் காப்பாத்தனும் போல!
கடந்த பிப்ரவரி மாதம் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் விற்பனை விபரங்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நிறுவனங்களும் இந்த தகவல்களை வெளியிடும் அதன்படி இந்நிறுவனமும் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் மொத்தம் 4193 கார்களை அந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
இந்த 4193 என்ற விற்பனை எண்ணிக்கையைக் கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாத விற்பனையான 4528 உன் ஒப்பிடும் போது 7.40 சதவீதம் விற்பனை சரிவு தான் இந்த விற்பனை சரிவுக்கு எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் சப்ளை செயின் தான் காரணம் எனத் தெரிவித்துள்ளது. இந்நிறுவனத்திற்கு ஆர்டர்களும் உள்ள தற்போது முழு கொள்ளளவில் தயாரிப்புகளும் நடக்கிறது.

ஆனால் தயாரான கார்களை டெலிவரிக்கு கொண்டு செல்வதிலும், அதே போல கார்களை தயாரிக்கத் தேவையான மூலப்பொருள்களை உரிய நேரத்தில் தயாரிப்பு ஆலைகளுக்குக் கொண்டு வருவதிலும் சிக்கலைச் சந்தித்து வருவதால் விற்பனையில் கொஞ்சம் சரிவைச் சந்தித்துள்ளதாகக் கூறியுள்ளது.
ஆனால் இந்த விற்பனை கடந்த ஜனவரி மாத விற்பனையா 4114 என்ற விற்பனை எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது 1.92 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த ஜனவரி மாதத்தை விட விற்பனையை இந்நிறுவனம் அதிகரித்துள்ளது. என்பது கூடுதல் தகவல்.
| MG | Sales | Feb 2023 Sales Vs | Growth (%) |
| Feb-23 | 4,193 | Feb 2022 (YoY) | -7.40 |
| Feb-22 | 4,528 | Jan 2023 (MoM) | 1.92 |
| Jan-23 | 4,114 | - | - |
இது மட்டுமல்ல இந்நிறுவனம் விற்பனை செய்து வரும் எம்ஜி க்ளோஸ்டர் என்ற பிரிமியம் எஸ்யூவி காருக்கு மார்கெட்டில் டிமாண்ட் அதிகரித்துள்ளது. இதனால் அதற்கு ஏற்றார் போல இந்த காரின் தயாரிப்பு அளவை கூட்ட இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் எம்ஜி நிறுவனத்திற்கு விற்பனை மந்தம் தான் இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம் மார்கெட் கண்டிஷன், போட்டியாளர்கள், மற்றும் வாடிக்கையாளர்களின் மன நிலையில் மாற்றம் ஆகியவை காரணமாக இருக்கலாம். ஆனால் ஜனவரி மாத விற்பனையை ஒப்பிட்டால் ஓரளவிற்குச் சரிவிலிருந்து மீண்டு வரும் அறிகுறி தெரிகிறது.
அது மட்டுமல்ல இந்நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் புதிய ஹெக்டர் காரை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியது. இந்த காருக்கான புக்கிங் துவங்கியுள்ளது. அதுவும் சிறப்பாக நடந்துவருகிறது. அந்த காரை பலர் புக் செய்ததால் மற்ற கார்களுக்கான விற்பனை குறைந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
எம்ஜி நிறுவனத்தில் ஹெக்டர் போக எம்ஜி அஸ்டர் மற்றும் அந்நிறுவனத்தின் எலெக்ட்ரிக் காரான எம்ஜி இசட் எஸ் இவி காரும் ஓரளவிற்கு விற்பனையாகியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் விற்பனை சரிவு மட்டும் எம்ஜி நிறுவனத்தின் சரிவாகப் பார்க்க முடியாது. முந்தைய காலங்களில் விற்பனைக்கு பிறகான சர்வீஸில் வாடிக்கையாளரின் நன்மதிப்பைப் பெற்ற நிறுவனமாக எம்ஜி விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








