எம்ஜி இப்படி ஒரு சம்பவத்தை சைலென்டா பண்ணிட்டாங்க! போட்டியாளர்கள் எல்லாம் என்ன செய்ய போறாங்களோ!

எம் ஜி நிறுவனத்தின் கடந்த மே மாத விற்பனை அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. இந்நிறுவனம் கடந்த மே மாதம் மட்டும் 24.9% வளர்ச்சியைப் பெற்றுள்ளது. ஒரே மாதத்தில் 5000த்திற்கும் அதிகமான கார்களை விற்பனை செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

ஜூன் மாதம் துவங்கி விட்ட நிலையில் ஒவ்வொரு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்களது கடந்த மே மாத விற்பனை விபரங்களை வெளியிடத் துவங்கி விட்டனர். அதன்படி தற்போது எம்ஜி நிறுவனத்தின் விற்பனை அறிக்கை வெளியாகி உள்ளது. இந்த அறிக்கையின் படி எம்ஜி நிறுவனம் கடந்த மே மாதம் மிகச் சிறப்பான வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

mg motors sales report May 2023

எம்ஜி நிறுவனம் கடந்த மே மாதம் மட்டும் மொத்தம் 5006 கார்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் மொத்தம் 4008 கார்களை தான் விற்பனை செய்திருந்தது. அதை ஒப்பிடும்போது கடந்த மே மாதம் மொத்தம் 998 கார்கள் அதிகமாக விற்பனையாகியுள்ளது. இது ஒரே ஆண்டில் 24.9% வளர்ச்சியாகும்.

இதுவே கடந்த ஏப்ரல் மாத விற்பனையை மே மாத விற்பனையுடன் ஒப்பிட்டால் கடந்த ஏப்ரல் மாதம் மொத்தம் 4551 கார்களை தான் எம்ஜி நிறுவனம் விற்பனை செய்திருந்தது. அதை விடக் கடந்த மே மாதத்தில் 255 கார்கள் அதிகமாக விற்பனையாகியுள்ளது இது கிட்டத்தட்ட பத்து சதவீத வளர்ச்சியாகும் ஒரே மாதத்தில் இந்நிறுவனம் 10% அளவிற்கு வளர்ச்சியைச் சந்தித்துள்ளது.

mg motors sales report May 2023

உலகம் முழுவதும் எஸ்யூவி கார்கள் கருப்பு வெள்ளை சில்வர் மற்றும் கிரே நிறங்களில் தான் அதிகம் விற்பனையாகிறது இந்தியாவிலும் இதே நிறங்களில் தான் அதிகம் விற்பனையாகிறது. இதனால் தான் கால் தயாரிப்பாளர்கள் டார்க் எடிசன் கார்களை தற்போது அதிகம் அறிமுகப்படுத்தி வருகின்றனர் அந்த வகையில் எம்ஜி நிறுவனமும் தனது குளோஸ்டர் காரில் பிளாக் ஸ்டோன் என்ற வேரியண்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த என்ஜி கிளஸ்டர் பிளாக் ஸ்டோன் வேரியன்ட் கிட்டத்தட்ட ஸ்டாண்டர்ட் வேரியன்ட் போல தான் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு விதமான இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. ஒன்று டூ வாதம் ஓ லிட்டர் ட்வின் டர்போ டீசல் இன்ஜின் இருக்கிறது. இது 161 பி எஸ் பவரையும் 373.5 என் எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

மற்றொன்று பெண் டர்போ இஞ்ஜின் ஆகும் இது 215.5 பி எஸ் பவரையும் 478.5 என்னும் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இரண்டு இஞ்ஜின்களும் 8 ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது இந்த கார் 4 கிராஸ் 4 சிஸ்டத்தில் இயங்கும் திறன் கொண்டது. இதில் ரைடிங்கிற்கான ஏழு மோடுகள் உள்ளன. ‌ பனி, மணல், சகதி, பாறை, ஸ்போர்ட் மற்றும் எக்கோ ஆகிய மோடுகள் உள்ளன.

இந்தக் காரில் அடாஸ் லெவல் 1 தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் ரூபாய் 38.08 லட்சம் முதல் ரூபாய் 40.3 லட்சம் என்ற விலையில் மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. மார்க்கெட்டில் உள்ள டொயோட்டா ஃபார்ச்சூனர், ஸ்கோடா குஷாக், ஜீப் மெரிடியன் மற்றும் மகேந்திரா ஆல்டோராஸ் ஜி4 ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனையாகி வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி நிறுவனம் இந்தியாவில் மெல்ல மெல்ல வளர்ச்சியைச் சந்தித்து வருகிறது. அந்நிறுவனத்தின் தயாரிப்புகளை மக்கள் அதிகம் விரும்பி வாங்குகின்றனர். பிரிமியம் செக்மெண்டில் எம்ஜி நிறுவனம் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது. இந்நிறுவனத்திற்கு எதிர்காலத்தில் இந்தியாவில் பிரகாசமான எதிர்காலம் இருப்பதற்கு இது சான்றாக இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, June 1, 2023, 17:02 [IST]
English summary
Mg motors reported 24 9 percent sales growth may 2023
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+