அஜித், விஜய் படங்களுக்கு இங்கு தடை.. தரமான டிஜிட்டல் திரையை சென்னையில் திறந்த பிரபல கார் உற்பத்தி நிறுவனம்!
பிரபல கார் உற்பத்தி நிறுவனமான எம்ஜி, சென்னையில் தரமான டிஜிட்டல் ஸ்டுடியோ ஒன்றை திறந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஸ்டுடியோவை சென்னையில் அமைப்பதற்கான காரணம் மற்றும் இந்த ஸ்டுடியோ எப்படி எல்லாம் நிறுவனத்திற்கு பயன்பட இருக்கின்றது என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
பிரபல கார் உற்பத்தி நிறுவனமான எம்ஜி மோட்டார் நம் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் சூப்பரான டிஜிட்டல் ஸ்டுடியோவை திறந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஸ்டுடியோ என்ற உடன் ஃபோட்டோ எடுக்கும் இடம் அல்லது அஜித், விஜய் படம் திரையிடப்படும் திரையரங்கம் என நினைத்துக் கொள்ள வேண்டாம்.

இங்கு திரைகள் இருக்கும், ஆனால், அங்கு சினிமா படங்கள் ஒளிபரப்பப்படாது. அதற்கு பதிலாக நிறுவனத்தின் காருடைய படங்கள் மட்டுமே ஒளிபரப்பப்படும். காரை வாங்குவோர் மற்றும் வாங்கும் எண்ணத்துடன் வருபவர்களுக்கு அந்நிறுவனத்தின் தயாரிப்புகளின் அருமை, பெருமைகளை ஒளிபரப்புவதற்கே இந்த டிஜிட்டல் ஸ்டுடியோ திறந்து வைக்கப்பட்டு உள்ளது.
அதேவேளையில், இது ஓர் ஏஆர்வி/விஆர்வி வகையிலான டிஜிட்டல் இம்மர்சிவ் ஸ்டுடியோ ஆகும். இத்தகையே ஸ்டுடியோவையே சென்னை வாசிகளை மையப்படுத்தி எம்ஜி நிறுவனம் தலைநகரத்தில் திறந்து வைத்திருக்கின்றது. காரின் சிறு சிறு நுணுக்கங்களைக்கூட தெரிந்துக் கொள்ள வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த ஏஆர்வி/விஆர்வி டிஜிட்டல் ஸ்டுடியோ பெரும் உதவியாக இருக்கும்.

ஏனெனில் காரின் சிறு சிறு விஷயங்கள்கூட இங்கு காட்சிப்படுத்தப்பட்டு, அதுகுறித்து விரிவாக தெரிவிக்கப்படும். மேலும், ஓர் காருக்குள் இருந்து காரை ஓட்டினால் எத்தகைய அனுபவம் கிடைக்கும். அத்தகைய அனுபவத்தையே இந்த டிஜிட்டல் திரை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும். இத்தகைய ஸ்டுடியோ சென்னையில் திறந்து வைக்கப்பட்டு இருப்பது நிறுவனத்தின் காரை அதிகம் விரும்புவோர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
மேலும், இதுபோன்ற ஓர் ஸ்டுடியோவை கார் உற்பத்தி நிறுவனம் சென்னையில் திறப்பது இதுவே முதல் முறையாகும். இந்த டிஜிட்டல் ஸ்டுடியோ திறந்து வைக்கப்பட்ட பின்னர் முதன் முதலில் கோமெட் இவி-யே காட்சிப்படுத்தப்பட்டது. இது நிறுவனத்தின் லேட்டஸ்ட் எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும்.

மேலும், இந்தியாவின் மிக மிக மலிவு விலை பிராண்டட் இ-காராகவும் இதுவே உள்ளது. இதைத்தொடர்ந்து, நிறுவனத்தின் மற்றுமொரு எலெக்ட்ரிக் காரான இசட்எஸ் இவி-யும் இந்த டிஜிட்டல் விஆர்/ஏஆர் ஸ்டுடியோவில் காட்சிப்படுத்தப்பட்டது. நிறுவனத்தின் இந்த நடவடிக்கை எம்ஜி புதுமையான விஷயங்களை வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதை வெளிக்காட்டும் வகையில் அமைந்திருக்கின்றது.
இங்கு வாகனங்கள் பற்றிய சிறப்பு வசதிகளை திரையிட்டு காட்டுவது மட்டுமின்றி விற்பனைக்கான பிற விஷயங்களும் மேற்கொள்ளப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், ஒரே இடத்தில் பல வகையான செயல்களை எம்ஜி செய்யப் போகின்றது என்பது தெளிவாக தெரிகின்றது. எம்ஜி நிறுவனம் தற்போது தன்னுடைய இந்திய வர்த்தக பிரிவை மேலும் விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் உள்ளது.

ஆனால், இதில் பெருத்த சிக்கலை நிதி கிடைக்காத காரணத்தினால் இந்த நிறுவனம் சந்தித்து வருகின்றது. ஆகையால், தற்போது 45 சதவீதம் முதல் 48 சதவீதம் வரையிலான பங்கை இந்தியாவில் உள்ள தனி நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு விற்க அது முடிவு செய்திருக்கின்றது.
இந்த பங்கினை ஜேஎஸ்டபிள்யூ குழுமம், மஹிந்திரா (கார் உற்பத்தி நிறுவனம்) மற்றும் ஹிந்துஜா குழுமம் உள்ளிட்டவை வாங்க களத்தில் இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையிலேயே தரமான செயல்களில் தடையில்லாமல் எம்ஜி ஈடுபட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தின்கீழ் இப்போதைய நிலவரப்படி தாராளமான அளவில் கார் மாடல்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.
லேட்டஸ்ட் அறிமுகமான கோமெட் இவி, ஹெக்டர், ஹெக்டர் பிளஸ், அஸ்டர், குளோஸ்டர் மற்றும் இசட்எஸ் இவி உள்ளிட்டவை விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. இந்த அனைத்து கார் மாடல்களுக்கும் இந்தியர்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாடல்களுடன் விரைவில் புதிய தயாரிப்புகளை இணைக்கும் எண்ணத்திலேயே எம்ஜி உள்ளது. இதன் அடிப்படையிலேயே 45-48 சதவீதம் பங்குகளை விற்பனைச் செய்ய அது முடிவு செய்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சீனாவைச் சேர்ந்த செய்க் குழுமமே எம்ஜி-யின் தாய் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்திடம் இருந்து நிதி பெறுவதிலேயே தற்போது எம்ஜி சிக்கலைச் சந்தித்து வருகின்றது. இதற்கு இந்தியா-சீனா இடையே தென்படும் மோதல் சூழலே காரணமாக உள்ளது. இதன் விளைவாகவே பெரும் பங்கினை விற்க எம்ஜி நிறுவனம் முன் வந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications









