டாடாவின் காலம் எல்லாம் காலியாக போகுது! யாருமே எதிர்பாராத நேரத்தில் எம்ஜி செய்யப்போகும் தரமான சம்பவம்!
இன்னும் ஒரு சில நாளில் துவங்கப்போகும் ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் எம்ஜி நிறுவனம் யாரும் எதிர்பாராத வகையில் தனது எம்ஜி4 என்ற சிறிய ரக இவி காரை பொது பார்வைக்கு அறிமுகப்படுத்தப்போகிறது. இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்
இந்தியாவில் ஆட்டோ எக்ஸ்போ இன்னும் சில நாட்களில் துவங்கவுள்ளது. ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் எல்லாம் தங்கள் கார்களை வரிசையாக வெளியிடத் தயாராகி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் இந்தியாவிற்குப் பல புதிய கார்கள் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிகிறது. இந்நிலையில் எம்ஜி நிறுவனம் தனது எம்ஜி 4 என்ற இவி காரை ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.

எம்ஜி 4 இவி கார்
எம்ஜி நிறுவனத்தின் இந்த எம்ஜி 4 இவி கார் ஒரு எலெக்ட்ரிக் ஹேட்ச் பேக் காராகும். இந்த கார் தான் ஆட்டோ எக்ஸ்போவில் எம்ஜி நிறுவனத்தின் பெவிலியலினில் முக்கிய இடத்தை பிடிக்கப்போகிறோம். இத்துடன் சேர்ந்து வேறு சில கார்களும் பொது பார்வைக்கு வரப்போகிறது. எம்ஜி 4 இவி கார் ஏற்கனவே சர்வதேசச் சந்தையில் விற்பனையாகி வரும் ஒரு கார் இந்த கார் சமீபத்தில் தான் யூரோ என்சிஏடிபி கிராஷ் டெஸ்டில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றது.
மிகவும் பாதுகாப்பான எலெக்ட்ரிக் கார் என இந்த கார் பெயர் பெற்றுள்ளது. இந்த கார் எம்ஜி நிறுவனத்தின் தலைமை நிறுவனமான எஸ்ஏஐசி நிறுவனத்தின் மாடுலர் ஸ்கேளபிள் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் எம்ஜி நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் ஸிஎஸ் இவி காரின் அதே அளவிலான காராகும்.

எம்ஜி அம்சங்கள்
இந்த காரின் அளவுகளைப் பொருத்தவரை 4,287 மிமீ நீளம் கொண்டது. அதில் வீல் பேஸ் மட்டும் 2705 மிமீ நீளம் ஆகும். இந்த காரின் ஸ்டைலை பொருத்தவரை சைபர்ஸ்டர் ரோடுஸ்டர் கான்செப்டின் அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த காரின் பேட்டரி பேக்கை பொருத்தவரை 2 விதமான பேட்டரி பேக் உடன் விற்பனைக்கு வருகிறது. 51 கிலோ வாட் ஹவர் அல்லது 64 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் உடன் விற்பனைக்கு வருகிறது.
இந்த கார் முழு சார்ஜில் 450 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டது. இந்த காருக்கு டிசி ஃபாஸ்ட் சார்ஜர் வழங்கப்படுகிறது. இது 10-80 சதவீத பேட்டரியை வெறும் 35 நிமிடத்தில் சார்ஜ் ஏற்றிக்கொள்ளும் திறன் கொண்டது. இந்த காரில் பிஎம்எஸ் எல்லெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது ரியர் வீலுக்கு டிரைவிங் கொடுக்கிறது. இது 201 பிஎச்பி பவரையும் 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.
இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 7.9 நொடிகளில் பிக்கப் செய்யும் திறன் கொண்டது. அது மட்டுமல்ல இந்த கார் அதிகபட்சமாக 160 கி.மீ வேகத்திலும் செல்லும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் உள்ள முக்கியமான விடூஎல் என்ற ஒரு வெஹிகில் டூ லோடு என்ற முக்கியமான அம்சம் இருக்கிறது. இது போக 7 இன்ச் டிஜிட்டல் கன்சோல், வயர்லெஸ் சார்ஜர், 10.25 இன்ச் டச் ஸ்கிரீனில் ஐஸ்மார்ட் யூஐ உடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எம்ஜி பைலட் உடன் கூடிய ஏடிஏஎஸ் சிஸ்டம், லெதர் சீட்கள் ஆகியன வழங்கப்பட்டுள்ளன.
அடுத்த கார்கள்!
இந்த எம்ஜி 4 எலெக்ட்ரிக் காரை அந்நிறுவனம் காட்சிப்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த எம்ஜி 4 இல்லாமல் எம்ஜி 5 மற்றும் எம்ஜி 6 ஆகிய கார்களையும் ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் ஆகிய கார்களையும் இந்நிறுவனம் காட்சிப்படுத்தவுள்ளது. இது மட்டுமல்ல எம்ஜி நிறுவனம் தனது ஏர் இவி காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்போவதாகவும் பேசப்படுகிறது. ஆனால் இதை அந்நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை.
எம்ஜி 4 இவி கார் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டாலும், இந்தியாவில் எப்பொழுது விற்பனைக்கு கொண்டு வருவது என எம்ஜி நிறுவனம் இதுவரை முடிவு செய்யவில்லை. அப்படி இந்த கார் இந்தியாவிற்கு விற்பனை வந்தால் மார்கெட்டில் உள்ள ஹூண்டாய் ஐயானிக் 5 மற்றும் கியா இவி6 ஆகிய கார்களுக்கு போட்டியாக களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் விலை இவை அனைத்தையும் விட குறைவான விலையில் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.


Click it and Unblock the Notifications








