சென்னை மழைய விட இது பேரதிர்ச்சியா இருக்கு! வெளியான அறிவிப்பால் ஆடிப்போன மக்கள்! இன்னும் என்னலாம் நடக்க போகுதோ!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார் நிறுவனங்களில் ஒன்று எம்ஜி மோட்டார் (MG Motor). மிக குறுகிய காலத்தில் இந்திய வாடிக்கையாளர்களின் மனம் கவர்ந்த கார் நிறுவனங்களில் ஒன்றாக எம்ஜி மோட்டார் உருவெடுத்து அசத்தியுள்ளது. இதற்கு அந்நிறுவனம் விற்பனை செய்து வரும் கார்கள்தான் மிக முக்கியமான காரணமாக உள்ளன.

தற்போதைய நிலையில் எம்ஜி ஹெக்டர் (MG Hector), எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் (MG Hector Plus), எம்ஜி அஸ்டர் (MG Astor), எம்ஜி க்ளோஸ்டர் (MG Gloster), எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) மற்றும் எம்ஜி இஸட்எஸ் இவி (MG ZS EV) ஆகிய கார்களை எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது.

MG Gloster

இந்த அனைத்து கார்களின் விலையும் வரும் ஜனவரி 1ம் தேதியில் இருந்து அதிரடியாக உயரவுள்ளது. உற்பத்தி செலவுகள் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், விலை உயர்வு (Price Hike) குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை எம்ஜி மோட்டார் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. ஆனால் கார்களின் விலை எவ்வளவு சதவீதம் உயரவுள்ளது? என்பதை எம்ஜி மோட்டார் நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.

அது குறித்த அறிவிப்பும் கூடிய விரைவில் வெளியாகும் என நாம் எதிர்பார்க்கலாம். ஆனால் கார்களின் விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடும் முதல் நிறுவனம் எம்ஜி மோட்டார் கிடையாது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக பல்வேறு முன்னணி நிறுவனங்களும் விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டு விட்டன.

MG Hector

இதில், மாருதி சுஸுகி (Maruti Suzuki), டாடா மோட்டார்ஸ் (Tata Motors), மஹிந்திரா (Mahindra), ஹோண்டா (Honda), ஆடி (Audi) மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும். இந்த நிறுவனங்களின் வாகனங்கள் விலையும் வரும் ஜனவரி 1ம் தேதியில் இருந்துதான் உயர்த்தப்படவுள்ளது.

இதுதவிர ஹூண்டாய் (Hyundai) நிறுவனமும் கார்களின் விலையை உயர்த்துவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புத்தாண்டு (New Year) மற்றும் பொங்கல் (Pongal) உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு புதிய கார் வாங்க திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எம்ஜி மோட்டார் நிறுவனத்தை பொறுத்தவரையில், பல்வேறு புதிய கார்களை (New Cars) விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதில், எம்ஜி க்ளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் (MG Gloster Facelift) மாடலும் ஒன்றாகும். எம்ஜி க்ளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் சோதனை ஓட்டம் இந்தியாவில் தற்போது தொடங்கியுள்ளது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) உள்ளிட்ட கார்களுக்கு கடுமையான சவாலை அளிக்கும் வகையில், க்ளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலை எம்ஜி மோட்டார் நிறுவனம் மெருகேற்றி வருகிறது. அடுத்த ஆண்டு (2024) மத்தியிலோ அல்லது இறுதிக்குள்ளாகவோ எம்ஜி க்ளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கார் நிறுவனங்களை தொடர்ந்து, டூவீலர்களை (Two Wheelers) விற்பனை செய்யும் நிறுவனங்களும் வரும் ஜனவரி 1ம் தேதியில் இருந்து விலைகளை உயர்த்தும் என நாங்கள் கருதுகிறோம். எனவே புத்தாண்டில் புதிய வாகனங்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள், சற்று கூடுதல் விலையை கொடுக்க தயாராகி கொள்வது நல்லது.

More from DriveSpark

Article Published On: Monday, December 4, 2023, 18:48 [IST]
English summary
Mg price hike from january 2024 check full details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+