புதிய எம்ஜி ஹெக்டர் காரின் விலை விபரங்கள் வெளியீடு! எவ்வளவுன்னு தெரிஞ்சா இப்பவே வாங்க ஓடுவீங்க!

எம்ஜி நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய எம்ஜி ஹெக்டர் காரின் விலை விபரங்களை தற்போது ஆட்டோ எக்ஸ்போ 2023ல் வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்

எம்ஜி நிறுவனம் இந்தியாவிற்குள் நுழைந்து குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்ட நிறுவனம். இந்நிறுவனத்தின் ஹெக்டர் கார் மார்கெட்டில் மிகவும் பிரபலமான கார். இந்த கார் அறிமுகமானது முதல் விற்பனை சிறப்பாக இருக்கிறது. இந்த கார் இந்தியாவின் முதல் இன்டர்நெட் காராக இந்தியாவில் அறிமுகமாகியது. இந்நிறுவனம் காரில் அதிகமான தொழிற்நுட்பங்களை உட்புகுத்தி வெளியிடுவதைத் தனது தனித்துவமாக வைத்திருக்கிறது.

புதிய எம்ஜி ஹெக்டர் காரின் விலை விபரங்கள் வெளியீடு! எவ்வளவுன்னு தெரிஞ்சா இப்பவே வாங்க ஓடுவீங்க!

இந்நிலையில் எம்ஜி நிறுவனம் கடந்த வாரம் தனது ஹெக்டர் காரின் புதிய தலைமுறை காரை அறிமுகப்படுத்தியது. இந்த கார் தற்போது விற்பனையாகி வரும் காரைவிட அதிகமான அப்டேட்கள் மற்றும் அம்சங்களைக் கொண்டதாக இருக்கிறது. இந்த கார் 5,6 மற்றும் 7 சீட்டர் காராக விற்பனையாகிறது. அப்டேட்களை பொருத்தவரை வெளிப்புறத்தில் முக்கிய அப்டேட்டாக இன் கிரில் பகுதி மாற்றப்பட்டுள்ளது. புதிய கிரில் பகுதி பெரியதாகவும் போல்டாகவும் உருவாகியுள்ளது. அங்குலர் வடிவத்திற்குள் டார்க் க்ரோம் ஃபினிஷ் உடன் டைமண்ட் தீமில்இந்த டிசைன்வழங்கப்பட்டுள்ளது.

இந்த பக்க வாட்டு பகுதிகளில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. பின்புறத்தில் புதிய எல்இடி டெயில்லைட்டின் வடிவம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பம்பரிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எக்ஸாஸ்ட் டிப்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட்டில் அதிகமான மாற்றமே காரின் உட்புறம் தான் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் உட்புறத்தை முழுமையாக எம்ஜி நிறுவனம் மாற்றியமைத்துள்ளது. இதன் லேஅவுட்களை புதிதாக மாற்றியுள்ளது. முதன்முறையாக இந்த காரில் இந்தியாவில் விற்பனவையாகும் வேறு எந்த காரிலுமு் இல்லாத வகையில் 35.56 செ.மீ எச்டி போர்ட்ரைட் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் இன்டர்ஃபேஸூம் புதுமையாக வழங்கப்பட்டுள்ளது.

புதிய எம்ஜி ஹெக்டர் காரின் விலை விபரங்கள் வெளியீடு! எவ்வளவுன்னு தெரிஞ்சா இப்பவே வாங்க ஓடுவீங்க!

இந்த செக்மெண்டிலேயே முதன் முறையாக இந்த காரில் டிஜிட்டல் ப்ளூடூத் சாவி வழங்கப்பட்டுள்ளது. இது போக கீ ஷெரிங் அம்சமும் இந்த காரில் இருக்கிறது. அதாவது சாதாரண சாவி இல்லை என்றாலும் காரின் உரிமையாளர் இந்த சாவியைப் பயன்படுத்தி காரை இயக்கலாம். உட்புறத்தின் நிறத்தைப் பொருத்தவரை அர்கில் பிரெளன் மற்றும் பிளாக் நிறத்தில் உட்டன் ஃபினிஷில் இருக்கிறது. இந்த 6 சீட்டர் காரில் கேப்டன் சேர்களும், 7 சீட்டர் கார்களில் பெஞ்ச் சீட்களும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த காரில் மாருதி நிறுவனத்தின் புதிய தொழிநுட்பமான ஐ-ஸ்மார்ட் தொழிற்நுட்பம் இந்த காரில் இருக்கிறது. இதன் மூலம் 75 கனெக்டெட் கார் அம்சங்கள் மற்றும் 100 வாய்ஸ் கமெண்ட்கள் இந்த காரில் இருக்கிறது. இது போக இந்த காரில் செக்மெண்டிலேயே முறை முறையாக டச் ஸ்கிரீன் கண்ட்ரோல் சன் ரூஃப், அம்பியன்ஸ் லைட்களுக்கான வாய்ஸ் கமெண்ட்ஸ், நேவிகேஷன் கைடன்ஸ்களுக்கான 5 இந்தியா மொழிகளில் கைடன்ஸ், 50க்கு அதிகமாக ஹிங்கிலீஷ் கமெண்ட்ஸ், இது போக பார்க் பிளஸ், ஜியோசாவன் அப், ஆகிய ஆப்கள் காரிலேயே இன்பில்டாக இருக்கிறது. இது போக காரில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே ஆகிய அம்சங்கள் இருக்கிறது.

புதிய எம்ஜி ஹெக்டர் காரின் விலை விபரங்கள் வெளியீடு! எவ்வளவுன்னு தெரிஞ்சா இப்பவே வாங்க ஓடுவீங்க!

இந்த காரில் மிக முக்கிய அம்சமாக ஏடிஏஎஸ் லெவல் 2 தொழிற்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது.இது போக இந்த காரில் டிராஃபிக் ஜாம் அசிஸ்ட், ஆட்டோ டர்ன் இன்டிகேட்டர், லேன் கீம் அசிஸ்ட், ஃபார்வேர்டு கொலிஷன் வார்னிங், எமர்ஜென்ஸி பிரேக்கிங், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ஹைபீம் அசிஸ்ட், 6 ஏர்பேக், 360 டிகிரி எச்டி கேமரா, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், ஹில்அசிஸ்ட் கண்ட்ரோல், அனைத்து வீலும் டிஸ்க் பிரேக், அனைத்து சீட்களுக்கும் 3 பாய்ண்ட், முன்பக்க பார்க்கிங் சென்சார் ஆகிய அம்சங்கள் இருக்கிறது.

இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.இதில் பெட்ரோல் இன்ஜினில் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷனவ்கள் உள்ளன. டீசல் இன்ஜினில் மேனுவல் கியர் ஆப்ஷன் மட்டுமே இருக்கிறது. இதன் வேரியன்ட்களை பொருத்தவரை ஸ்டைல், ஸ்மார்ட், ஸ்மார்ட, ஷார்ப், மற்றும் சாவே ஆகிய வேரியன்ட்களில் இந்த கார் வெளியாகவுள்ளது.

இந்த காரின் விலை குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளது.இதைத் தொடர்ந்து காணலாம். இதன் 6 சீட்டர் காரை பொருத்தவரை டீசல் இன்ஜினில் ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் வேரியன்களில் இருக்கிறது. ஸ்மார்ட்வேரியன்ட் ரூ20,79,800 என்ற விலையிலும், ஷார்ப் வேரியன்ட் ரூ 22,20,800 என்ற விலையிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் இன்ஜினை பொருத்தவரை ஷார்ப் வேரியன்ட் மட்டுமே இருக்கிறது. அதில் மேனுவல் கியர் ஆப்ஷன் ரூ20,14,800 என்ற விலையிலும், சிவிடி கியர் ஆப்ஷன் ரூ21,47,800 என்ற விலையிலும் விற்பனையாகிறது. இது போக சாவே வேரியன்டை பொருத்தவரை சிவிடி கியர்பாக்ஸ் அப்ஷன் மட்டுமே இருக்கிறது. ரூ22,42, 800 என்ற விலையில் விற்பனையாகிறது.

7 சீட்டர் காரை பொருத்தவரை ஷைன் வேரியன்டில் பெட்ரோல் இன்ஜின் மேனுவல் கியர் காரை பொருத்தவரை ரூ17,49,800 என்ற விலையிலும் டீசல் வேரியன்ட் ரூ19,75,800 என்ற விலையிலும் விற்பனையாகிறது. ஸ்மார்ட் ப்ரோ வேரியன்டை பொருத்தவரை பெட்ரோல் இன்ஜின் மேனுவல்கியர் ஆப்ஷன் ரூ20,14,800 என்ற விலையிலும், பெட்ரோல் சிவிடி கியர் ஆப்ஷன் ரூ 21,47,800 என்ற விலையிலும், 2.0 டீசல் மேனுவல் கியர் ரூ22,20,800 என்ற விலையிலும், சாவே வேரியன்ட் சிவிடி கியர் ஆப்ஷனில் மட்டுமே இருக்கிறது. இதன் விலை ரூ22,42,800 ஆகும்,

5 சீட்டர் காரை பொருத்தவரை ஸ்டைல் வேரியன்டில் பெட்ரோல் மேனுவல் கியர் கார் ரூ14,72,800 என்ற விலையிலும் ஷைன் வேரியன்டில் பெட்ரோல் இன்ஜின் மேனுவல் கியர் கார் ரூ16,79,800 என்ற விலையிலும், பெட்ரோல் இன்ஜின் சிவிடி கியர் கார் ரூ17,98,800 என்ற விலையிலும், டீசல் வேரியன்ட் ரூ19,05,800 என்ற விலையிலும், ஸ்மார்ட் வேரியன்ட் பெட்ரோல் மேனுவல் கியர் ரூ17,98,800 என்ற விலையிலும், டீசல் இன்ஜின் கார் ரூ20,09,800 என்ற விலையிலும், ஷார்ப் வேரியன்ட், பெட்ரோல் மேனுவல் ரூ19,44,800 என்ற விலையிலும், பெட்ரோல் சிவிடி கியர் ஆப்ஷன் ரூ20,77,800 என்ற விலையிலும், டீசல் இன்ஜின் ரூ21,50,800 என்ற விலையிலும், சாவே வேரியன்ட் ரூ21,72,800 என்ற விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 11, 2023, 10:45 [IST]
English summary
Mg released the price details of mg hector facelift cars variant here find the details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+