இத்துனூண்டு காரு இவ்ளோ தூரம் போகுமா! கோமெட் மட்டும் விற்பனைக்கு வந்துச்சு ஒட்டுமொத்த மார்கெட்டும் தலகீழாயிடும்

மலிவு விலை எலெக்ட்ரிக் கார்களின் மார்கெட்டை காலி செய்யும் வகையில் விரைவில் எம்ஜி கோமெட் (MG Comet) இந்திய சந்தையில் விற்பனைக்கு வர இருக்கின்றது. இந்த கார் ரேஞ்ஜ் மற்றும் மின் மோட்டார் திறன்கள் பற்றிய தகவலே இப்போது வெளியாகி உள்ளது. வாருங்கள் இதுகுறித்த கூடுதல் தகவலைப் பார்க்கலாம்.

எம்ஜி (MG) நிறுவனம் தன்னுடைய எலெக்ட்ரிக் கார் பிரிவில் தற்போது ஒரே ஒரு மாடலை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. எம்ஜி இசட்எஸ் இவி (MG ZS EV) எனும் மாடலையே அது விற்பனைச் செய்துக் கொண்டிருக்கின்றது. விரைவில் இந்த கார் மாடலுடன் மேலும் ஓர் புதிய மின்சார காரை அந்நிறுவனம் இணைக்க இருக்கின்றது.

MG Comet will be powered by a 25-kWh battery

அதாவது, இந்தியாவில் மற்றும் ஓர் புதுமுக எலெக்ட்ரிக் காரை எம்ஜி விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. கோமெட் (Comet) எனும் மின்சார காரையே அது விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இந்த தகவலை எம்ஜி நிறுவனம் ஏற்கனவே உறுதி செய்துவிட்டது. இந்த நிலையில் இப்போது அக்கார் பற்றிய பல்வேறு முக்கிய விபரங்களை அது வெளியிட்டிருக்கின்றது.

அந்தவகையில், என்ன மாதிரியான பேட்டரி பேக், என்ன மாதிரியான திறன் கொண்ட மின் மோட்டார் உள்ளிட்டவற்றை கோமெட் பெற இருக்கின்றது என்கிற தகவலையே அது வெளியீடு செய்திருக்கின்றது. தற்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி, எம்ஜி கோமெட்டில், ஓர் முழு சார்ஜில் 150 கிமீ முதல் 200 கிமீ வரையில் ரேஞ்ஜ் தரக் கூடிய பேட்டரி பேக் இடம் பெற இருப்பது உறுதியாகி இருக்கின்றது.

MG Comet will be powered by a 25-kWh battery

இது ஓர் சிறிய ரக கார் என்பதாலும், மலிவு விலையில் இதனை விற்பனைக்குக் கொண்டு வர நிறுவனம் திட்டமிட்டிருப்பதாலும் இந்த அளவு குறைவான ரேஞ்ஜ் தரக் கூடிய பேட்டரி பேக் கோமெட்டில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஓர் எல்எஃப்பி (lithium iron phosphate) ரக பேட்டரி பேக்காகும்.

இத்துடன், சேர்த்து 50 kW திறன் கொண்ட மின் மோட்டாரும் கோமெட்டில் பயன்படுத்தப்பட இருக்கின்றது. நிறுவனத்தின் எம்ஜி இசட்எஸ் இவி பிரீமியம் வசதிகள் நிரம்பிய எலெக்ட்ரிக் காராக காட்சியளிக்கின்றது. அதேவேளையில் இதன் விலையும் பலமடங்கு அதிகம். ஆகையால், தன்னுடைய பிராண்டின்கீழ் குறைவான விலை எலெக்ட்ரிக் காரை விற்பனைக்குக் களமிறக்கும் விதமாகவே கோமெட்டை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் எம்ஜி களமிறங்கி இருக்கின்றது.

MG Comet will be powered by a 25-kWh battery

விலை குறைவானதாக இருந்தாலும் இந்த காரில் நவீன தொழில்நுட்ப வசதிகள் மிக தாராளமாக இருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. 10.25 அங்குல டிஜிட்டல் திரை இந்த காரில் வழங்கப்பட இருக்கின்றது. இந்த திரையே இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாகவும் செயல்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதுதவிர இன்னும் பல்வேறு அம்சங்களும் கோமெட்டில் இடம் பெற இருக்கின்றது. குறிப்பாக, கார் இணைப்பு அம்சம், விரைவில் கேபினை கூலாக்கும் ஏசி சிஸ்டம் உள்ளிட்டவையும் இடம் பெற இருக்கின்றது. ஏசி வெண்ட் பிரத்யேகமாக மைய கன்சோல் இருக்கும் பகுதியில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

MG Comet will be powered by a 25-kWh battery

இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்புகளை தாங்கிய வாகனமாகவே கோமெட் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இது நகர பயனபாட்டிற்கு உகந்த வாகனம் ஆகும். இதன் அடிப்படையிலேயே சிறிய தோற்றம் மற்றும் இரண்டு கதவுகள் மட்டுமே கொடுக்கப்பட்டு இருக்கின்றன. வருகின்ற ஏப்ரல் மாதத்தில் இந்த அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் வெளியீட்டைப் பெற இருக்கின்றது.

இதன் வருகை டாடாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் காரான டியாகோ இவி-க்கு போட்டியாக அமைய இருக்கின்றது. ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான நிற தேர்வுகளில் எம்ஜி கோமெட் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும். வெள்ளை (White), நீலம் (Blue), பச்சை (Green), மஞ்சள் (Yellow) மற்றும் இளஞ்-சிவப்பு (Pink) ஆகியவையே அந்த நிற தேர்வுகள் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து

ரூ. 10 லட்சத்திற்கும் குறைவான விலையில் எம்ஜி கோமெட் இந்திய சந்தையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. நகரத்தின் வாகன நெரிசலுக்கு ஏற்ற காராகவும் இது இருக்கும். குறிப்பாக, ஓர் ஆட்டோவை இந்த காரை பயன்படுத்திக் கொள்ள முடியும். இதன் அடக்கமான தோற்றம் இதற்கு மிகுந்த உதவியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 29, 2023, 17:28 [IST]
English summary
Mg revealed important information about comet ev
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X