MG Comet இ-காரை உற்பத்தி செய்ய ஆரம்பிச்சுட்டாங்க! டூ-வீலருக்கு பதிலா எல்லாரும் இனி இந்த காரைதான் வாங்க போறாங்க

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான எம்ஜி (MG Motor), வெகு விரைவில் இந்திய சந்தையில், இந்தியாவிற்கான மலிவு விலை எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. கோமெட் இவி (Comet EV) எனும் பெயர் கொண்ட எலெக்ட்ரிக் காரையே நிறுவனம் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது.

இதன் வருகையை ஏற்கனவே எம்ஜி உறுதி செய்துவிட்டது. இந்த நிலையிலேயே கோமெட் எலெக்ட்ரிக் காரின் உற்பத்தி பணிகள் இந்தியாவில் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் வகையில், நிறுவனம் தயாரித்திருக்கும் முதல் கோமெட் இவி எலெக்ட்ரிக் காரின் படங்கள் வெளியீடு செய்யப்பட்டு உள்ளன.

Mg rolls out first unit of comet smart ev

எம்ஜி நிறுவனம், ஹலோல் உற்பத்தி ஆலையிலேயே கோமெட் இவி-யின் உற்பத்தி பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த ஆலை குஜராத்தில் அமைந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. இங்கிருந்தே இந்தியா மற்றும் உலக நாடுகள் சிலவற்றிற்கு இந்த எலெக்ட்ரிக் கார் ஏற்றுமதி செய்யப்பட இருக்கின்றது. பைக், ஸ்கூட்டர் போல தினசரி பயன்பாட்டிற்கு உகந்த வாகனமே இந்த கோமெட் இவி ஆகும்.

மிகவும் சிறிய வாகனமாக இதனை எம்ஜி தயார் செய்திருக்கின்றது. குறிப்பாக, நகர்புறங்களின் தினசரி பயன்பாட்டிற்கு உகந்த வாகனமாக இதனை உருவாக்கி இருக்கின்றது. இந்த காரை ஆட்டோரிக்சாக்கள் போல் சந்து, பொந்துகளில்கூட மிக சுலபமாக இயக்கிக் கொள்ள முடியும். இத்தகைய வாகனமாகவே கோமெட் இவி தயார் செய்யப்பட்டு இருக்கின்றது.

Mg comet smart ev solid steel chassis

சிறப்பு வசதிகள் மற்றும் உறுதியான கட்டமைப்பு ஆகியவற்றில் சிறிதும் சமரசம் இல்லாத வாகனமாக கோமெட் இவி தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த காரின் உறுதித் தன்மைக்காக அதிக உறுதியான ஸ்டீல் சேஸிஸ்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஆகையால், இதன் உறுதித் தன்மைக்கு எந்தவகையிலும் குறைச்சல் இருக்காது.

எம்ஜி நிறுவனம் இந்த காரை அதன் புதிய ஜிஎஸ்இவி (GSEV platform) பிளாட்பாரத்தை பயன்படுத்தி தயார் செய்திருக்கின்றது. ஆகையால், தொழில்நுட்ப விஷயத்திலும் கோமெட் இவி நம்மை பிரம்மிக்க வைக்கும் வகையில் இருக்கின்றது. முற்றிலும் தனித்துவமான அமைப்பிலான ஸ்டியரிங் வீல், இருக்கைகள், முழு டிஜிட்டல் திறன் கொண்ட 10.25 அங்குல இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் 10.25 அங்குகல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை கோமெட்டில் வழங்கப்பட்டிருக்கும்.

இதுதவிர இன்டர்நெட் இணைப்பு வசதி, மல்டி மீடியா மற்றும் கன்னெக்ட் அம்சங்கள் உள்ளிட்டவையும் இந்த காரில் இடம் பெற இருக்கின்றன. மேலும், கூடுதல் பிரீமியம் அம்சங்களாக கேபினை விரைவில் கூலாக்கும் வசதிக் கொண்ட ஏசி சிஸ்டம் இந்த காரில் வழங்கப்பட இருக்கின்றது. இந்த ஏசி வெண்ட் பிரத்யேகமாக மைய கன்சோல் பகுதியில் இருக்கும்.

இதுபோன்று இன்னும் பல ஏராளமான வசதிகளைக் கொண்ட காராகவே எம்ஜி கோமெட் இந்திய மின் வாகன சந்தையைக் களம் காண இருக்கின்றது. இத்தகைய சூப்பரான எலெக்ட்ரிக் காரின் உற்பத்தியையே எம்ஜி தற்போது இந்தியாவில் தொடங்கி இருக்கின்றது. மேலும், முதல் யூனிட் கோமெட் இவி உற்பத்தி செய்யப்பட்டு ஆலையில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கின்றது.

இந்த எலெக்ட்ரிக் கார் டாடா மோட்டார்ஸின் மலிவு விலை எலெக்ட்ரிக் கார் மாடலான டியாகோ இவிக்கு போட்டியாளனாக கருதப்படுகின்றது. இதன் அடிப்படையிலேயே நிறுவனம் மிகக் குறைவான விலையில் இக்காரை விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், அதில் இடம் பெற்றிருக்கும் பிரீமியம் தர அம்சங்கள், டியாகோ இவி-யைவிட அதிக விலைக் கொண்டதாக கோமெட் இவி விற்பனைக்கு வரும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

எம்ஜி கோமெட் ஓர் ஐவர் (டிரைவருடன் சேர்த்து) அமர்ந்து பயணிக்கும் அளவிற்கு இட வசதிக் கொண்ட இரு கதவுக் கொண்ட காராகும். இந்த காரில் எத்தனை விதமான பேட்டரி பேக் ஆப்ஷன்கள் வழங்கப்படும் என இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதேவேளையில், கட்டாயம் 25 kWh பேட்டரி பேக் ஆப்ஷன் முதன்மையான தேர்வாக வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 150கிமீ முதல் 200கிமீ தூரம் வரையில் பயணிக்க முடியும். சற்றுக் குறைவான விலையில் கோமெட் இவி விற்பனைக்குக் கிடைக்க வேண்டும் என்கிற நோக்கிலேயே இந்த அளவு குறைவான ரேஞ்ஜை தரக் கூடிய பேட்டரி பேக் கோமெட்டில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஓர் எல்எஃப்பி ரக பேட்டரி பேக்காகும். இத்துடன், 50kW திறன் கொண்ட மின் மோட்டாரே பயன்படுத்தப்பட இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து

எம்ஜி நிறுவனம் அதன் கோமெட் இவி எலெக்ட்ரிக் காரின் உற்பத்தியை தொடங்கி இருப்பது போட்டி நிறுவனங்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இன்னும் ஒரு சில நாட்களே இதன் அதிகாரப்பூர்வ வருகைக்கு இருப்பதால் மின் வாகன பிரியர்கள் இதன் வருகையை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கின்றனர். நாங்களும் இதன் வருகைக்காக மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றோம்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 13, 2023, 15:16 [IST]
English summary
Mg rolls out first unit of comet smart ev
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+