பார்த்தா ஏதோ சின்ன பசங்க மாதிரி இருக்காங்க! சைலெண்டா எங்க வளர்ந்து நிக்குறாங்க தெரியுமா?
எம்ஜி நிறுவனம் தனது அக்டோபர் மாத விற்பனை விபரங்களை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மாதம் இந்நிறுவனம் 5000க்கும் அதிகமான கார்களை மீண்டும் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
நவம்பர் மாதம் பிறந்துவிட்ட நிலையில் தற்போது கார் தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் வரிசையாக தங்கள் அக்டோபர் மாத விற்பனை விபரங்களை வெளியிட்டு வருகின்றன. அதன்படி தற்போது எம்ஜி நிறுவனமும் தனது அக்டோபர் மாத விற்பனை விபரத்தை வெளியிட்டுள்ளது. எம்ஜி நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் மீண்டும் தனது 5000 கார்கள் விற்பனை என்ற எண்ணிக்கையை கடந்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் மட்டும் இந்நிறுவனம் மொத்தம் 5108 கார்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாத விற்பனையை விட 16.97% அதிகமாக இருக்கிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்நிறுவனம் 4367 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. தற்போது கூடுதலாக 741 கார்கள் அதிகமாக விற்பனையாகி உள்ளன.
செப்டம்பர் மாத விற்பனையை பார்த்தால் செப்டம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம் 5,003 கார்கள் எம்ஜி நிறுவனம்த்தாள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதை ஒப்பிடும்போது தற்போது 105 கார்கள் அதிகமாக உள்ளது. இது 2.10 சதவீத வளர்ச்சியாக இருக்கிறது. எம்ஜி நிறுவனத்தில் இந்த வளர்ச்சிக்கு இது பண்டிகை காலம் என்பது மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. இதனால் மீண்டும் எம்ஜி நிறுவனம் 5000 என்ற கோட்டை தாண்டி தற்போது விற்பனையை அதிகரித்துள்ளது.

எம்ஜி நிறுவனம் பல்வேறு தரப்பட்ட வாகனங்களை அறிமுகப்படுத்துவதில் முனைப்பு காட்டி வருகிறது. இதனால் மெல்ல மெல்ல நிறுவனத்தின் விற்பனை அதிகரித்துக் கொண்டே வருகிறது. எம்ஜி நிறுவனம் வெளியிடும் கார்கள் மக்களின் கவனத்தை பெறுகிறது. அந்நிறுவனத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் எம்ஜி நிறுவனமும் தனது விற்பனையை தொடர்ந்து ஸ்டேபிளாக வளர்த்துக் கொண்டே போகிறது.
எம்ஜி நிறுவனம் இந்த காலாண்டை ஒரு மிகப்பெரிய பாசிட்டிவ் சிக்னலுடன் துவங்கி உள்ளது. இந்த நிறுவனம் இந்தியாவில் கிளீனான நம்பகத் தன்மையான மாற்று எரிசக்தி கொண்ட வாகனங்களாக தயாரிக்க திட்டமிட்டு வருகிறது. உலகம் முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறிவரும் நிலையில் எம்ஜி நிறுவனமும் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

எம்ஜி நிறுவனம் கோமெட் இவி என்ற சிறிய ரக எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியது. இந்த கார் எலெக்ட்ரிக் ரக காரில் சிறிய காராக இருந்தாலும், சில பிரிமியம் அம்சங்கள் கொண்ட காராக உள்ளது. இந்த காரின் விற்பனையும் மெல்ல மெல்ல அதிகமாய் கொண்டே தான் இருக்கிறது.
எம்ஜி நிறுவனம் இந்தியாவிற்குள் நுழையும் போது அதிக தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த கார்களை அறிமுகப்படுத்தும் நிறுவனமாக நுழைந்தது. இன்றும் அந்த பெயரை தக்க வைத்துள்ளது. இந்நிறுவனத்தின் கார்களில் அதிகமான தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்திருக்கும். எம்ஜி நிறுவனம் அதன் காரில் தொழில்நுட்ப அம்சங்களுக்கு தான் முக்கியத்துவம் அளித்து அதை வடிவமைத்து வருகிறது.

இதன் காரணமாக இந்நிறுவனத்திடம் குறைந்த விலை கார்கள் இல்லை. அதிக தொழில்நுட்ப அம்சங்களை சேர்க்கும்போது வாகனத்தின் விலை தானாக கூடி விடுகிறது. இருந்தாலும் தொழில்நுட்ப விரும்பிகள் பலர் எம்ஜி நிறுவனத்தின் வாகனங்களை வாங்க ஆர்வமாக இருக்கின்றனர். இதனால் இந்நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் பயணித்துக் கொண்டே இருக்கிறது காரை கூட எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி நிறுவனம் இந்தியாவில் காலடி தளத்தை எடுத்து வைக்கும் போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிறுவனமாக இருந்தது. இருந்தாலும் இந்நிறுவனம் அதிக விலை கொண்ட காரர்களை விற்பனை செய்வதால் விற்பனை எண்ணிக்கை குறைவாக இருந்தது. தற்போது அதுவும் படிப்படியாக வளர்ந்து கொண்டே இருக்கிறது. மக்கள் பலர் இந்நிறுவனத்தின் மீது நம்பிக்கை வைத்ததற்கு இது ஒரு சான்றாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications









