பெட்ரோலும் தேவையில்லை, சார்ஜூம் போட வேணாம்! மார்கெட்டையே அடித்து நொறுக்கப்போகும் புதிய எம்ஜி எம்பிவி கார்!

எம்ஜி நிறுவனம் ஹைட்ரஜன் ப்யூயல் செல் தொழிற்நுட்பத்தில் இயூனிக் 7 என்ற எம்பிவிகாரை ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தியுள்ளது.இது குறித்த முழுமையான விபரங்களைக் காணலாம் வாருங்கள்

இன்று வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் வரிசையாக எலெக்ட்ரிக் வாகனங்கள், ஹைபிரிட் வாகனங்கள் என மாசுவை கட்டுப்படுத்தவும் பயண செலவுகளைக் குறைக்கும் வாகனங்களைத் தயாரித்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தி வருகின்றனர் மக்கள் மத்தியிலும் இந்த வாகனங்களுக்கான மவுசு அதிகரித்துக்கொண்டே வருகிறது. எல்லோரும் இப்படியான திசையில் பயணித்துக்கொண்டிருக்க எம்ஜி நிறுவனம் தற்போது மாற்று யோசனையில் சிந்தித்து இந்தியாவில் ஹைட்ரஜன் ஃப்யூயல் செல் காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

பெட்ரோலும் தேவையில்லை, சார்ஜூம் போட வேணாம்! மார்கெட்டையே அடித்து நொறுக்கப்போகும் புதிய எம்ஜி எம்பிவி கார்!

இந்த ஹைட்ரஜன் ப்யூயல் செல் என்பது முற்றிலும் வித்தியாசமான ஒரு காராகும். இதுக்கு பெட்ரோலும் தேவையில்லை, பேட்டரியை சார்ஜ் போடவும் தேவையில்லை. இது முழுவதுமாக ஹைட்ரஜன் என்ற வாயு மூலம் இயங்கும் ஒரு வாகனமாகும். இந்த காரில் எலெக்ட்ரிக் மோட்டார் இருக்காது. மாறாக இன்டர்னல் கம்பஷன் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதில் பெட்ரோலுக்கு பதிலாக ஹைட்ரஜன் எரி வாயு எரிபொருளாகப் பயன்படுத்தப்படும். இந்த முறையும் சுற்று சூழலுக்கு எந்தவகையிலும் தீங்கு செய்யாத ஒரு முறையாகும்.

இந்த இன்டர்னல் கம்பஷன் இன்ஜினிலிருந்த கழிவாக வெளியேறுவது புகை கிடையாது. அதற்கு மாறாக தண்ணீர், அதாவது எரியாத ஹைட்ரஜன் வெளியே வந்து வெளியில் உள்ள காற்றுடன் கலந்து அதிலுள்ள ஆக்ஸிஜனை எடுத்து H2o ஆக மாறுகிறது. இது நமக்குத் தண்ணீராகக் கிடைக்கிறது. இந்த தொழிற்நுட்பத்தில் எம்ஜி நிறுவனம் ஒரு எம்பிவி காரை உருவாக்கியுள்ளது. இந்த எம்பிவி காருக்கு இயூனிக் 7 என பெயரிட்டுள்ளது.

பெட்ரோலும் தேவையில்லை, சார்ஜூம் போட வேணாம்! மார்கெட்டையே அடித்து நொறுக்கப்போகும் புதிய எம்ஜி எம்பிவி கார்!

இந்த கார் பாதுகாப்பான அதே நேரத்தில் ஒரு ஸ்மார்ட்டான காராக எம்ஜிநிறுவனம் வடிவமைத்துள்ளது. மேலும் இந்த காரின் பெர்ஃபாமென்ஸூம் சிறப்பாக இருக்கும்படி வடிவமைத்துள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களைப் பொருத்தவரை பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு அதிகமான நேரம் எடுத்துக்கொள்ளும். ஆனால் இந்த காரை பொருத்தவரை ஹைட்ரஜனை ரீஃபில் செய்ய வேண்டும். இதற்காக இந்த காரில் 6.4 கிலோ அதிக பிரஷர் கொண்ட ஹைட்ரஜன் சிலிண்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சிலிண்டர் காலியானாலும் இதை வெறும் 3 நிமிடத்தில் ரீஃபில் செய்து கொள்ளலாம். இந்த கார் குளிர் முதல் அதிக வெயில் கொண்ட எல்லா தட்ப வெட்ப சூழ்நிலையிலும் சிறப்பாக பணியாற்றும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் இந்த கார் 824 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டது. அதாவது இந்த ஹைட்ரஜன் சிலிண்டர் அவ்வளவு பாதுகாப்பானது எளிதில் விபத்துக்களை எல்லாம் ஏற்படுத்தாது என எம்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெட்ரோலும் தேவையில்லை, சார்ஜூம் போட வேணாம்! மார்கெட்டையே அடித்து நொறுக்கப்போகும் புதிய எம்ஜி எம்பிவி கார்!

இந்த காரில் எம்ஜி நிறுவனம் அதிக திறன் கொண்ட ஹைட்ரஜன் ப்யூயல் செல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மிக முக்கியமாக இந்த காரில் உள்ள 6.5 கிலோ அதிக அடர்த்தி கொண்ட ஹைட்ரஜன் சிலிண்டரை ஒரு முறை முழுமையாக நிரப்பிவிட்டால் 605 கி.மீ வரை தாராளமாகப் பயணிக்க முடியும் எனவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஹைட்ரஜன் ப்யூல் செல் தொழிற்நுட்பம் எம்ஜி நிறுவனம் வடிவமைத்தது. முதன் முறையாக எம்ஜி நிறுவனம் இதை 2001ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. தற்போது இது 3வது முறையாக அப்டேட் செய்யப்பட்டு இந்த காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த 3வது தலை முறை ஹைட்ரஜன் ப்யூயல் செல்கள் இன்டர்கிரேட்டட் டிசைன், நீடித்த உழைப்பு, அதிக பவர் திறன், அதிக நம்பகத்தன்மை, சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு தன்னை மாறிக்கொள்வது என பல அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த செல்லுக்கு Prome 390 எனப் பெயரிட்டுள்ளது.

இந்த இயூனிக்7 காரை எம்ஜி நிறுவனம் ஒரு கான்செப்ட் காராகவோ அல்லது தொழிற்நுட்ப அம்சமாகவோ வெளியிடவில்லை. மாறாக புரோடெக்ஷன் ரெடி காரையே எம்ஜி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த காரில் ப்யூல் செல்லைப் பொருத்தவரை 83.5 கிலோ வாட் திறன் கொண்டதாகவும், 70எம்பிஏ ஹைட்ரஜன் ஸ்டேரேஜ் சிஸ்டத்தை கொண்டதாகவும் இருக்கிறது. இந்த காரில் ஸ்பேஸ் கிரேடு கார்பன் பில்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது.

இந்த கார் மார்கெட்டிற்கு வந்தால் மக்கள் பலரின் கவனத்தை தன் வசம் ஈர்க்கும் பெட்ரோல் கால போல திறனைக் கொண்ட இந்த காரில் எலெக்டரிக் காரில் உள்ள பிரச்சனைகள் எதுவும் இருக்காது. இந்த கார் விற்பனைக்கு வந்தால் விற்பனையில் பெரும் புரட்சியே ஏற்படும் இது குறித்த உங்கள் கருத்துக்களைக் காணலாம் வாருங்கள்.

Most Read Articles
English summary
MG unveils Euniq 7 hydrogen fuel cell Mpv car in auto expo 2023
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X