இந்த கம்பெனிக்கு இவ்ளோ பெரிய ஆர்டர் கெடச்சிருக்கா! மத்த நிறுவனங்களுக்கு இந்நேரம் வயித்தெரிச்சலே வந்திருக்கும்!

இந்தியாவை சேர்ந்த பிரபலமான நிறுவனங்களில் ஒன்று ப்ளூஸ்மார்ட் (BluSmart). ஹரியானா மாநிலம் குர்கான் நகரை தலைமையிடமாக கொண்டு, ப்ளூஸ்மார்ட் இயங்கி கொண்டுள்ளது. இது ஒரு ரைடு-ஷேரிங் நிறுவனம் ஆகும். அனைவருக்கும் புரியும்படி சொல்வதென்றால், ஓலா (Ola) மற்றும் உபேர் (Uber) போன்ற நிறுவனங்களை போல்தான் ப்ளூஸ்மார்ட் நிறுவனமும் இயங்கி வருகிறது.

அதாவது ப்ளூஸ்மார்ட் செல்போன் செயலியில் முன்பதிவு செய்து கொண்டு, அந்த நிறுவனத்தின் கார்களில் நீங்கள் பயணம் செய்யலாம். டாடா எக்ஸ்பிரஸ்-டி இவி (Tata Xpres-T EV) உள்ளிட்ட எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) மூலமாக ப்ளூஸ்மார்ட் நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கி கொண்டுள்ளது.

MG ZS EV

இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகரமான பெங்களூர் ப்ளூஸ்மார்ட் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களை நீங்கள் சர்வ சாதாரணமாக காண முடியும். இந்த சூழலில், இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனத்திற்கு மிகப்பெரிய ஆர்டர் ஒன்றை, ப்ளூஸ்மார்ட் நிறுவனம் தற்போது வழங்கியுள்ளது.

இது 500 எம்ஜி இஸட்எஸ் இவி (MG ZS EV) எலெக்ட்ரிக் கார்களுக்கான ஆர்டர் ஆகும். எம்ஜி இஸட்எஸ் இவி, இந்தியாவில் அதிகமாக விற்பனையாகி கொண்டுள்ள எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார்களில் ஒன்று. டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் (Tata Nexon EV Max) மற்றும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் (Hyundai Kona Electric) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுடன், எம்ஜி இஸட்எஸ் இவி போட்டியிட்டு வருகிறது.

BluSmart

எம்ஜி இஸட்எஸ் இவி எலெக்ட்ரிக் காரில், 50.3 kWH பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 461 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என எம்ஜி மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொலை தூர பயணங்களுக்கும் ஏற்ற ரேஞ்ச் (Range) என்பதில் நமக்கு துளியும் சந்தேகமில்லை.

தற்போதைய நிலையில் எம்ஜி இஸட்எஸ் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை (Price) 23.38 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 27.40 லட்ச ரூபாயாக உள்ளது. இவை புது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு விலை உயர்ந்த ஒரு காரை 500 என்ற எண்ணிக்கையில் வாங்க ப்ளூஸ்மார்ட் நிறுவனம் முன்வந்திருப்பதால், இதனை எம்ஜி மோட்டார் நிறுவனத்திற்கு கிடைத்த மிகப்பெரிய ஆர்டர்களில் ஒன்றாக குறிப்பிடலாம். எம்ஜி இஸட்எஸ் இவி எலெக்ட்ரிக் கார் விலை உயர்ந்தது என்றாலும் கூட, அதற்கேற்ற வகையில் பல்வேறு அதிநவீன வசதிகளை பெற்றுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகம் மிக வேகமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி கொண்டிருப்பதையே இது நமக்கு உணர்த்துகிறது. தனியார் நிறுவனங்கள் மட்டுமின்றி, பல்வேறு அரசு துறைகளும் கூட, வழக்கமான பெட்ரோல் (Petrol), டீசல் (Diesel) வாகனங்களுக்கு பதிலாக தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளன.

More from DriveSpark

Article Published On: Friday, June 9, 2023, 13:11 [IST]
English summary
Mg zs ev 500 units order blusmart all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+