இவ்வளவு கம்மியான விலையில் இந்த எலக்ட்ரிக் கார் கிடைக்குறது அபூர்வம்! தீபாவளியை டார்க்கெட் செய்து விலை குறைப்பு

எம்ஜி இசட்.எஸ் இவி (MG ZS EV) எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் இந்தியாவில் அதிரடியாக குறைக்கப்பட்டு உள்ளது. வரவிருக்கும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்தை முன்னிட்டு கொண்டுவரப்பட்டுள்ள இந்த விலை குறைப்பு குறித்தும், இந்த எம்ஜி எலக்ட்ரிக் காரை பற்றியும் இனி பார்க்கலாம்.

இந்தியாவில் எலக்ட்ரிக் கார் கலாச்சாரத்தை கொண்டுவர முனைப்புடன் இருக்கும் நிறுவனங்களுள் ஒன்று எம்ஜி மோட்டார். இந்த பிரிட்டிஷ் கார் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து தற்போதைக்கு இசட்.எஸ் இவி, கோமெட் இவி என இரு எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில், இசட்.எஸ் இவி எலக்ட்ரிக் காரின் விலை பெரிய அளவில் குறைக்கப்பட்டு உள்ளது.

mg zs ev prices reduced

எக்ஸைட், எக்ஸ்க்ளூசிவ் மற்றும் எக்ஸ்க்ளூசிவ் புரோ என மொத்தம் 3 விதமான வேரியண்ட்களில் எம்ஜி இசட்.எஸ் இவி எலக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படுகிறது. இதில், எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்டான எக்ஸைட் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.50,000 குறைக்கப்பட்டு உள்ளது. இதன் விளைவாக, எம்ஜி இசட்.எஸ் இவி எலக்ட்ரிக் காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.22.88 லட்சமாக குறைந்துள்ளது.

அதேபோல், எம்ஜி இசட்.எஸ் இவி எலக்ட்ரிக் காரின் எக்ஸ்க்ளூசிவ் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.2.30 லட்சமும், எக்ஸ்க்ளூசிவ் புரோ வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2 லட்சமும் குறைக்கப்பட்டுள்ளது. இசட்.எஸ் இவி எக்ஸ்க்ளூசிவ் வேரியண்ட்டின் புதிய எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.25 லட்சம் மற்றும் எக்ஸ்க்ளூசிவ் புரோ வேரியண்ட்டின் புதிய எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.25.90 லட்சம்.

mg zs ev prices reduced

இந்த எக்ஸ்க்ளூசிவ் மற்றும் எக்ஸ்க்ளூசிவ் புரோ வேரியண்ட்களை ஐகானிக் ஐவோரி அலங்கரிப்புடன் பெற கூடுதலாக ரூ.10,000 செலுத்த வேண்டியிருக்கும். இசட்.எஸ் இவி எலக்ட்ரிக் எஸ்யூவி காரில் 50.3kWh பேட்டரி தொகுப்பு மற்றும் சிங்கிள் எலக்ட்ரிக் மோட்டார் செட்அப் வழங்கப்படுகிறது. இந்த செட்-அப்பின் மூலமாக 174 பிஎச்பி மற்றும் 280 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம்.

இந்த காரில் வழங்கப்படும் 50.3kWh பேட்டரி தொகுப்பை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 419கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். எம்ஜி காரை பற்றிய செய்தியை பார்க்கும்போது தான் மற்றொன்றும் ஞாபகத்திற்கு வருகிறது. அதாவது, இந்தியாவில் எம்ஜி மோட்டாரை சீனாவின் SAIC மோட்டார் கார்ப்பிரேஷன் உடன் இணைந்து இந்தியாவின் மும்பையை சேர்ந்த JSW குழுமம் நிர்வகிக்க உள்ளது.

mg zs ev prices reduced

இதற்கான ஒப்பந்தம் சமீபத்தில்தான் ஒப்பந்தமானதாக செய்திகள் வெளிவந்தன. இதற்கிடையில், கேரளாவின் திருவனந்தபுரத்தில் புதிய சேல்ஸ் & சர்வீஸ் மையத்தை சுமார் 25,000 சதுர அடி பரப்பளவில் எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் திறந்துள்ளது. இதனுடன் சேர்த்து, இந்தியாவில் மொத்தம் 340 வாடிக்கையாளர் தொடுமையங்கள் சுமார் 157 நகரங்களில் எம்ஜி மோட்டார் நிறுவனத்துக்கு உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தீபாவளி பண்டிகை காலத்தை முன்னிட்டு தான் இந்த விலை குறைப்பு கொண்டுவரப்பட்டு உள்ளது என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது. இதில் சிறப்பு என்னவென்றால், இந்த சலுகை ஓர் எலக்ட்ரிக் காருக்கு வழங்கப்பட்டு இருப்பதுதான். ஆதலால், சற்று பிரீமியம் தரத்தில் எலக்ட்ரிக் காரை வாங்க நினைப்பவர்கள் எம்ஜி இசட்.எஸ் இவி-ஐ வாங்க இதுவே சரியான நேரமாகும்.

More from DriveSpark

Article Published On: Friday, October 6, 2023, 17:03 [IST]
English summary
Mg zs ev electric car prices reduced
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X