குறுக்க ஏதாச்சும் காரோ, மனுசனோ வந்தா தானாகவே பிரேக் பிடிக்கும்.. அடாஸ் அம்சத்துடன் எம்ஜி இசட்எஸ் இவி அறிமுகம்!

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் சொகுசு வசதிகள் நிறைந்த எலெக்ட்ரிக் கார் மாடல்களில் எம்ஜி நிறுவனத்தின் இசட்எஸ் இவி (MG ZS EV)-யும் ஒன்று. இந்த கார் மாடலின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனே தற்போது இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது.

லெவல் 2 அடாஸ் (Advanced driver-assistance system) அம்சத்துடன் இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல சிறப்புகளைத் தாங்கிய வாகனமாகவே எம்ஜி இசட்எஸ் இவி தற்போது இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

Mg zs ev launched

அறிமுகமாக இதற்கு ரூ. 23.38 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது ஆரம்ப நிலை வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேளையில், அடாஸ் அம்சம் கொண்டிருக்கும் உயர்நிலை தேர்வுக்கு ரூ. 27.89 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

இது அறிமுக ஆஃபர் விலை ஆகும். இன்னும் சில தினங்களுக்கு மட்டுமே இந்த விலையில் புதிய எம்ஜி இசட்எஸ் இவி விற்பனைக்குக் கிடைக்கும். இதற்கு பின்னர் விலை கணிசமான அளவு உயர்த்தப்பட இருக்கின்றது. ஆனால், எவ்வளவு உயர்த்தப்பட இருக்கின்றது என்கிற விபரம் வெளியிடப்படவில்லை.

Mg zs ev features

இருப்பினும், அது பெரிய அளவில் இருக்காது என எதிர்பார்க்கப்படுகின்றது. மிகவும் கணிசமான அளவே உயர்த்தப்பட வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், இதை நம்மால் உறுதியாக கூறிவிட முடியாது. மிகப் பெரிய விலையை உயர்த்தவும் வாய்ப்புகள் இருக்கின்றன. தற்போது விற்பனைக்கு வந்திருக்கும் எம்ஜி இசட்எஸ் இவி-யின் அடாஸ் அம்சம் கொண்ட தேர்வே ஈர்க்கும் வகையில் உள்ளது.

இந்த அம்சத்தின் வாயிலாக டிராஃபிக் ஜாம் அசிஸ்ட், ஃபார்வார்டு கொலிசன் வார்னிங், அவசர காலத்தில் தானாக பிரேக் பிடிக்கும் வசதி, ஸ்பீடு அசிஸ்ட் சிஸ்டம், லேன் கீப் அசிஸ்ட், அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல் என எக்கசக்க வசதிகளை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.

Mg zs ev charging ecosystem

அடாஸ் தொழில்நுட்பத்தைப் பெறும் முதல் எம்ஜி கார் என இசட்எஸ் இவி-யை நினைத்துக் கொள்ள வேண்டாம். இது நிறுவனத்தின் நான்காவது அடாஸ் அம்சத்தைப் பெறும் தயாரிப்பாகும். ஹெக்டர், அஸ்டர் மற்றும் குளோஸ்டர் ஆகிய கார் மாடல்களில் இந்த அம்சம் ஏற்கனவே வழங்கப்படுகின்றது.

இந்த நிலையிலேயே புகழ்பெற்ற எலெக்ட்ரிக் கார் மாடலான இசட்எஸ் இவி-யிலும் இந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கின்றது. எம்ஜி நிறுவனம் இந்த காரின் பக்கம் வாடிக்கையாளர்களைக் கவர பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றது. குறிப்பாக சார்ஜிங் தட்டுப்பாடு என்கிற நிலை இருக்கக் கூடாது என்பதில் அது அதிக கவனத்துடன் இருப்பதை நம்மால் உணர முடிகின்றது.

Mg zs ev autonomous level 2 adas launched

காருடன் போர்டபிள் சார்ஜர், ஏசி ஃபாஸ்ட் சார்ஜர், டிசி ஃபாஸ்ட் சார்ஜர் ஆகிய வசதிகள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, டீலர்ஷிப்புகளில் சார்ஜ் செய்துக் கொள்ளும் வசதி, ரோடு சைடு மொபைல் அசிஸ்டன் மற்றும் குடியிருப்பு பகுதியிலேயே சார்ஜிங் வசதி ஏற்படுத்திக் கொடுத்தல் உள்ளிட்டவற்றை எம்ஜி செய்துக் கொடுக்க இருக்கின்றது.

புதிய இசட்எஸ் இவி-யின் வருகை இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஹூண்டாய் கோனா இவி மற்றும் பிஒய்டி அட்டோ 3 ஆகிய எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கு போட்டியாக அமைய இருக்கின்றது. புதிய எம்ஜி இசட் எஸ் இவி எலெக்ட்ரிக் காரில் ஓர் முழு சார்ஜில் நம்மால் 461 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதற்காக புதிய இசட்எஸ் இவி-யில் 50.3 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த எலெக்ட்ரிக் காரை தூசி மற்றும் தண்ணீரால் பாதிக்காத வாகனமாக எம்ஜி உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தகுந்தது. ஏற்கனவே இந்த காருக்கு இந்தியாவில் கணிசமான அளவு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே அடாஸ் அம்சத்தை கூடுதல் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு எம்ஜி வழங்கி இருக்கின்றது. ஆகையால், வரும் நாட்களில் விற்பனையில் இந்த கார் வெற்றி நடைபோடும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 12, 2023, 16:00 [IST]
English summary
Mg zs ev launched with adas here is full details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X