நெக்ஸான் இவிக்கு போட்டியா இருந்துட்டு இத்தன யூனிட் விற்பனையாகிருச்சா! இருக்கு எம்ஜிக்கு மச்சம் எங்கேயோ இருக்கு

இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எலெக்ட்ரிக் கார் (Electric Car) மாடலாக டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் நெக்ஸான் இவி (Nexon EV) இருக்கின்றது. இந்த கார் இரு விதமான மாடல்களாக இந்திய மின்சார வாகன சந்தையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

நெக்ஸான் இவி மேக்ஸ் (Nexon EV Max) மற்றும் நெக்ஸான் இவி பிரைம் (Nexon EV Prime) ஆகியவையே அவை ஆகும். இந்த இரண்டிற்கும் போட்டி அளிக்கும் விதமாக நாட்டில் தற்போது விற்பனையில் இருக்கும் எலெக்ட்ரிக் கார் மாடல்களில் எம்ஜி இசட்எஸ் இவி (MG ZS EV) மாடலும் ஒன்றாகும்.

Mg zs ev front profile

இந்த எலெக்ட்ரிக் காரே தற்போது இந்தியாவில் விற்பனையில் புதிய சாதனையைப் படைத்து இருப்பதாக இந்த காரை உற்பத்தி செய்து வரும் எம்ஜி நிறுவனம் தகவல் வெளியிட்டிருக்கின்றது. டாடா நெக்ஸானைக் காட்டிலும் பலமடங்கு அதிக விலையைக் கொண்டிருக்கின்ற ஓர் எலெக்ட்ரிக் கார் மாடலே எம்ஜி இசட்எஸ் இவி.

இந்த மின்சார கார் இரு விதமான வேரியண்டுகளில் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. எக்சைட் மற்றும் எக்ஸ்க்ளூசீவ் அவை ஆகும். இதில், எக்சைட் தேர்வு ரூ. 23.38 லட்சம் என்கிற விலையிலும், எக்ஸ்க்ளூசீவ் 27.29 லட்ச ரூபாய் என்கிற விலையிலும் விற்கப்பட்டு வருகின்றது.

Mg zs ev front design

இத்தகைய அதிகபட்ச விலையைக் கொண்டிருக்கின்ற போதிலும் எம்ஜி இசட்எஸ் இவி இந்திய மின்சார வாகன சந்தையில் விற்பனையில் சாதனைப் படைத்திருக்கின்றது. 10 ஆயிரம் யூனிட் விற்பனையையே அது எட்டி இருக்கின்றது. இந்த தகவல் ஒட்டுமொத்த இந்திய வாகன உலகிற்கும் ஆச்சரியமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

சமீப காலமாக இந்தியாவில் சொகுசு வசதிகள் நிறைந்த வாகனங்களுக்கு வரவேற்பு இரட்டிப்பு அடைந்துக் காணப்படுகின்றது. அந்தவகையிலேயே இந்த அதிக விலைக் கொண்ட எலெக்ட்ரிக் காருக்கான வரவேற்பும் நாட்டில் அதிகரித்துள்ளது. இதன் விளைவாகவே 10 ஆயிரம் யூனிட் விற்பனை என்கிற மைல்கல்லை இசட்எஸ் இவி எட்டி இருக்கின்றது.

Mg zs ev side view

இது சற்று ஸ்லோவான விற்பனை வளர்ச்சி என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் முதன் முதலில் 2019 ஆம் ஆண்டிலேயே இந்தியாவில் கால் தடம் பதித்தது. இதற்கு பின்னர் இதன் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷன் 2022 மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டடது. கிட்டதட்ட இந்த கார் இந்தியாவில் களமிறங்கி ஐந்து ஆண்டுகள் ஆகின்றன.

இந்த நிலையிலேயே 10 ஆயிரம் யூனிட் விற்பனை எண்ணிக்கையை அது எட்டி இருக்கின்றது. ஆனால், டாடா நெக்ஸானோ லட்சம் யூனிட் விற்பனையைக் கடந்து அடுத்தடுத்த மைல்கல்லை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கின்றது. அதன் அசூர வளர்ச்சிக்கு அதன் மலிவு விலையே மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகின்றது.

Mg zs ev interior

டாடா நெக்ஸான் இவி ரூ. 14.49 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. எம்ஜி இசட்எஸ் இவி-யைக் காட்டிலும் 9 லட்சம் ரூபாய் வரை இதன் விலை குறைவு. இந்த காரணத்தினாலேயே இந்தியாவில் விற்பனையில் நெக்ஸான் இவி கெத்துக் காட்டிக் கொண்டிருக்கின்றது.

அதேவேளையில், டாடா நெக்ஸானைக் காட்டிலும் பிரீமியம் வசதிகளில் மிக சிறந்த தயாரிப்பாக இசட்எஸ் இவி காட்சியளிக்கின்றது. இதனாலேயே இதன் விலை பலமடங்கு அதிகமாக உள்ளது. ஓர் முழு சார்ஜில் 461 கிமீ தூரம் வரை இந்த எலெக்ட்ரிக் காரில் பயணிக்க முடியும். ஆனால், நெக்ஸான் இவியில் 312 கிமீ தூரம் வரை மட்டுமே பயணிக்க முடியும்.

நவீன தொழில்நுட்ப வசதிகளாக இசட்எஸ் இவி இ-காரில் 75க்கும் மேற்பட்ட கார் இணைப்பு வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், 25.7 செமீ அளவுள்ள எச்டி ரக தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் க்ளஸ்டர், டூயல் பேன் பனோரமிக் சன்ரூஃப், பிஎம் 2.5 ரக ஏர் ஃபில்டர், ரியர் பகுதிக்கான ஏசி துளைகள், ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட டிஜிட்டல் சாவி என எக்கச்சக்க அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு உள்ளன.

இதுதவிர, ரியர் டிரைவ் அசிஸ்ட், பார்க்கிங் சென்சாருடன் கூடிய 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, ஹில் டெசன்ட் கன்ட்ரோல் மற்றும் மழை பொழிந்தால் தானாகவே வைப் செய்யும் வைப்பர் ஆகியவையும் எம்ஜி இசட்எஸ் இவி எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

மேலும், இந்த காரில் அதிக பவர்ஃபுல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் வெறும் 8.5 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய வசதிகளைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே கணிசமான அளவு நல்ல வரவேற்பை இசட்எஸ் இவி தற்போது நாட்டில் பெற்றுக் கொண்டிருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி நிறுவனம் இந்தியாவில் அதன் மலிவு விலை எலெக்ட்ரிக் காரை விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. கோமெட் இவி-தான் அது. இந்த காருக்கு ரூ. 8 லட்சத்திற்கும் குறைவான விலையே அது நிர்ணயித்துள்ளது. ஆகையால், விரைவில் நிறுவனம் இந்தியாவின் முன்னணி மின்சார கார் விற்பனையாளராக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, May 25, 2023, 8:51 [IST]
English summary
Mg zs ev touches 10000 unit sales milestone
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X