இந்த கார் மட்டும் வந்தா போதும் டாடா தலையில துண்ட தான் போடனும்! எம்ஜி போடும் மாஸ்டர் பிளான்!

எம்ஜி நிறுவனம் தனது கோமெட் இவி காரின் எஸ்யூவி வெர்ஷனை விரைவில் வெளியிடப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் தற்போது எஸ்யூவி கார்களுக்கான மார்க்கெட் மிகப்பெரியதாக வளர்ந்து வருகிறது. புதிதாக கார் வாங்க நினைக்கும் பலர் எஸ்யூவி ரக கார்களை தான் அதிகம் விரும்புகின்றனர். இதனால் இந்தியாவில் எஸ்யூவி காரர்களின் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது. அதே நேரம் செடான் கார்களின் விற்பனை சரிந்து கொண்டே வருகிறது. இதனால் பல கார் தயாரிப்பாளர்கள் தங்கள் கார்களை எஸ்யூவி ரக கார்களாக மாற்றியமைத்து விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

mg comet suv

இந்திய கார் தயாரிப்பாளர்கள் போல எஸ்யூவி என்ற காருக்கான அர்த்தத்தையே மாற்றி அமைத்துள்ளனர். எந்த கார் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் உயர்வான சீட்டிங் பொசிஷன் இருக்கிறதோ அதை எல்லாம் எஸ்யூவி கார் என குறிப்பிடப்படுகிறது. இந்நிலையில் எம்ஜி நிறுவனம் தனது சிறிய ரக எஸ்யூவி கார் ஒன்றை தயாரித்து வருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளன.

எம்ஜி நிறுவனம் சமீபத்தில் தான் கோமெட் என்ற சிறிய ரக எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியது. இந்த காரை அப்டேட் செய்து கோமெட் எஸ்யூவி காராக இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவர எம்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எம்ஜியின் துணை நிறுவனமான பௌஜுன் என்ற சீனாவை சேர்ந்த நிறுவனம் இந்த காரை ஏற்கனவே தயார் செய்து யப் என்ற பெயரில் காட்சிப்படுத்தி விட்டது. இந்த கார் சிறிய ரக காராக உருவாக்கப்பட்டுள்ளது.

mg comet suv

பௌஜூன் நிறுவனம் ஏற்கனவே வெளியிட்ட இந்த யப் கார் ஒரு எஸ்யூவி ஸ்டைலில் வடிவமைக்கப்பட்ட சிறிய ரக காராகவும் இந்த கார் மொத்தம் 3381 மிமீ நீளமும் 1685 மிமீ அகலமும் 1721 மிமீ உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் வீல் பேஸை பொருத்தவரை 2110 மிமீ நிளமும் இருக்கிறது.

இந்த கார் தற்போது இந்தியாவில் விற்பனையாகி வரும் கோமெட் இவி காரை ஒப்பிடும்போது 47மிமீ நீளமும் 180மிமீ அகலமும் 45மிமீ உயரமும் 100மிமீ வீல் பேஸூம் அதிகமாக இருக்கிறது. அதாவது இந்த கார் கோமெட் காரை விட சற்று பெரிய காராக தான் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த காருக்கு போட்டியாக தற்போது மார்க்கெட்டில் மாருதி நிறுவனத்தின் எஸ் பிரஸ்ஸோ என்ற கார் இருக்கிறது. இந்த காரும் சிறிய ரக கார் தான். ஆனால் மாருதி நிறுவனம் இதை ஒரு எஸ்யூவி கார் ஸ்டைல் காராக வடிவமைத்துள்ளது. இது மக்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

எம்ஜி நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் புதிய எஸ்யூவி காருக்கான காப்புரிமை குறித்து விண்ணப்பித்திருந்தது. இதன் வடிவமைப்பை பார்க்கும் போது சீனாவில் விற்பனையாகி வரும் யப் கார் போன்ற எஸ்யூவி கார் வடிவம் போல தான் இருந்தது. இந்த காருக்கான காப்புரிமையையும் பெற்றுள்ளது.

பௌஜூன் நிறுவனத்தின் லோகோவிற்கு பதிலாக இதில் முன்பக்கம் எம்ஜி நிறுவனத்தின் லோகோ பொருத்தப்பட்டுள்ளதை தவிர வேறு எந்த மாற்றத்தையும் நம்மால் காண முடியவில்லை. ஒட்டுமொத்தமாக பார்த்தால் இது சற்று உயரமான எஸ்யூவி ஃபிலாஸஃபி கொண்ட சிறிய ரக காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கார் சீனாவில் எலெக்ட்ரிக் காராக தான் விற்பனையாகி வருகிறது. இந்த காரில் 28.1 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. மோட்டாரை பொருத்தவரை 66 பிஎச்பி பவர் கொண்ட மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் முழு சார்ஜில் 33 கிலோமீட்டர் ரேஞ்ச் தரும் என அந்நாட்டில் சான்று அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் இந்த கார் இதேபோன்று வந்தாலும் இதன் பேட்டரி பேக் அம்சத்தில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த காரின் பேட்டரியை பொருத்தவரை 17.3 கிலோவாட் ஹவர் பேட்டரி பொருத்தப்படலாம். அப்படி பொருத்தப்பட்டால் இதற்கு 40 பிஎச்பி மோட்டார் பொருத்தப்படும் இந்த இரண்டும் சேர்ந்து இந்த காரை 230 கிலோ மீட்டர் ரேஞ்ச் தரும் காராக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே எம்ஜி நிறுவனம் தனது கோமெட் காரை எந்த பொருளையும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யாமல் முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்க பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. அது வெற்றி பெற்றால் இந்த காரும் முழுமையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வர வாய்ப்புகள் இருக்கிறது.

இந்த கோமெட் எஸ்யூவி காரின் உட்புறத்தை பொருத்தவரை சீனாவில் விற்பனையாகும் எக்காரை போல அதே டிசைனில் தான் உருவாக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இதன் டேஷ்போர்டு லேஅவுட்டாக கோமெட் கார் போலவே இருக்கிறது. மேலும் இதன் உட்புறம் டூயல் ஸ்கிரீன் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் கிளஸ்டர் ஆகிய உள்ளன.

முக்கியமாக இதில் மூன்று ஸ்போக் ஸ்டேரிங் வீல் இருக்கிறது. இதுபோக இந்த காரின் பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரை 360 டிகிரி கேமரா, எலக்ட்ரிகலி அட்ஜஸ்டபிள் சீட், ரியர் வியூ கேமரா, முன் பக்கம் ஹீட்டடு சீட்டுகள் ஆகியன அம்சங்கள் முக்கியமாக பொருத்தப்பட்டுள்ளது.

எம்ஜி நிறுவனம் குஜராத் மாநிலம் ஹலால் பகுதியில் தனது இரண்டாவது ஆலையை கட்டமைக்க முதலீடுகளைப் பெற்று அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது. தற்போது அந்நிறுவனத்திடம் ஒரே ஒரு தொழிற்சாலை தான் இருக்கிறது. இந்த ஆலையில் தான் இந்த கார் வடிவமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் இந்த கார் வரும் 2025 ஆம் ஆண்டு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் விலையை பொறுத்தவரை இது கோமெட் இவி காரைவிட சற்று பிரிமியம் ரக காராக அறிமுகமாக என்பதால் ரூபாய் 10 லட்சம் முதல் 14 லட்சம் என்ற நிலையில் இந்த கார் அறிமுகமாகலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அடுத்தடுத்த ஆண்டுகளில் எலெக்ட்ரிக் வாகனங்களில் வருகை மிக அதிகமாக இருக்கிறது. பல நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகன சந்தையை பிடிக்க பல்வேறு முயற்சிகளை செய்துள்ளன. அதன்படி எம்ஜி நிறுவனம் இந்த காரை கொண்டு வந்து சிறிய ரக கார் விரும்பிகளை கவர முடிவு செய்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 24, 2023, 20:54 [IST]
English summary
Mgs comet suv ev might be smallest suv in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+