ஸ்கார்பியோ மட்டும் இல்லைனா மஹிந்திராவின் தொழில் என்ன ஆகுறது!! ஒரே மாதத்தில் 13 ஆயிரம் பேர் வாங்குறாங்க!

இந்தியாவில் சமீப ஆண்டுகளாக எஸ்யூவி ரக கார்களுக்கே சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதை பற்றி நான் கூற வேண்டியது இல்லை. ஏனெனில், புள்ளி விபரங்களும் அதை தான் கூறுகின்றன. இதற்கேற்ப, சாலைகளிலும் முன்பை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் எஸ்யூவி ரக கார்களை பார்க்க முடிகிறது.

எஸ்யூவி கார்கள் மைக்ரோ, காம்பெக்ட், சப்-காம்பெக்ட் என பல வகைப்படுகின்றன. அவற்றுள் ஒரு வகை தான் மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் ஆகும். இந்த வகை எஸ்யூவி கார்களின் நீளம் ஆனது 4 மீட்டர்களுக்கும் அதிகமாக இருக்கிறது. இந்தியாவில் தற்போதைக்கு 10 மிட்-சைஸ் எஸ்யூவி கார் மாடல்கள் பல்வேறு விதமான கார் பிராண்ட்களில் இருந்து விற்பனை செய்யப்படுகின்றன.

mid-size suv cars sales report

இந்த 10 மாடல்களுள் தற்சமயம் அதிகமாக விற்பனை செய்யப்படுவது எதுவென்று பார்த்தால், அது மஹிந்திராவின் ஸ்கார்பியோ ஆகும். மஹிந்திரா ஸ்கார்பியோ கார்கள் ஸ்கார்பியோ கிளாசிக் மற்றும் ஸ்கார்பியோ-என் என இரு விதமான வெர்சன்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இவை இரண்டையும் சேர்த்து, கடந்த மாதத்தில் மொத்தம் 13,578 ஸ்கார்பியோ கார்களை மஹிந்திரா விற்பனை செய்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் மொத்தம் 31,354 மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் 13,578 கார்கள் மஹிந்திரா ஸ்கார்பியோ ஆகும். ஆனால், 2022 அக்டோபர் மாதத்தில் வெறும் 7,438 மஹிந்திரா ஸ்கார்பியோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

mid-size suv cars sales report

இந்த வகையில் பார்க்கும்போது, ஸ்கார்பியோ கார்களின் விற்பனை ஆனது சுமார் 82.55%, அதாவது 6,140 யூனிட்கள் அதிகரித்துள்ளது. ஸ்கார்பியோவுக்கு அடுத்து 2வது இடத்திலும் மஹிந்திராவின் மற்றொரு மிட்-சைஸ் எஸ்யூவி காரான எக்ஸ்யூவி700 உள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் மொத்தம் 9,297 எக்ஸ்யூவி700 கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.

ஆனால், 2022 அக்டோபரில் எக்ஸ்யூவி700 கார்களின் விற்பனை எண்ணிக்கை வெறும் 5,815 மட்டுமே ஆகும். இந்த வகையில் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 3,482 எக்ஸ்யூவி700 கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு உள்ளன. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இந்த மஹிந்திரா கார்களே மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகுபவை ஆகும்.

mid-size suv cars sales report

இவற்றிற்கு அடுத்து உள்ளவை, 3 ஆயிரம் யூனிட்களுக்கும் குறைவாகவே விற்பனை செய்யப்படுபவை ஆகும். இந்த வரிசையில் 3வது இடத்தில் எம்ஜி மோட்டாரின் ஹெக்டர் மற்றும் ஹெக்டர் பிளஸ் கார்கள் உள்ளன. இவை இரண்டும் மொத்தமாக கடந்த மாதத்தில் 2,703 யூனிட்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. ஆனால், 2022 அக்டோபர் மாதத்தில் 1,630 எம்ஜி ஹெக்டர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இவ்வாறு, இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் முதல் 3 மிட்-சைஸ் எஸ்யூவி கார்களின் விற்பனை ஆனது 2022 அக்டோபர் மாதத்தை காட்டிலும் கடந்த அக்டோபரில் அதிகரித்துள்ளது. 4வது இடத்தில் உள்ள டாடா ஹெரியர் கார்களின் விற்பனை எண்ணிக்கையும் சரி, அதற்கடுத்த 5வது மற்றும் 6வது இடங்களில் உள்ள ஹூண்டாய் அல்கஸார் மற்றும் டாடா சஃபாரி கார்களின் விற்பனையும் சரி 2022 அக்டோபரை விட கடந்த அக்டோபரில் கணிசமாக குறைந்துள்ளது.

mid-size suv cars sales report

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் மார்க்கெட்டில் முற்றிலுமாக மஹிந்திராவின் ஆதிக்கமாக உள்ளது. அதாவது, மிட்-சைஸ் எஸ்யூவி காரை வாங்க விரும்பும் 3இல் இரண்டு பேரது சாய்ஸ் மஹிந்திராவின் மிட்-சைஸ் எஸ்யூவி கார்களான ஸ்கார்பியோ மற்றும் எக்ஸ்யூவி700 ஆகவே உள்ளது. நீங்கள் ஒன்றை கவனித்தீர்களா? இந்த லிஸ்ட்டில் நம்பர் ஒன் கார் பிராண்டான மாருதி சுஸுகியின் ஒரு கார் கூட இல்லை.

More from DriveSpark

Article Published On: Saturday, November 25, 2023, 23:59 [IST]
English summary
Mid size suv cars sales report mahindra totally dominate check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X