காரில் மொத்தமாகவே மூன்றே 3 கதவுகள் தான், ஆனால் விலை பல இலட்சங்களில்!! பணம் இருந்தாலும் வாங்குவது ரொம்ப கஷ்டம்!

மினி கூப்பர் எஸ்.இ (Mini Cooper SE) எலக்ட்ரிக் காரின் புதிய லிமிடெட் எடிசன் மினி சார்ஜ்டு எடிசன் என்கிற பெயரில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த புதிய மினி காரை பற்றிய விரிவான விபரங்களையும், இந்த புதிய மினி லிமிடெட் எடிசன் கார் எத்தனை யூனிட்கள் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கப் பெறவுள்ளது என்பதையும் இனி பார்க்கலாம்.

மற்ற நாடுகளை போல், எலக்ட்ரிக் கார்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக, புது புது எலக்ட்ரிக் கார்களின் அறிமுகங்களை சமீப ஆண்டுகளாக பார்த்து வருகிறோம். இந்த வகையில் பிஎம்டபிள்யூ குழுமம் இந்தியாவில் அதன் மினி பிராண்டில் இருந்து கூபே எஸ்.இ என்ற 3 கதவுகளை கொண்ட எலக்ட்ரிக் காரை சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தியது.

mini charged edition launched

இந்த நிலையில், மினி கூப்பர் எஸ்.இ எலக்ட்ரிக் காரின் புதிய லிமிடெட் எடிசன் மினி சார்ஜ்டு எடிசன் என்கிற பெயரில் இந்தியாவில் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முழுவதுமாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு, இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ள இந்த மினி லிமிடெட் எடிசன் கார் இந்தியாவில் மொத்தமாகவே வெறும் 20 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது.

அதாவது, புதிய மினி சார்ஜ்டு எடிசன் காரை மொத்தமாகவே வெறும் 20 வாடிக்கையாளர்களால் மட்டுமே வாங்க முடியும். புதிய சார்ஜ்டு எடிசன் காரின் எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.55 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வழக்கமான மினி கூப்பர் எஸ்.இ காரில் இருந்து தனித்து தெரிய வேண்டும் என்பதற்காக ஏகப்பட்ட காஸ்மெட்டிக் மாற்றங்கள் புதிய மினி சார்ஜ்டு எடிசனில் வழங்கப்பட்டுள்ளன.

mini charged edition launched

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், புதிய மினி சார்ஜ்டு எடிசனுக்கு புதிய மிளகாய் சிவப்பு நிற பெயிண்ட் தேர்வு வழங்கப்பட்டு உள்ளது. அதேநேரம் இந்த சிவப்பு நிற பெயிண்ட்டில் காரின் மேற்கூரை, ஹெட்லைட் & டெயில்லைட்களை சுற்றிலும் வளையங்கள், கதவு கைப்பிடிகள், மினி பிராண்டின் லோகோ மற்றும் பின்பக்க கதவின் கைப்பிடி உள்ளிட்டவை வெள்ளை நிறத்தில் கிடைக்கும்.

மேலும், காரின் வெளிப்பக்கத்தில் முன்பக்க பொனெட் கதவுகளின் கீழ்பகுதி மற்றும் பின்பக்க கதவு பகுதிகளில் மஞ்சள் நிற ஹைலைட்டை பார்க்க முடிகிறது. இவ்வாறு சிவப்பு-வெள்ளை-மஞ்சள் நிறங்கள் கலந்த கலவையாக புதிய மிளகாய் சிவப்பு நிற பெயிண்ட் தேர்வு உள்ளது. மேலும், இந்த பெயிண்ட்டிற்கு ஏற்ப காரின் முன்பக்க பெனெட் பகுதியில் வழங்கப்படும் ஏர் இன்லெட் ஆனது க்ரோம் ஃபினிஷிங்கில் வழங்கப்பட்டுள்ளது.

mini charged edition launched

இந்த லிமிடெட் எடிசன் எலக்ட்ரிக் காரில் 17 இன்ச்சில் பவர்-ஸ்போக் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சக்கரங்களிலும் மஞ்சள் நிற ஹைலைட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அப்படியே காருக்கு உள்ளே சென்றால், கேபின் முழுவதும் லெதேரேட் கார்பன் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டு உள்ளது. நப்பா லெதரால் கவர் செய்யப்பட்டுள்ள ஸ்டேரிங் சக்கரத்தில் ஏகப்பட்ட கண்ட்ரோல் பொத்தான்கள் உள்ளன.

ஸ்டேரிங் சக்கரத்திற்கு பின்னால் 5 இன்ச்சில் ஓட்டுனருக்கு தேவையான தகவல்களை வழங்கக்கூடிய திரை உள்ளது. மறுப்பக்கம், இன்ஃபோடெயின்மெண்ட்டிற்கு 8.8-இன்ச்சில் டச் ஸ்க்ரீன் வழங்கப்பட்டுள்ளது. காரின் வெளிப்பக்கத்தில் பார்த்ததை போல், கேபினுக்கு உள்ளேயும் நிறைய இடங்களில் மஞ்சள் நிற ஹைலைட்கள் வழங்கப்பட்டுள்ளன. இன்-பில்டு நாவிகேஷன், ஆப்பிள் கார்ப்ளே என ஏகப்பட்ட தொழிற்நுட்ப அம்சங்கள் புதிய சார்ஜ்டு எடிசனில் இடம்பெற்றுள்ளன.

mini charged edition launched

புதிய சார்ஜ்டு எடிசன் காருடன் மினி ஸ்மார்ட் வால் பாக்ஸ் மற்றும் கையில் எடுத்து செல்லக்கூடிய டிசி சார்ஜிங் கேபிள் போன்ற சார்ஜிங் வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க மினி இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. டிசி சார்ஜிங் கேபிளின் உதவியுடன் 50 கிலோவாட்ஸ் விரைவு சார்ஜரில் காரின் 32.6kWh பேட்டரியை வெறும் 36 நிமிடங்களில் 0-இல் இருந்து 80% சார்ஜ் நிரப்பிவிடலாம்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்வதில் பிஎம்டபிள்யூ நிறுவனம் முனைப்புடன் உள்ளது. கடந்த சில வருடங்களில் பிஎம்டபிள்யூ பிராண்டில் இருந்து சில எலக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், பிஎம்டபிள்யூ குழுமத்தின் கீழ் செயல்படும் மினி பிராண்டில் இருந்தும் எலக்ட்ரிக் கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவர ஆரம்பித்துள்ளன.

More from DriveSpark

Article Published On: Thursday, August 10, 2023, 23:52 [IST]
English summary
Mini charged edition based cooper se launched in india
மேலும்... #மினி #mini #new launches
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X