டூ-வீலர் விலையில் காரா!.. ஆஹா இப்படி ஒரு வழி இருக்கு தெரிஞ்சா ஆளுக்கு ஒரு கார வாங்கலாமே!

சாதாரணமாக ஓர் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கை வாங்கு வேண்டும் என்றாலே ரூ. 2 லட்சம் முதல் இரண்டரை லட்சம் ரூபாய் வரை நாம் செலவழிக்க வேண்டி இருக்கும். ஆனால், இங்கு ஓர் காரின் மதிப்பே இந்த ஹிமாலயன் பைக்கிற்கு இணையானதுதான் என்கிற ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் உண்மை தன்மை பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கை விரும்பாதவர்களே இருக்க முடியாது என கூறிவிடலாம். அந்த அளவிற்கு மிக சிறந்த தயாரிப்பாக இந்த பைக் மாடல் காட்சியளிக்கின்றது. அதேவேளையில், இந்த பைக்கை வாங்கும் விலையில் ஓர் காரை நம்மால் வாங்கிக் கொள்ள முடியும் என்றால் ஹிமாலயன் பைக்கைக் காட்டிலும் பலர் அந்த காரையே வாங்க விரும்புவார்கள்.

Electric jeep

ஆனால், இன்னும் இந்த அளவு மலிவு விலையில் எந்த ஒரு நிறுவனமும் காரை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரவில்லை என்பதுதான் இப்போதைய உண்மை நிலவரம். அதேவேளையில், கஸ்டமைசேஷன் அல்லது வாகன மாடிஃபிகேஷன் வாயிலாக, இத்தகைய மலிவு விலையில், ஓர் சிறப்பான காரை நம்மாலேயே தயார் செய்துக் கொள்ள முடியும் என்பதை ஓர் இளைஞர் நிரூபித்துக் காட்டி இருக்கின்றார்.

அந்த இளைஞர் மஹிந்திரா வில்லிஸ் ஜீப் (Mahindra Willy Jeep) வகை காரையே, அவராக தயார் செய்திருக்கின்றார். வழக்கமான பெட்ரோலில் ஓடும் எஞ்சினுக்கு பதிலாக அதில் எலெக்ட்ரிக் மோட்டாரை பயன்படுத்தி இருக்கின்றார். ஆமாங்க, இளைஞர் எலெக்ட்ரிக் காரையே அவராக அவருக்காக தயார் செய்திருக்கின்றார்.

Electric jeep seat

இந்த காரை அவர் முழுமையாக தயார் செய்யவே ரூ. 2.6 லட்சம் செலவானதாகக் கூறப்படுகின்றது. ராயல் என்பீல்டு ஹிமாலயனின் விலையே இவ்வளவுதான் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய குறைவான விலையிலேயே சூப்பரான காரை இளைஞர் தயார் செய்திருக்கின்றார். இதற்காக அவர் வேறு ஏதேனும் வாகனத்தை கூடை பயன்படுத்தியிருப்பாரோ நீங்கள் நினைக்கலாம்.

ஆனால், அதுதான் இல்லை. இந்த வாகனத்தை முழுமையாக கஸ்டமைசேஷன் வாயிலாக அவரே வடிவமைத்திருக்கின்றார். இதன் பாடியை ஃபைபரால் அவர்கள் வடிவமைத்திருக்கின்றனர். இதனால்தான் துள்ளியமான வில்லிஸ் தோற்றம் அதற்கு கிடைத்திருக்கின்றது. உலக அளவில் புகழ்பெற்ற கார் மாடலே வில்லிஸ் ஜீப் ஆகும். இதன் மினி தோற்றமே அப்படியே இந்த காருக்கு கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

Electric jeep digital display

இந்த வாகனத்திற்கு வில்லிஸ் தோற்றத்தை வழங்கும் விதமாக முகப்பு பகுதியில் வட்ட வடிவ ஹெட்லைட் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது எல்இடி வகை ஹெட்லைட் ஆகும். இந்த காரில் முன் பக்கத்தில் ஸ்டோரேஜ் வசதிக் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. அதன் கூடுதல் சிறப்பாகும். 30 லிட்டர் கொள்ளளவு வசதிக் கொண்டதே அது ஆகும்.

வழக்கமான கார்களில் பலமடங்கு மாறுபட்டதாக இந்த கார் காட்சியளிக்கின்றது. பொதுவாக டிரைவர் இருக்கும் இடத்தில் பல விதமான கன்ட்ரோல்கள் இருக்கும். ஆனால், இந்த காரில் ஓர் குட்டி டிஜிட்டல் திரை மற்றும் ஸ்டியரிங் வீல் ஆகியவை மட்டுமே உள்ளன. இத்துடன், ஆக்சலரேஷன் மற்றும் பிரேக் ஆகிய இரு பெடல்கள் மட்டுமே கொடுக்கப்பட்டு உள்ளன.

Electric jeep side view

இது எலெக்ட்ரிக் வாகனம் என்பதால் கியர் ஆப்ஷன் இந்த காரில் வழங்கப்படவில்லை. அதேவேளையில், முன் பக்கம் நோக்கி நகர்தல் மற்றும் பின்னோக்கி நகர்தல் ஆகியவற்றிற்கான ஸ்விட்சிங் வசதி இதில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. அத்துடன், ஹேண்ட் பிரேக் அம்சமும் இந்த காரில் கொடுக்கப்பட்டு உள்ளது.

ஆகையால், இதன் தோற்றம் மிகவும் சிம்பிளனதாக உள்ளது. இந்த காரில் டிரைவருடன் சேர்த்து நான்கு பேர் வரை பயணிக்க முடியும். இதன் பின் பக்கத்தில் ஸ்டாப் லைட் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. அதிலியே இன்டிகேட்டர் லைட்டுகளும் இடம்பெற்றிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இந்த அம்சம் தனியாக வழங்கப்படவில்லை.

Electric jeep rear

இந்த காரின் ஒட்டுமொத்த உயரமே 1.32 சிமீ ஆகும். இதன் நீளம் 2.87 மீ ஆகும். மேலும், வாகனத்தின் ஒட்டுமொத்த எடையே 350 கிலோ என கூறப்பட்டு உள்ளது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 459 மிமீ ஆகும். ஆகையால், இந்தியாவின் கரடு, முரடான சாலையைக் கூட இந்த கார் சமாளிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், இந்த குட்டியான எலெக்ட்ரிக் கார் ஓர் முழு சார்ஜில் 100 கிமீ வரை பயணிக்கும். ஆனால், இதன் பேட்டரி விபரங்களை அவர் முழுமையாக தெரிவிக்கவில்லை. இத்துடன், மிக சிறந்த இயக்க திறனுக்காக எலெக்ட்ரிக் காரில் 1500 வாட் எலெக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 2 பிஎச்பி மற்றும் 9 என்எம் டார்க்க வெளியேற்றும்.

ஆகையால், இது குறைவான வேகத்தில் இயங்கும் கார் என்பது தெரிய வந்திருக்கின்றது. ஆனால், இது என்ன மாதிரியான வேகத்தில் பயணிக்கும் என்பது துள்ளியமாக தெரியவில்லை. ஒரு வேளை இது மணிக்கு 25 கிமீட்டருக்கும் குறைவான வேகத்தில் இயங்கும் என்றால், அந்த வாகனத்தை பதிவு செய்ய தேவையில்லை. மேலும், அதை பயன்படுத்த சட்ட சிக்கலும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இதுபோன்று மாடிஃபை செய்யப்பட்ட வாகனங்களை பயன்படுத்துவது மோட்டார் வாகன சட்டத்தின்படி குற்றச் செயல் ஆகும். குறிப்பாக, வாகனத்தை கலப்பினம் செய்வதற்கு இந்தியாவில் தடை செய்யப்பட்டு இருக்கின்றது. ஆனால், நாம் பார்த்தது கலப்பினம் செய்யப்படாத தனித்துவமான எலெக்ட்ரிக் கார் மாடலாகும்.

More from DriveSpark

Article Published On: Monday, November 27, 2023, 18:30 [IST]
English summary
Mini electric jeep made by indian youth
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X