உலகின் 3வது மிகப்பெரிய ஆட்டோமொபைல் துறையை கொண்ட நாடாக இந்தியா மாறும் என கணிப்பு! வெளியான ஹேப்பி ரிப்போர்ட்

இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை வரும் 2030 ஆம் ஆண்டு உலகில் மூன்றாவது மிகப்பெரிய ஆட்டோமொபைல் துறையாக மாறும் என மத்திய அரசு கணித்துள்ளது. இதற்காக மத்திய அரசு வழங்கும் பிஎல்ஐ ஸ்கீம் மூலம் ரூபாய் 25,938 கோடி உதவும் எனவும் தெரிவித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒவ்வொரு துறையும் மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. குறிப்பாக ஆட்டோமொபைல் துறையில் கோடி கணக்கில் பணம் புழங்குவதால் அரசு இந்த துறையை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான துறையாக பார்க்கிறது. இதனால் இந்தியாவில் ஆட்டோ மொபைல்களை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு பிஎல்ஐ ஸ்கீமை வழங்குகிறது.

indian auto market 3rd rank

இந்நிலையில் சமீபத்தில் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் அமைச்சகம் சார்பில் பிஎல்ஐ ஸ்கீம் திட்டம் குறித்தும் அதன் மூலம் உள்ள வாய்ப்புகள் குறித்தும் ஆய்வு செய்வதற்காக சமீபத்தில் ஒரு ஆய்வுக் கூட்டம் ஒன்றைக் கூட்டியிருந்தார். இந்த கூட்டத்தில் இந்தியாவில் உள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் டெஸ்டிங் ஏஜென்சிகள் கலந்து கொண்டன. இந்த கூட்டத்தில் ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் சவால்கள் அதை சமாளிக்கும் முறைகள் பிஎல்ஐ ஸ்கீமை பயன்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதில் முக்கியமாக ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சி குறித்து பேசப்பட்டது. அப்பொழுது இந்தியா வரும் 2030 ஆம் ஆண்டு உலகின் மூன்றாவது மிகப்பெரிய ஆட்டோமொபைல் துறையை கொண்ட நாடாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோமொபைல் துறையில் அட்வான்ஸ் டெக்னாலஜியை உட்புகுத்துவது மற்றும் முழுவதுமாக லோக்கலைஷ் செய்வதன் மூலம் இந்த வளர்ச்சியை இந்தியா எட்டி விட முடியும் என கணிக்கப்பட்டுள்ளது.

indian auto market 3rd rank

இந்திய ஆட்டோமொபைல் மார்க்கெட்டை பொருத்தவரை கடந்த 2021-22 ஆம் நிதியாண்டில் டூவீலர்கள் மற்றும் பயணிகள் கார் செக்மெண்ட் தான் அதிக அளவில் விற்பனையாகி உள்ளன. ஒட்டுமொத்தமாக 100 வாகனங்களில் 77 வாகனங்கள் இந்த டூவீலர் மற்றும் பயணிகள் காரர்களாக மட்டுமே இருக்கிறது. பயணிகள் காரை பொருத்தவரை சிறிய மற்றும் மிட்-ரக கார்கள் தான் அதிகம் விற்பனையாகி வருகின்றன.

வரும் 2024 ஆம் ஆண்டு இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையின் மதிப்பு 15 லட்சம் கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது அதே நேரம் இந்தியாவில் வெளிநாடு கம்பெனிகள் அதிக முதலீடு செய்வதால் ஆட்டோமொபைல் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக கடந்த 2000 ஆவது ஆண்டு முதல் 2022 வரை ஒட்டுமொத்தமாக இந்தியாவிற்குள் வந்த வெளிநாட்டு நிதியில் 5.48 சதவீதம் ஆட்டோமொபைல் துறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் சொசைட்டியின் தகவலின் படி கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை மொத்தம் 41.3 லட்சம் வாகனங்கள் விற்பனையாகியுள்ளது . டிசம்பர் உடன் சேர்க்கும்போது 42.5 லட்சம் வாகனங்கள் விற்பனையாக இருந்தது. இதே காலகட்டத்தில் சீனாவில் தான் உலகிலேயே அதிகமாக 2.62 கோடி வாகனங்கள் விற்பனையாகி இருந்தது. அமெரிக்காவில் 1.54 கோடி வாகனங்கள் விற்பனையாகி இருந்தது. ஜப்பானில் 44.4 லட்சம் வாகனங்கள் விற்பனையாகி இருந்தது.

இந்தியாவும் ஜப்பானும் கிட்டத்தட்ட ஒரே அளவிலான ஆட்டோமொபைல் மார்க்கெட்டை தற்போது வைத்துள்ளது. ஆனால் விரைவில் ஜப்பானின் ஆட்டோமொபைல் வீழ்ச்சியும் இந்தியாவில் ஆட்டோமொபைல் வளர்ச்சியையும் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விரைவில் இந்திய ஜப்பானை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்தை பிடித்து அதை 2030 ஆம் ஆண்டிற்குள் தக்க வைத்து யாரும் நெருங்க முடியாத அளவிற்கு சென்று விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முக்கியமான காரணம் மக்கள் தொகை என கூறப்படுகிறது. இந்தியாவின் மக்கள் தொகை தற்போது சீனாவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் பிடிக்கும் நிலைக்கு மாறிவிட்டது. இதனால் இந்தியாவில் ஆட்டோ மொபைல் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது குழந்தை பிறக்கும் விகிதத்தை வைத்து பார்க்கும் போது 2060 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் சிறப்பான மக்கள் தொகை வளர்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா தற்போது ஜப்பானுடன் ஆட்டோமொபைல் துறையில் போட்டி போட்டு வந்தாலும் மிக விரைவாகவே ஜப்பானில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி விடும். ஆனால் இந்த இடத்தை தொடர்ந்து தைக்க வைக்க வேண்டுமானால் இந்தியா தொடர்ந்து தனது வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டும். இந்தியாவில் ஆட்டோமொபைல் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் அப்பொழுதுதான் இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை மிகப் பெரிய வளர்ச்சியை பிடிக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 30, 2023, 17:15 [IST]
English summary
Ministry of heavy industries envisions indias automotive industry to secure the 3rd global ranking
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+