மாருதி ஆம்னிக்கு உயிர் கொடுத்த மாதிரி இருக்கு.. ஆனா இது ஆம்னியையே தூக்கி சாப்பிட்ரும் போல.. ஸ்டைல் தூக்கல்!

இந்தியர்கள் பலரின் பிரியமான கார் மாடலாக மாருதி சுஸுகி ஆம்னி (Maruti Suzuki Omni) இருக்கின்றது. துரதிர்ஷ்டவசமாக இப்போது இந்த கார் விற்பனையில் இல்லை. மாருதி ஆம்னி, குடும்பத்துடன் பயணிக்க உகந்த வாகனம் ஆகும். ஒரே நேரத்தில் எட்டு பேர் வரை ஆம்னியில் பயணிக்க முடியும்.

மிகவும் ஒல்லியானவர்களாக இருந்தால் 9 பேரால் கூட அந்த காரில் பயணிக்க முடியும். இதுபோன்று அதிக பேரால் பயணிக்க முடியும் என்கிற காரணத்தினாலேயே இந்தியர்களின் மனம் கவர்ந்த வாகனமாக ஆம்னி இருந்தது. ஆனால், குறிப்பிட்ட சில காரணங்களுக்காக ஆம்னி சந்தையில் இருந்து வெளியேற்றப்பட்டது.

Mitsubishi minicab door open view

இப்போது யூஸ்டு கார் மார்க்கெட்டில் மட்டுமே ஆம்னி விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே ஆம்னிக்கு உயிர் கொடுக்கும் முயற்சியில் மாருதி சுஸுகி அல்லாத ஓர் வாகன உற்பத்தி நிறுவனம் களமிறங்கி இருக்கின்றது. ஆம்னி என்றால் அது ஆம்னி என்று நினைத்து விட வேண்டாம்.

ஆம்னியைப் போன்ற தோற்றம் கொண்ட வேறொரு வாகன மாடலே அது ஆகும். ஜப்பானைச் சேர்ந்த முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மிட்சுபிஷி-யே ஆம்னியை ஒத்த தோற்றம் கொண்ட காரை தயாரித்து இருக்கின்றது. அந்த வாகனத்தை அது வெகு விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாகவும் அது தகவல் வெளியிட்டு இருக்கின்றது.

Mitsubishi minicab

மினி கேப் இவி (Minicab EV) எனும் பெயரிலேயே அது விற்பனைக்கு வர இருக்கின்றது. இது ஓர் எலெக்ட்ரிக் காராகும். ஜப்பான் சந்தையிலேயே இந்த வாகனம் முதலில் விற்பனைக்கு வர இருக்கின்றது. டிசம்பர் 21 ஆம் தேதியில் இருந்து மிட்சுபியிஷின் மினி கேப் விற்பனைக்குக் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.

இந்த காரை இரண்டு விதமான இருக்கைகள் (Seater) ஆப்ஷன்களில் மிட்சுபிஷி விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. 2 சீட்டர் மற்றும் நான்கு சீட்டர் ஆகிய ஆப்ஷன்களில் மினி கேப் இவி கிடைக்கும். ஆனால், ஆம்னியில் எட்டுபேர் வரை பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Mitsubishi minicab dashboard

பொருட்களை ஏற்றிச் செல்ல பொருட்டே மினி கேப்-பை 2 மற்றும் 4 சீட்டர் வெர்ஷனில் மிட்சுபிஷி விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. அதாவது, நம்முடைய ஆம்னி காரை போலவே இந்த காரிலும் அதிக சரக்குகளை ஏற்றிச் செல்ல முடியும். இந்த காரை தன்னுடைய மினிகேப் - எம்ஐஇவி-யை தழுவியே மிட்சுபிஷி உருவாக்கி இருக்கின்றது.

ஜப்பானில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் எலெக்ட்ரிக் கார்களில் மினிகேப் - எம்ஐஇவி-யும் ஒன்றாகும். புதிய மினிகேப் இவியில் ஓர் முழு சார்ஜில் 180 கிமீ தூரம் வரை டிராவல் செய்ய முடியும். இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறுனக்காக மினிகேப் இவியில் 20 kWh திறன் கொண்ட பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

Mitsubishi minicab seat

இந்த பேட்டரி பேக்கை டிசி ஃபாஸ்ட் சார்ஜ் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்யும்பட்சத்தில் பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதத்தை அடைய வெறும் 42 நிமிடங்களே எடுத்துக் கொள்ளும். ரீஜெனரேட்டிங் சிஸ்டமும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. மோட்டாரை பொருத்த வரை 31 kW எலெக்ட்ரிக் மோட்டாரே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது 195 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஆம்னி காருக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்து வந்தது குறிப்பிடத்தகுந்தது. இப்போதும் கார் ஆர்வலர்கள் சிலரின் பிரியமான கார் மாடலாக ஆம்னி காட்சியளிக்கின்றது. இதன் உருவத்தை ஒத்து உருவாக்கப்பட்டு இருக்கும் மிட்சுபிஷி மினிகேப் இவி இந்தியா வரும் எனில் அதற்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இப்போது சந்தையில் அந்நிறுவனம் இல்லை. ஆகையால், இதன் வருகையை நாட்டில் எதிர்பார்க்க முடியாது.

More from DriveSpark

Article Published On: Monday, November 27, 2023, 10:17 [IST]
English summary
Mitsubishi minicab ev launch details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X