லாலேட்டனுக்கு சொந்தமாகிய திருபாய் அம்பானி பயன்படுத்திய அரிய வகை கார்! 38ஆண்டுகள் பழைய கார் புதுசுபோல மின்னுது!
மலையாள திரை உலகின் உச்ச நட்சத்திர நடிகராக மோகன்லால் வலம் வந்துக் கொண்டிருக்கின்றார். இந்தியாவில் இவரை அறியாதவர்களே இருக்க முடியாது. இவர் மிகப் பெரிய வாகன காதலராகவும் காட்சியளிக்கின்றார். இதற்கு அவரிடம் இருக்கும் விலை உயர்ந்த ஆடம்பர கார்களே சிறந்த சான்றாகும்.
நடிப்பின்மீது இருப்பதை போலவே வாகனங்களின் மீது அதிகம் நேசம் கொண்டவராக இவர் இருப்பதால், வாகனங்களுக்கு அவர் அதிகம் முக்கியத்துவத்தை அளித்து வருகின்றார். இதன் விளைவாக அவரிடத்தில் வெறும் சொகுசு கார்கள் மட்டுமின்றி சில அரிய வகை விண்டேஜ் வாகனங்களும் பயன்பாட்டில் இருக்கின்றன.

இந்த நிலையிலேயே மலையாள நடிகர் மோகன்லால் முக்கியமான ஓர் நபரின் விண்டேஜ் சொகுசு காரை தன் வசம் வைத்திருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. ரிலையன்ஸ் குழுமத்தின் நிறுவனரான திருபாய் அம்பானிக்கு சொந்தமான கடிலாக் சொகுசு விண்டேஜ் காரையே அவர் வைத்திருக்கின்றார்.
இந்த காரை திருபாய் அம்பானியிடம் இருந்து மோகன்லாலின் மாமனாரே வாங்கியதாகக் கூறப்படுகின்றது. நீண்ட நாட்களாக அந்த கார் பயன்பாட்டில் இல்லாத காரணத்தினால், லேசாக அந்த கார் பாதிப்பைச் சந்தித்து இருக்கின்றது. இந்த நிலையிலேயே அதனை புதுப்பித்து தற்போது பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருக்கின்றார் மோகன்லால்.

இந்த காரை கடந்த காலங்களில் பாலாஜி (மோகன்லாலின் மாமனார்) தயாரித்த திரைப்படங்களில் பயன்படுத்தி இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. 38 ஆண்டுகள் பழைய கார் இது ஆகும். 1958 மாடல் என கூறப்படுகின்றது. இடது கை பக்கம் டிரைவிங் வசதிக் கொண்ட காராகவும் இது காட்சியளிக்கின்றது.
மிக மிக பழைய காராக இது இருந்தாலும், தற்போது புதிது போல் கடிலாக் ஜொலிக்கின்றது. இதற்கு மோகன்லாலே காரணம் ஆவார். அவருக்கு வாகனத்தின்மீது இருக்கும் தனித்துவமான காதலே இந்த அளவிற்கு மிகவும் சூப்பராக ரீ-ஸ்டோர் செய்ய வைத்திருக்கின்றது. ஆரம்பத்தில் இந்த கார் சென்னையிலேயே இருந்ததாகக் கூறப்படுகின்றது.
தற்போது மோகன்லாலின் கொச்சின் இல்லத்திற்கு இடம் பெயர்த்தப்பட்டு இருக்கின்றது. அங்கு உள்ள ஓர் கார் கராஜில் வைத்தே கடிலாக் புதுப்பிக்கப்பட்டு இருக்கின்றது. ஃப்ளமிங்கோ கராஜ் எனும் நிறுவனத்தின் வாயிலாகவே புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. காரின் வண்ணம் மற்றும் சிறப்பு வசதிகள் பல மாற்றி அமைக்கப்பட்டு இருக்கின்றன.
புதிதாக வெள்ளை நிறமே காருக்கு கொடுக்கப்பட்டு இருக்கின்றது. முன்னதாக அடர் சிவப்பு நிறம் பயன்படுத்தப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகின்றது. இந்த காரை பாலாஜி எப்போது திருபாய் அம்பானியிடம் இருந்து வாங்கினார் என்பது தெளிவாக தெரியவில்லை. இதேபோல், துள்ளியமான கார் மாடலின் பெயரும் தெரியவில்லை.
அதேவேளையில், இதை பார்க்கையில் கடில்லாக்கின் ஃப்ளீட் உட் பிராகம் 4 கதவுகள் கொண்ட செடானைபோல் அது காட்சியளிக்கின்றது. இத்தகைய சூப்பரான விண்டேஜ் சொகுசு காரையே மோகன்லால் இனி வரும் காலங்களில் தன்னுடைய பயணங்களுக்கு பயன்படுத்த இருக்கின்றார். மோகன் லால் இடத்தில் ஏற்கனவே ஓர் விண்டேஜ் கார் பயன்பாட்டில் இருக்கின்றது.
ஹிந்துஸ்தான் அம்பாசடர் காரே அது ஆகும். இது கிரே நிறத்தில் இருக்கும். 1986 மாடல் அம்பாசடரையே அவர் வைத்திருக்கின்றார். இந்த கார்கள் தவிர இன்னும் பல சொகுசு மற்றும் ஆடம்பர கார்கள் அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன. அந்தவகையில், டொயோட்டா நிறுவனத்தின் தயாரிப்புகள், பென்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் லேண்ட் ரோவர் தயாரிப்புகள் அவரிடத்தில் பயன்பாட்டில் இருப்பதை நம்மால் காண முடிகின்றது.
சமீபத்திலேயே இவர் லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் எஸ்யூவி சொகுசு காரை வாங்கினார். இந்த காரின் இந்திய மதிப்பு ரூ. 3.32 கோடிகள் ஆகும். ரேஞ்ஜ் ரோவர் ஸ்போர்ட் ஆட்டோ-பயோகிராஃபி மாடலையே அவர் வாங்கி இருக்கின்றார். இந்த காரில் 4.4 லிட்டர் ட்வின் டர்போ பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த மோட்டார் 530 பிஎஸ் பவரையும், 750 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதனால் மணிக்கு 255 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும். இத்தகைய சூப்பரான மற்றும் அதிக வேகத்தில் பயணிக்கக் கூடிய காரையே மோகன் லால் சமீபத்தில் வாங்கினார். இந்த நிலையில் திருபாய் அம்பானியிடம் இருந்து வாங்கப்பட்டதாகக் கூறப்படும் சொகுசு விண்டேஜ் காரை அவர் புதுப்பித்தலும் செய்திருக்கின்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மோகன்லால் மலையாள திரை உலகில் உச்ச நடிகராக மட்டுமில்லைங்க, மிக பெரிய வாகன காதலராகவும் வலம் வந்துக் கொண்டிருக்கின்றார். இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த விண்டேஜ் காரை புதுப்பித்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. இவரின் இந்த செயல் வாகன காதலர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications








