"என்னங்க இந்த மனுசன் மாசத்துக்கு ஒரு காரை வாங்கிட்டு இருக்காரு".. சூப்பர் ஸ்டார் நடிகராக இருந்தாலும் இப்படியா!

ஒட்டுமொத்த மலையாள திரையுலகமே இப்போது ஆச்சரியத்தில் உறைந்து போயுள்ளது. இதற்கு காரணம் முன்னணி நடிகர் மோகன்லால். தன்னுடைய சிறந்த நடிப்பால் மலையாள மக்களையும், இன்னும் பிற மொழி பேசும் மக்களையும் கவர்ந்தவரே மோகன்லால். இத்தகைய ஓர் நடிகரே மிகப் பெரிய வாகன காதலராகவும் இருக்கின்றார்.

இவர் மிக சமீபத்தில்தான் மிக மிக அதிக விலைக் கொண்ட சொகுசு கார் ஒன்றை வாங்கி இருந்தார். லேண்ட் ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ஜ் ரோவர் சொகுசு காரையே அவர் வாங்கி இருந்தார். இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் மதிப்பு மட்டுமே ரூ. 3.39 கோடிகள் ஆகும்.

Mohanlal kia ev6

இத்தகைய விலை உயர்ந்த காரையே போன மாதத்தின் (ஏப்ரல்) தொடக்கத்திலேயே அவர் வாங்கி இருந்தார். இந்த நிலையிலேயே அவர் மீண்டும் ஓர் புதிய காரை தற்போது வாங்கி இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவலே மலையாள திரையுலகின் இப்போதைய ஆச்சரியத்திற்கு முழு காரணமாக அமைந்திருக்கின்றது.

"என்னங்க இந்த மனுஷன் மாசத்துக்கு ஒன்னுனு காரை வாங்கி குவிச்சுட்டு இருக்காரே" என பலரை நினைக்கச் செய்திருக்கின்றது. ஆனால், இந்த காரை மோகன்லால் வாங்கவில்லை. அதனை அவருடைய நண்பர் பரிசாக வழங்கி இருக்கின்றார். மோகன்லால் தன்னுடைய பிறந்த நாளை நேற்று (மே 21) கொண்டாடினார்.

Mohanlal with kia ev6

இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பலர் அவருக்கு பல விதமான விலை உயர்ந்த பொருட்களை பரிசாக வழங்கி இருக்கின்றார். அந்தவகையிலேயே மோகன்லாலின் நெருங்கிய நண்பர் கியா இவி6 எலெக்ட்ரிக் சொகுசு காரை பரிசாக வழங்கி இருக்கின்றார். இந்தியாவில் மிக மிக அதிக விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் மின்சார் கார் மாடல்களில் கியா இவி6-ம் ஒன்று.

பென்ஸ், பிஎம்டபிள்யூ நிறுவனங்களின் எலெக்ட்ரிக் கார்களுக்கு இணையான விலையில் அது விற்பனைக்குக் கிடைக்கின்றது. மிக மிக அதிக சொகுசு வசதிகளைக் கொண்ட எலெக்ட்ரிக் கார் இது என்பதால் சற்று உயரிய விலையில் இதனை கியா விற்பனைச் செய்கின்றது. அதிக லக்சூரி வசதிகளைக் கொண்ட வாகனம் மட்டுமல்ல கியா இவி6, அது அதிக கவர்ச்சியான தோற்றம் கொண்ட இ-காராகவும் காட்சியளிக்கின்றது.

Kia ev6

இத்தகைய எலெக்ட்ரிக் காரையே பிரபல மலையாள நடிகரான மோகன்லாலுக்கு அவரது நண்பர் பரிசாக வழங்கி இருக்கின்றார். அலெக்ஸ் கே பாபு என்பவரே காரை பரிசாக வழங்கியவர். கேரளாவின் முன்னணி தொழிலதிபர்களில் இவரும் ஒருவர் ஆவார். மிகப் பெரிய வாகன காதலர் ஆவார். இவரிடத்தில் எண்ணற்ற சொகுசு மற்றும் அரிய வகை கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.

அவற்றின் வரிசையிலேயே தற்போது கியா இவி-6ம் இணைந்து இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் காரில் ஓர் முழு சார்ஜில் 528 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த காரை கியா நிறுவனம் சிபியூ வாயிலாக விற்பனைக்குக் கொண்டு வந்திருப்பதன் காரணத்தினாலேயே அதன் விலை மிக அதிகமாக உள்ளது.

Kia ev6 rear view

ரூ. 60.95 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் அது விற்பனைக்குக் கிடைக்கின்றது. கியா இவி6 எலெக்ட்ரிக் காரில் அதிகபட்ச ரேஞ்ஜ் திறனுக்காக 77.4 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பேட்டரியை அதிக வேகத்தில் சார்ஜ் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

வெறும் 4.5 செகண்டுகள் அதிக வேகத்தில் சார்ஜ் செய்யும் கருவியைக் கொண்டு சார்ஜ் செய்யும்பட்சத்தில் 100 கிமீ ரேஞ்ஜை பெற்றுக் கொள்ள முடியும். அதே 350 kW ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தி 18 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீத சார்ஜை ஏற்றிக் கொள்ள முடியும்.

இதுபோன்று எக்கசக்க சிறப்பு வசதிகளைத் தாங்கிய இ-காராகவே இந்திய சந்தையில் கியா இவி6 விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில், லக்சூரி வசதிகளும் மிக அதிகம். மேலும், தொழில்நுட்ப வசதிகளும் மிக தாராளமாக வழங்கப்பட்டு உள்ளன. இதனாலேயே இந்திய தொழிலதிபர்கள் மற்றும் திரை நட்சத்திரங்களின் விருப்பமான காராக அது மாறி இருக்கின்றது.

அந்தவகையில், 64 வண்ணங்கள் கொண்ட ஆம்பியன்ட் லைட், எலெக்ட்ரிக் சன்ரூஃப், வென்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள், ஆன்டி கிளார் பின்பக்கத்தை பார்க்க உதவும் கேமிராக்கள், ஸ்மார்ட் சாவி, புஷ் பட்டன் ஸ்டார்ட்-ஸ்டாப் வசதி, பேடில் ஷிஃப்டர்கள், 12.3 அங்குல வளைவான அமைப்புக் கொண்ட திரை என எக்கசக்க அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் முதலில் 100 யூனிட்டுகள் மட்டுமே கியா இவி6 விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. அதற்கு வரவேற்பு கிடைக்குமோ, கிடைக்காதோ என்கிற சந்தேகத்தால் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைக்குக் களமிறக்கப்பட்டது. ஆனால், தற்போது அதற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் விளைவாக 600க்கும் அதிகமான விற்பனையை கியா இவி6 பெற்றிருக்கின்றது.

Article Published On: Monday, May 22, 2023, 9:12 [IST]
English summary
Mohanlal got kia ev6 electric car gift from his friend
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X