டாடா மேல அவ்ளோ நம்பிக்க... ராணுவ பயன்பாட்டிற்காக கொத்து கொத்தாக டிரக்குகளை வாங்கிய வெளிநாட்டு ராணுவம்!
ஹேட்ச்பேக் கார் போல கேபின் வசதிக் கொண்ட இந்திய தயாரிப்பு டாடா டிரக்குகளை ராணுவ தளவாட பயன்பாட்டிற்காக ஓர் நாடு வாங்கியிருக்கின்றது. இந்த கனரக வாகனத்தின் சிறப்புகள் போன்ற முக்கிய விபரங்களையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
வெளிநாட்டு ராணுவ படைகளில் இந்திய நிறுவனங்கள் தயாரிக்கும் வாகனங்களின் ஆதிக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஓர் சம்பவம் தற்போது அரங்கேறி உள்ளது. மொராக்கோ ராணுவ படையில் டாடா மோட்டார்ஸின் 6X6 டாடா எல்பிடிஏ 1623 ட்ரக்குகள் இணைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் மொராக்கோ ராணுவப் படைக்காக அணி வகுத்து நிற்கும் டாடாவின் கனரக வாகனங்கள் அணி வகுத்து நிற்கக் கூடிய படங்கள் வெளியாகி உள்ளன.

ஒட்டுமொத்தமாக எத்தனை வாகனங்கள் இந்தியாவில் மொராக்கோவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன என்பது பற்றிய விபரங்கள் தெரியவில்லை. புகைப்படத்தை வைத்து பார்க்கையில் ஐம்பதிற்கும் மேற்பட்ட டாடாவின் போர் பயன்பாட்டு வசதிக் கொண்ட டிரக்குகள் மொராக்கோ ராணுவ படைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என தெரிகின்றது. அதேவேளையில், சில தகவல்கள் 92 யூனிட் 6X6 டாடா எல்பிடிஏ 1623 ட்ரக்குகள் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றன. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.
இந்த ராணுவ டிரக்குகள் 10 ஆயிரம் கிலோவிற்கும் அதிகமான எடை உள்ள பொருட்களை சுமந்துச் செல்லும் திறன் கொண்டவை. ஆகையால், போர் படை வீரர்கள் மட்டுமின்றி ஆயுதங்களையும் இதில் ஏற்றிச் செல்ல முடியும் என தெரிகின்றது. இத்தகைய சூப்பரான திறன் உடன் தயாரிக்கப்பட்டிருக்கும் கனரக வாகனத்தையே இந்திய நிறுவனமான டாடாவிடம் இருந்து மொராக்கோ அரசாங்கம் தற்போது வாங்கி இருக்கின்றது. மொராக்கோவின் ஆயுதப் படைக்காக இந்த வாகனம் வாங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த டிரக்கில் பெரிய உருவம் கொண்ட பொருட்களை எளிதில் ஏற்றி, இறக்குவதற்காக ஒரு ஹைட்ராலிக் வின்ச் கொடுக்கப்பட்டுள்ளது. இது வாகனத்தில் பொருட்களை கையாள்வதை எளிமையாக்க உதவும். ஆகையால், மிக சிறந்த தளவாட வாகனமாக இது இருக்கும். டாடா மோட்டார்ஸ் இந்த டிரக்கை எரிபொருள் மற்றும் தண்ணீர் டாங்கிகளாகவும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், சந்தையில் பல தரப்பட்ட அவதாரத்தில் விற்பனைக்குக் கிடைக்கும் வாகனமாக டாடா எல்பிடிஏ 1623 இருக்கின்றது.
இதுமட்டுமில்லைங்க இதன் கேபின் மாடர்ன் ரக வாகனங்களுக்கு இணையானதாக இருக்கும். இது வழக்கத்திற்கு மாறான அதிக இட வசதியைக் கொண்டதாக இருக்கின்றது. ஆகையால், டிரைவர் மட்டுமின்றி இன்னும் சில பயணிகளும் கேபினுள் அமர்ந்து பயணிக்க முடியும். ஓர் சிறிய ஹேட்ச்பேக் காரில் அமர்ந்து பயணிப்பதை போல் நான்கு பேர் வரை இந்த டிரக்கின் முன் பக்க கேபினுக்குள் அமர்ந்து பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

மேலும், அவசர நேரங்களில் எதிரிகளை தாக்குவதற்கு ஏதுவாக மேற்கூரை வாயிலாக வெளியேறும் வசதி வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் வாயிலாக வீரர்களால் கண்கானிப்பு மற்றும் துப்பாக்கி சூடு போன்றவற்றை நடத்த முடியும். இரு திறப்பு வசதிகள் கேபினின் மேற்கூரையில் வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லைங்க எந்த மாதிரியான கரடு-முரடான பாதையாக இருந்தாலும் இந்த டிரக் சமாளிக்கும் திறன் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. இதன் பயன்படுத்தப்பட்டிருக்கும் பாறைகள் நிறைந்த பாதையைகூட சமாளிக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதுமட்டுமில்லைங்க 1.4 மீட்டர் ஆழமான நீர் நிரம்பிய பாதைகளைகூட டாடாவின் இந்த டிரக் அசால்டாக கடந்துவிடும். ஆகையால், மிக சிறந்த டிரக்காக டாடா எல்பிடிஏ 1623 டிரக் விளங்கும். இத்தகைய பன்முக பயன்பாட்டுத் தன்மையை கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே மொரோக்கா ராணுவம் நம்முடைய இந்திய தயாரிப்பை அதன் பயன்பாட்டிற்காக தேர்வு செய்திருக்கின்றது. இந்த மல்டி ஆக்ஸில்கள் கொண்ட டிரக்கை டாடா மோட்டார்ஸ் குஜராத்தில் உள்ள பிபாவவ் போர்ட் வாயிலாகவே மொரோக்காவிற்கு ஏற்றுமதி செய்திருக்கின்றது.
டாடா தயாரித்துக் கொண்டிருக்கும் மிக சிறந்த தளவாட வாகனங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கும் இலங்கைக்கு உதவும் விதமாக இந்தியா பல்வேறு உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், இலங்கைக்கு 125 கார்களை வழங்கியது. 500 கார்களை வழங்க இருப்பதாக இந்தியா அறிவித்திருந்த நிலையில், இதன் அடிப்படையில் முதல் தொகுப்பாக 125 யூனிட் கார்கள் இலைங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அனுப்பி வைக்கப்பட்ட அனைத்தும் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் கார் மாடல்கள் ஆகும். இவை இலங்கையின் காவல்துறை மற்றும் பாதுகாப்பு துறையில் பயன்படுத்தப்பட இருப்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications