பள்ளம், மேடுனு எதுல போனாலும் தெரியாது... மிக குறைவான விலையில் சிறந்த சஸ்பென்ஷன் கொண்ட கார்கள்..

"இந்தியாவில் சாலை வரினு ஒன்னு எதுக்கு வாங்குறாங்கனே தெரியல" இப்படி புலம்பவர்களே நம்ம நாட்டில் மிக அதிகமாக இருக்கின்றனர். அவர்களின் புலம்பல்களுக்கும் ஓர் காரணம் இருக்கின்றது. ஆமாங்க, நம்ம நாட்டுல சீரான சாலைகளைப் பார்ப்பதே மிக கடினமானதாக இருக்கின்றது. முக்கிய நகரங்கள் தொடங்கி கிராமப்புறங்கள் வரை இந்த நிலையே நீடிக்கின்றது.

இதுவே பலரின் புலம்பல்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது. சென்னை போன்ற முக்கிய நகர்புற பகுதிகளில்கூட குண்டும், குழியுமான சாலைகளே மிக அதிகளவில் தென்படுகின்றன. பல வருஷமாக போடப்படாத சாலைகள் திடீரெனு போடப்பட்டு இருக்கும். இதுபோடப்பட்ட அடுத்த ஒரு சில வாரங்களிலேயே மெட்ரோ வாட்டர்காரவங்க அல்லது வேறு கார்பரேஷன் பணிகளுக்காக அந்த சாலை நோண்டப்பட்டிருக்கும்.

Car axle

மறுபடியும் அதனை சீரமைக்க பல வருஷங்கள் ஆகும். அதுவரை குண்டும் குழியுமாகவே அந்த சாலை இருக்கும். இந்த மாதிரியான சாலைகளில் பயணிப்பதனால் எண்ணற்ற பாதிப்புகள் நம்முடைய வாகனங்களுக்கு ஏற்படும். அதோடு முடிந்துவிட்டால் பரவாயில்லை. நம்முடைய உடலுக்கும் அது பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். கை, கால், முதுகு வலியை பெரிய அளவில் அது ஏற்படுத்திவிடும்.

வாகனங்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்பைகூட பணம் கொடுத்து சரி செய்து கொள்ளலாம். ஆனால், நமக்கு ஏற்படும் உடல் ரீதியான பாதிப்புகள் நம்மை ஒரு வழியாக்கி விடும். அதேவேளையில், சிறந்த சஸ்பென்ஷன் செட்-அப்பைக் கொண்ட கார்களில் பயணிப்போம் எனில் உடல் ரீதியாக ஏற்படும் பாதிப்புகளை கணிசமாக குறைத்துவிட முடியும்.

Best suspension cars

இந்தியாவின் குண்டும், குழியுமான சாலைகளை சமாளிக்க ஏதுவான சஸ்பென்ஷன் செட்-அப் கொண்ட கார்கள் நம் இந்திய சந்தையில் அதிக எண்ணிக்கையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. அவற்றில் டாப் 7 கார் மாடல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அனைத்தும் விலை குறைவானவை. வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

டாடா அல்ட்ராஸ் (Tata Altroz): இந்தியாவில் சிறந்த சஸ்பென்ஷன் செட்-அப் உடன் விற்பனைக்குக் கிடைக்கும் கார் மாடல்களில் டாடாவின் அல்ட்ராஸும் ஒன்று. இந்த காரில் உயர் செயல்திறன் கொண்ட மேக்ஃபெர்சன் டூயல் பாத் ஸ்ட்ரட் உடன் காயில் ஸ்பிரிங்கே முன் பக்கத்தில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதேபோல் பின் பக்கத்தில் ட்விஸ் பீமுடன் கூடிய காயில் ஸ்பிரிங்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

Tata altroz

இந்த சிறப்பான சஸ்பென்ஷன் செட்-அப் கொண்ட அல்ட்ராஸ் காரின் விலை ரூ. 6.35 லட்சம் ஆகும். இது ஆரம்ப நிலை வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். பெட்ரோல், டீசல் என இரு விதமான மோட்டார் தேர்வுகளிலும் டாடா அல்ட்ராஸ் விற்பனைக்குக் கிடைக்கிறது. 18.5 கிமீ தொடங்கி 23 கிமீ வரை இந்த கார் மைலேஜ் தரும்.

Honda jazz

ஹோண்டா ஜாஸ் (Honda Jazz): இந்த காரிலும் மேக்ஃபெர்சன் ஸ்ரட் சஸ்பென்ஷனே முன் பக்கத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. டோரிசன் பீம் சஸ்பென்ஷன் பின் பக்கத்தில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இந்த செட்-அப் மிக ஸ்மூத்தான ரைடிங் அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள உதவியாக இருக்கும். குறிப்பாக, கரடு-முரடான பாதைகளை இந்த சஸ்பென்ஷன்கள் அசால்டு செய்துவிடும். இதன் ஆரம்ப விலை ரூ.5.60 லட்சம் ஆகும். லிட்டர் ஒன்றிற்கு 18.7 கிமீ வரை மைலேஜ் தரும்.

Maruti suzuki baleno

மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno): இந்தியாவின் மலிவு விலை பிரீமியம் தர கார் மாடலாக பலேனோ இருக்கின்றது. இந்த காரில் சிறந்த பயண அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளும் விதமாக மேக்ஃபெர்சன் ஸ்ரட் சஸ்பென்ஷனே முன் பக்கத்தில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. தொடர்ந்து பின் பக்கதில் டோரிசன் பீம் சஸ்பென்ஷன் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதன் ஆரம்ப விலை ரூ. 6.56 லட்சம் ஆகும்.

Maruti suzuki swift

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift): பலேனோ காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் சஸ்பென்ஷன் செட்-அப்பே ஸ்விஃப்ட் காரிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதன் ஆரம்ப விலை ரூ. 6.7 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த கார் ஒரு லிட்டருக்கு 23 கிமீ வரையில் மைலேஜ் தரும். நாட்டில் அதிகம் விற்பனையாகும் ஹேட்ச்பேக் கார்களில் இதுவும் ஒன்றாகும்.

Hyundai grand i10 nios

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் (Hyundai Grand i10 NIOS): இந்தியாவில் மலிவு விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் மிக சிறந்த சஸ்பென்ஷன் செட்-அப் கொண்ட கார்களில் இதுவும் ஒன்றாகும். மேக்பெர்சன் ஸ்ட்ரட் சஸ்பென்ஷன் முன் பக்கத்திலும், டோரிசன் பீம் ஆக்சில் பின் பக்கத்திலும் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. மிக சிறந்த மற்றும் ஸ்மூத்தான ரைடிங் அனுபவங்கை இது வழங்கும். இந்த காரின் ஆரம்ப விலை ரூ. 5.42 லட்சம் ஆகும்.

Tata nexon

டாடா நெக்ஸான் (Tata Nexon): இந்தியாவின் அதிக பாதுகாப்பு வசதிக் கொண்ட கார் மடாலாக நெக்ஸான் இருக்கின்றது. இது மிக சிறந்த பயண அனுபவத்தை வழங்கக் கூடிய காரும்கூட என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரிலும் மேக்பெர்சன் ஸ்ட்ரட் உடன் கூடிய காயில் ஸ்பிரிங்கும், ட்விஸ் பீம் உடன் கூடிய காயில் ஸ்பிரிங்கும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த சஸ்பென்ஷன் உயர் செயல்திறன் கொண்டது. இதன் ஆரம்ப விலை ரூ.7.60 லட்சம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நாட்டின் கரடு-முரடான சாலையை அசால்ட் செய்யும் வசதிக் கொண்ட சஸ்பென்ஷன் செட்-அப் உடன் கிடைக்கும் 7 மலிவு விலை கார் மாடல்களையே மேலே பார்த்தோம். மேலே பார்த்த அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இவற்றில் பயணிக்கும்போது பெரிய அளவில் அலுங்கல், குலுங்கல்கள் தெரியாது. நல்ல பயண அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 10, 2023, 12:10 [IST]
English summary
Most affordable best suspension cars in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X